இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். உபாகமம் 28:1
WWW.TamilChristian.Tk

Sri Lanka Christian

ஊழியம் செய்யலாமா?
04 Jul 2009 






உலகத்தின் மக்கள்
தங்கள் தங்கள் கடமைகளில் ஈடுபடுகின்றனர். தங்களுடைய பொழுது போக்காக பலவற்றைக் கைக்கொண்டு
அவற்றிலே திருப்தியடைகின்றனர். ஆயினும் தேவனுடைய பிள்ளைகளான நாம் தேவனுக்கேற்றவர்களாக
ஜீவிப்பது அவசியம். அவ்விதமான ஜீவியமானது வெறுமனே உல்லாசமாய் அமைந்துவிடப்போவதில்லை.
தேவனுக்கேற்ற வாழ்வானது ஜீவியத்தை ஆதாயப்படுத்திக்கொள்ளும் ஒன்றாக இல்லாததினால் அநேகர்
தேவனுக்கேற்ற வாழ்வை நடத்தாது உலகம் தரும் சந்தோஷங்களை அடைவதற்கு உலக வாழ்க்கை வாழ
முயற்சிக்கின்றனர். உலகத்தின் ஆசைகள் வாழ்வில் முட்டுக்கட்டையாகவும் கிறிஸ்துவுக்கு
எதிராக பணிபுரியாது இருக்கவும் முட்டுக்கட்டையாக உள்ளதா
? தொடருங்கள்..





அனேகருடைய எண்ணங்கள்
தேவனுக்கு பிரியமான ஊழியம் செய்யவேண்டும் என்பதை குறித்து உள்ளது. ஆனால் அநேகர் தாம்
தேவனுக்கு எவ்விதமான காரியத்தை செய்வது என அறியாது உள்ளனர். அவர்கள் தேவனுக்கு ஏற்ற
காரியத்தை செய்யும்படிக்கு தங்களை ஆயத்தம் செய்யும்படிக்கு தேவனை நோக்கிப் பார்க்க
வேண்டும். முதலில் தேவனுடைய பணியானது உலகிற்குரியதல்ல. உலகம் செய்கிற பிரகாரம் தேவனுக்கு
ஊழியம் செய்திட முடியாது. உலக மதங்கள் செய்கிற பிரகாரமாக அவருக்கு ஊழியம் செய்திட அழைக்கவில்லை.
மாறாக அவருடைய பரலோக இராஜ்ஜியத்தை கட்டும்படியாகவே எங்களை ஊழியம் செய்ய அழைக்கின்றார்.
ஏனெனில் தேவனுடைய இராஜ்யமானது பரலோகத்தை நோக்காகக் கொண்டமைந்துள்ளது. அது இழந்து போகின்ற
ஆத்துமாக்களை இரட்சிக்கும் ஊழியப்பணியாக அமைந்துள்ளது. அடுத்து அவர் தம்முடைய பணிக்கு
ஊழியர்களை அழைத்துக் கொண்டு இருக்கின்றார். நாம் அதனை தட்டிக்கழிப்பவர்களாக இருந்து
விட முடியாது. அவருடைய அறுவடையிலே நாங்கள் பங்குபெறும் பொருட்டு எங்களை அழைக்கின்றார்.
அவருடைய பணியில் ஈடுபடுவதானது அவருடனே கூட இருப்பதற்கு எங்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்
தருகின்றது. மிகப்பெரிய அறுவடைக்கு இன்னும் பலர் தேவைப்படுகின்றனர். அவருடைய பணியில்
இணைந்து கொள்ள இன்னும் அநேகமநேகம் பேர் அவருக்குத் தேவை. அவருக்கென ஊழியம் செய்ய இன்னும
பலர் வேண்டப்படுகின்றனர் என்பதை அறிவாயோ
? அடுத்து தேவனுடைய பணியானது உலக ஆதாயங்களை நோக்கமாகக்
கொண்டதல்ல. அது பரலோகத்தின் ஐசுவரியங்களை நமக்குத் தரும் ஒன்றாக அமைந்துள்ளது.





கர்த்தருடைய ஊழியமானது
இலகுவானதல்ல. உபத்திரவம் நிறைந்தது. ஓவ்வொரு ஊழியப்பாதையும் சோதனைக்கான பாதையாக அமைகின்றது.
அது உள்ளத்திற்கும் உடலிற்கும் மிகவும் சோர்வை உண்டுபண்ணி ஊழியப்பாதையினின்று எம்மை
வழிவிலக செய்திடும். ஆயினும் அதிலே நிலைத்திருக்கும் போது எல்லா உபத்திரவங்களையும்
தள்ளிவிட்டு இயேசுவுக்காக ஓடும் போது நாம் வெற்றியடைய முடியும். தேவன் எல்லாவித வேதனைகளினையும்
தம்முடைய வருகையின் போது நீக்கிப் போடுவார். ஏனெனில் இயேசுவின் நிமித்தம் உலகம் அவரை
பகைத்தது போல இயேசுவின் பணியாட்களையும் உலகம் பகைக்கும் என வேதாகமத்தில் இயேசு கூறிய
காரியங்களைக் காணலாம். ஆனாலும் உயிர்த்த கிறிஸ்துவின் கிருபை நிலைத்திருக்கும். தேவனுக்காக
ஊழியம் செய்வதானது உலகப்பிரகாரமாக முட்டாள்தனமானதாக கணிக்கப்படும். ஆனால் தேவனுடைய
இராஜ்ஜியத்தில் மேன்மையான பணியாகும். ஏனெனில் தேவனுடைய ஊழிய ஞானமானது ஞானிகளுக்கு கொடுக்கப்படாமல்
பாலகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என இயேசுக்கிறிஸ்து கூறியுள்ளார். அவருடைய சீடர்கள்
ஊழியம் செய்து பலத்த அற்புதங்களைக் கண்டு அதை இயேசுவுக்கு கூறும் போது இயேசு அவ்வாறே
கூறினார். அடுத்து ஊதியத்திற்காக தேவனுடைய ஊழியத்தை செய்திட முடியாது. எனினும் இயேசுவானவர்
ஊழியத்திற்கான பரிசை தம்முடைய இராச்சியத்தில் அளிப்பார். பரலோகத்தில் அதற்கான வெகுமதியை
நாம் பெற்றுக்கொள்ள முடியும். தேவனுடைய இராச்சியம் புசிப்பும் குடிப்புமல்ல. அங்கு
தேவனுடைய பணிக்காக எமது தியாகங்கள்
, செலவீனங்கள் பெற்றுத் தரப்படும்.





எவ்விதமான ஊழியத்தை
நாம் அவருக்காக செய்வது
? இது உண்மையில் மிகவும் அற்புதமானது. தேவனுக்காக
இதைத்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயமான சில கட்டளைகள் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டபோதிலும்
அதற்கான முறைகள் வேறுபட்டவையாக நாம் தெரிந்து எடுத்துக்கொள்ள முடிகின்றது. அதற்கான
வழிமுறைகள் ஏலவே எங்களுக்கு பெற்றுத் தரப்பட்டிருக்கும். அவை எங்கள் தாலந்துகளாகும்.
எங்களுடைய தாலந்துகளை நாம் தேவனுக்காக உபயோகிப்பதே அவருக்காக நாங்கள் செய்கின்ற செய்யத்தகுந்த
பணியாக உள்ளது. தேவனுக்காக எங்கள் தாலந்து உபயோகிக்கப்படுமாயின் அதுவே தேவனுக்கு செய்யும்
ஊழியமாகும். சிலவேளை ஐந்து தாலந்துகள் இருக்கலாம். குறைந்தது ஒரு தாலந்தையாவது இறைவன்
ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கின்றார் எனலாம். அவ்வித தாலந்து திறமைகளை தேவனுக்காக
பயன்படுத்தும் போது தேவன் அப்போதே அதற்குரிய பலனைத் தருவார். அதன்மூலமாக தொடர்ந்து
மேலும் மேலும் தாலந்துகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும். ஓவ்வொரு தாலந்தும் பாவிக்கப்படும்
போது பெறுமதியானதாகவும் இன்னொரு தாலந்தை ஈட்டித்தரக்கூடியதாகவும் அமைகின்றது. இது எம்மால்
பாவிக்கப்பட வேண்டியதாக அமைகின்றது. தாலந்து என்று குறிப்பாக கூற முடியாத போதும் சிலருக்கு
உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களும் தாலந்தாக உள்ளது. சிலருக்கு தங்களுடைய உடலின் மூலமாக
வெளிப்படுத்தக்கூடிய செயல்கள் தாலந்துகளாய் உள்ளது. இன்னும் அநேக கண்களுக்கு தெரியாத
தாலந்துகள் காணப்படலாம். இவைகளெல்லாம் தேவனுக்காக ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியம்
என்னும் உண்மையும் கற்றுத் தரப்படுகின்றது.





1 கொரிந்தியர் 7:17





தேவன்
அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ
, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே
அவனவன் நடக்கக்கடவன்.


கொடு
03 Jul 2009 




மிகவும்
ஆனந்தமான துள்ளிக்குதித்தான் நம்முடைய குட்டிச் சிறுவன் சுரேஷ். அவனுக்கு அன்று
அவனுடைய மாமா பரிசு ஒன்றை அனுப்பியிருந்தார். மிகவும் அழகான கைக்கடிகாரம்.
அதிலுள்ள பட்டன்களை அழுத்தும் போது அது ஒவ்வொரு வண்ணங்களால் பிரகாசித்தது. அதைக்
கைகளில் அணிந்தவனாய் வீட்டின் எங்கும் சுற்றிக்கொண்டிருந்தான். அவனுடைய தங்கை
அகிலாவுக்கு அதை அழுத்தி பார்க்க ஆசையாக வந்தது. அதை தரும்படி அவள் சுரேஷிடம்
கேட்டாள். அவனோ அதைக் கொடுக்காமல் தன்னிஷ்டம் போல் ஆடிக் கொண்டிருந்தான்.
திடீரென்று அவன் அணிந்திருந்த கடிகாரம் கீழே விழுந்தது. இப்போது அது வேலை
செய்யவில்லை. அவன் தன் தங்கையை பார்த்தான். அவளுக்கும் அதிர்ச்சி. அவன் உடனே
கடிகாரத்தை கரங்களில் ஏந்திக்கொண்டவனாக முழங்கால்படியிட்டான். ஆண்டவரே நீர் இந்த
கடிகாரத்தை மீண்டும் இயங்கச்செய்யும். அப்படி செய்தால் நான் இதை தங்கைக்கு விளையாட
கொடுப்பேன் என ஜெபித்தான். ஜெபித்து முடிக்கவும் அப்பா வந்து கடிகாரத்திலிருந்து
கழன்றிருந்த பட்டறியை பூட்டவும் சரியாக இருந்தது. கடிகாரம் இப்போ வேலைசெய்தது.
அவன் அதை தங்கைக்கும் விளையாட கொடுத்தான்.



மத்தேயு 5:42



உன்னிடத்தில்
கேட்கிறவனுக்குக் கொடு
, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு
முகங்கோணாதே.


சங்கீதம் 8
03 Jul 2009 




எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும்
எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள்
பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும்,
நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,  மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர்
விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்.
மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.  உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு
ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். ஆடுமாடுகளெல்லாவற்றையும்,
காட்டுமிருகங்களையும்,  ஆகாயத்துப் பறவைகளையும்,
சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக்
கீழ்ப்படுத்தினீர். எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு
மேன்மையுள்ளதாயிருக்கிறது!



Psalm 8



O LORD our Lord, how excellent is thy name in
all the earth! Who hast set thy glory above the heavens. Out of the mouth of
babes and sucklings hast thou ordained strength because of thine enemies, that
thou mightest still the enemy and the avenger. When I consider thy heavens, the
work of thy fingers, the moon and the stars, which thou hast ordained; what is
man, that thou art mindful of him? And the son of man, that thou visitest him? For
thou hast made him a little lower than the angels, and hast crowned him with
glory and honor. Thou madest him to have dominion over the works of thy hands;
thou hast put all things under his feet: All sheep and oxen, yea, and the
beasts of the field; the fowl of the air, and the fish of the sea, and
whatsoever passeth through the paths of the seas. O LORD our Lord, how excellent
is thy name in all the earth!


Admin · 3 views · 0 comments
இயேசுக்கிறிஸ்து எவ்வாறு அறியப்படுகின்
01 Jul 2009 




அன்றைய நாட்களில் தீர்க்கதரிசிகளாக கர்த்தருடைய வாயாக காணப்பட்ட
தலைவர்கள் எவ்வாறு இயேசுக்கிறிஸ்துவை தம்முடைய வேதாகம நூல்களில் வெளிப்படுத்தினர் என்பதை
அறிந்துகொள்ளுவதற்கு அவர்களுடைய நூல்கள் மிகவும் ஆதாரமாயிருக்கின்றது. பெரும் தலைவர்களாகவும்
தீர்க்கதரிசிகளாகவும் விளங்கிய ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல், ஓசியா, யோவேல்,
ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா ஆகியோர்
தாங்கள் எழுதிய அல்லது தங்களால் எழுதப்பட்ட நூல்களில் இயேசுக்கிறிஸ்துவை எவ்வாறு வர்ணிக்கின்றனர்
என்பதை மிகவும் சுருக்கமாக காணமுடியும்.



இவ்வாறு எழுதப்பட்ட ஒவ்வொரு விடயமும் ஒவ்வொரு நூலிலும் ஒத்துப்போகும்
தன்மை வாய்ந்துள்ளது பரிசுத்த ஆவியானவரின் கிரியையே ஆகும். ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு
கால கட்டங்களில் வசித்துள்ளனர். ஆயினும் அவர்கள் இயேசுக்கிறிஸ்துவை பற்றி ஒரேவிதமாக
சாட்சியளித்ததும் தீர்க்கதரிசனமாக கூறியதும் ஆச்சரியமளிக்கத்தக்க விடயமாகும்.



மேசியா எனவும் தேவனுடைய மகன் எனவும் அழைக்கப்படுகின்றார். இயேசு
இரட்சகர் என்பதே ஓசியா நூலிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இயேசுக்கிறிஸ்து
நம் பாவத்திற்கு தம்மையே ஒப்புக்கொடுத்தவர் எனவும் ஓசியா நூலானது சுட்டிக்காட்டுகின்றது.
நம்மை மரணத்தினின்று மீட்கின்ற ஒருவராக ஓசியா நூலில் இயேசுக்கிறிஸ்து அறிமுகப்படுத்தப்படுகின்றார்.
எங்களை மனதுருக்கத்துடன் நேசிப்பவர், எங்கள் வியாதிகளைக் குணமாக்குபவர், எங்களுடைய
காயங்களைக் கட்டுபவர். (ஓசியா 11:1, 13:4, 13:14, 11:4, 6:1)



இறுதி நாட்களில் தம்முடைய பரிசுத்த ஆவியை தம்முடைய ஜனத்தின் மத்தியில்
ஊற்றுபவர், உலகிலே தம்முடைய நாட்டை நியாயந்தீர்ப்பவராக காட்டப்படுகின்றார். அவர் எங்களுக்கு
அடைக்கலமானவராகவும் அரணான கோட்டையாகவும் காணப்படுகின்றார் ஆகவே (யோவேல் 2:28,
3:2,12, 3:16)



தாவீதின் வம்சத்தில் வருகின்ற கிறிஸ்துவானவர் விழுந்துபோன தாவீதின்
கூடாரத்தை கட்டுபராக காட்டப்படுகின்றார். சிதறுண்டு போன தமது ஜனங்களை தேசத்தில் திரும்ப
நாட்டுபவர் கிறிஸ்து என்று கூறப்படுகின்றது (ஆமோஸ் 9:1, 9:11-15)       



தேசத்தின் நியாயாதிபதிபதியானவராக இயேசுக்கிறிஸ்து காட்டப்படுகின்றார்.
அவர் தேசத்தை நியாயம் தீர்க்கின்றவராக இருக்கின்றார். அவர் இஸ்ரவேலின் மீட்பர். அவர்
தமது இராஜ்ஜியத்தை ஆள்பவர். அவர் தம்முடைய மக்களுக்காக மீட்பராக வெளிப்படுகின்றவராக
இருந்தபோதிலும் அவர் தம்முடைய இராஜ்ஜியத்தை நிலைநிறுத்துவார். (ஓபதியா 15-16,
17-20, 21)



யோனாவின் நூலின் ஊடாக கிறிஸ்துவானவரின் உயிர்த்தெழுதல் காட்டப்படுகின்றது.
எவ்வாறு யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்தானோ அவ்விதமாக கிறிஸ்துவும் பூமியின்
வயிற்றில் இருப்பார் என வெளிப்படுத்தப்படுகின்றது (யோனா)



யாக்கோபின் தேவன் என்பது அவருடைய நாமமாயிருக்கின்றது. அவர் தேசத்தின்
நியாயாதிபதயாகவும் ஆளப்போகிறவராகவும் இராஜாவாக வரப்போகிறவர். (மீகா4:2, 4:3, 5:2)



எதிரிகளை பழிவாங்குகின்ற ஓர் வைராக்கியமுள்ள தேவனாக இயேசுக்கிறிஸ்து
காணப்படுகின்றார்.  தமக்கு எதிராக கிரியை செய்கின்ற
ஒவ்வொருவரையும் அவர் தம்முடைய நாளில் அவர்கள் மேலாக பழிவாங்குங்கும் வைராக்கியத்தை
காண்பிப்பார் எனலாம். அவருடைய பிள்ளைகள் மேல் கைவைக்கின்ற ஒவ்வொருவர் மேலும் அவருடைய
வைராக்கிய கரமானது கிரியை செய்யும் அதேவேளை அவர்களை பழிவாங்கும்.  (நாகூம்1:2-13)



இரட்சகராகவும் பரிசுத்தராகவும்,  மகிமையால் பூமியை நிரப்புகிறவராகவும் இயேசு காணப்படுகின்றார்.
(ஆபகூக் 3:13, 1:12, 2:14)



நீதிபரராக இருக்கின்றார். இஸ்ரவேலின் இராஜாவாக செயற்படுகின்றார்.
(செப்பனியா 3:5, 3:15)



தம்முடைய ஆலயத்தினது மகிமையை முந்திய நிலைக்கு கொண்டு வருபவராக இயேசுவின்
செயற்பாடானது காணப்படுகின்றது. எவ்வாறு அவருடைய ஆலயமானது பூமியில் மகிமையால் நிறைந்து
காணப்பட்டதோ அவ்விதமாக தமது ஆலயத்தை மீண்டும் உலகில் நிலைநிறுத்துவார். உலகிலுள்ள பூமியின்
இராஜ்ஜியங்களை முடிவிற்கு கொண்டுவருபவராக இருப்பவர் இயேசுக்கிறிஸ்துவே என அறிவிக்கப்படுகின்றது.
(ஆகாய்)



கிறிஸ்துவின் முதலாம் வருகையானது தீர்க்கதரிசனமாக அறிவிக்கப்படுவது
போல அவரது இரண்டாம் வருகையும் காண்பிக்கப்படுகின்றது. இயேசு ஊழியக்காரன் எனவும் இராஜா
என்றும் தேவ மனிதன் என்றும் தேவனுடைய தூதன் எனவும் குறிப்பிடப்படுகின்றார். அவர் நீதியின்
கிளையாக காண்பிக்கப்படுகின்றார்.; அவர் சிலுவையில் அறையப்பட்டவர் என தீர்க்கதரிசனமாக
கூறப்படுகின்ற அதே நேரத்தில் இரட்சிக்க வரப்போகும் தாழ்மையுள்ள இராஜா எனவும் தம்முடைய
ஜனங்களை மேய்கின்ற மேய்ப்பர் ஆகவும் வரப்போகும் இராஜாவாகவும் காண்பிக்கப்படுகின்றார்.
(சகரியா 3:1, 3:8, 3:9, 12:10, 9:9-10, 13:7,14)



நியாயந்தீர்ப்பவராகவும் சாட்சியானவராகவும் உடன்படிக்கையின் தூதனாகவும்
காட்டப்படுகின்றார். (மல்கியா 3:5, 3:1)



வரப்போகும் மேசியா என காட்டுகின்றமையும் அவரது வருகையையும் குறித்து
காணலாம். மேசிய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுதலும் காண்பிக்கப்படுகின்றது. இயேசு இஸ்ரவேலை
மீட்பவராக காண்பிக்கப்படுகின்றார். (ஏசாயா 7:1-12:6, 24:1-27:13, 32:1-20,
49:1-57:21)



நித்திய ஜீவ ஊற்று என கிறிஸ்து காண்பிக்கப்படுவதோடு அவர் நீதியின்
கர்த்தர் எனவும் புது உடன்படிக்கையை கொண்டுவருபவர் எனவும் நாம் அறிய முடிகின்றது.
(எரேமியா 2:13, 23:5, 31:31-34)



ஆட்சி செய்ய அதிகாரம் பெற்ற இராஜாவாகவும் உண்மையான மேய்ப்பன் எனவும்
காண்பிக்கப்படுவதைக் காணலாம். (எசேக்கியேல் 17:23-24, 21:26-27, 34:11-31)



வரப்போகும் மேசியா எனவும் அவரது  இரண்டாம் வருகை குறித்தும் கூறப்படுகின்றது (தானியேல்)



இவ்வாறாக தீர்க்கதிரிசிகள் தமது நூல்களின் ஊடாக கிறிஸ்துவானவரை அறிவிக்கும்
முன்கூட்டிய பணியை செய்து தம்முடைய மக்களுக்கான எதிர்காலத்தை கிறிஸ்துவை நோக்கியவாறு
செல்லும் திட்டத்தை காண்பிக்கின்றனர். இது கிறிஸ்து உலகிற்கு வரவேண்டிய அவசியத்தையும்
அவரது உலகப் பணிகளையும் ஆயத்தமாக எடுத்து காண்பிக்க அன்றைய நாட்களில் வாழ்ந்த யூதர்களுக்கு
மிகவும் அவசியமாக அமைந்தனவாக காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


தேவனிடம் பதில் கிடைக்குமா?
30 Jun 2009 




எம் தேவனிடம் நாம் கேட்கும் காரியங்களை அவர் எமக்குத் தந்தருளுவார்
என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. ஏனெனில் பிதாவின் நாமம் மகிமைப்படும் படியாக நாங்கள்
இயேசுக்கிறிஸ்துவின் மூலமாக கேட்கின்ற காரியங்களை அவர் எமக்குத் தந்தருளுவார். வேதாகமம்
அதை தெளிவாகக் கூறுகின்றது. கிறிஸ்து நாம் தேவையானது என எண்ணுபவற்றை எமக்கு ஏற்கனவே
தருவதற்கு வல்லமையுடையவர். நாம் எண்ணுவதற்கும் நினைப்பதற்கும் மேலாக அவர் எங்களுடைய
தேவைகளை சந்திக்க வல்லவராயிருக்கின்றார்.



ஆயினும் நாம் சிலவேளைகளில் கேட்கின்ற காரியங்களுக்கான செயல்களை அல்லது
பதில்களை நாம் பெற்றுக்கொள்ளாது விடுகின்றோம். அதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றது.
அக்காரணங்களில் ஒருசிலவற்றை கீழுள்ளவாறு விளங்கிக்கொள்ளத்தக்க விதத்தில் காணலாம்.



1    தொடர்ச்சியான ஜெபம் இல்லாமை



ஒரு நியாயாதிபதியிடம் ஒரு விதவை தனக்கு நியாயம் கோரி விண்ணப்பித்தாள்.
அந்த நியாயாதிபதிக்கோ அவளுடைய விண்ணப்பத்திற்குரிய காரியங்களை செய்வதற்கு விருப்பமில்லாதவனாய்
அக்காரியங்களைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தான். ஆயினும் அந்த ஏழை விதவையானவள் தொடர்ந்து
அவனிடம் அக்காரியத்தை நியாயம் விசாரிக்கும்படி தினமும் வற்புறுத்தி வந்ததால் ஒருநாள்
அவனும் அக்காரியத்தை நியாயம் விசாரித்ததோடு அவ்விதவைக்கு சரியான நஷ்டபெறுமதி சேரவேண்டும்
எனவும் உத்தரவிட்டு அவ்விதவையின் விண்ணப்பத்தை கேட்டருளினான். அவ்வாறாக அவ்விதவையினுடைய
துயரங்கள் நீக்கப்பட்டது.



இவ்விதமாக இறைவனும் எங்களுடைய பிரச்சினைகளை கேட்பது அவருடைய சித்தமாயிருக்கின்றது.
எனினும் இவ்வாறான ஒரு நிலையை நாம் அறிந்திருப்போமானால் தொடர்ந்து எம் பிரச்சினைகளை
இறைவனுடைய பாதங்களுக்கு கொண்டு செல்லுவோம். உண்மையில் எங்களுடைய பிரச்சினைகளை குறித்து
எவ்விதமான பாரத்தோடு நாம் ஜெபிக்கின்றோமோ அவ்வதமாகவே இறைவனது பதிலும் அமைந்திருக்கும்.
ஆகவே எங்களது ஜெபமானது இறைவணன்டை கொண்டு செல்லப்பட்டாலும் நாம் தொடர்ச்சியாக அதைக்குறித்து
ஜெபிக்காத போது சிலவேளைகளில் அதற்குரிய பலனை பெற்றுக்கொள்ள அதிக நாட்கள் எடுக்கவும்
கூடும். தொடர்ந்தேர்ச்சியாக இடைவிடாது ஜெபிக்கும் போது உத்தரவானது விரைவாக வருகின்றது.
அதனால் தான் இயேசுவும் இடைவிடாமல் ஜெபியுங்கள் எனக் கூறியுள்ளார் என விளங்கிக் கொள்ள
முடிகின்றது.



2    இறைவன் பதில்கொடுத்தார்.
ஆயினும் சாத்தான் அப்பதிலை பெறாது தடைசெய்கின்றான்.



தானியேல் என்னும் மனிதன் தன்னுடைய விண்ணப்பத்தை தேவனிடம் ஏறெடுத்து
பல நாட்களாக அதற்குரிய பதிலை எதிர்பார்த்தும் பெற்றுக்கொள்ளவில்லை. பதிலை பெற்றுக்கொள்ள
மூன்று கிழமைகள் எடுத்தது. அன்று தேவனுடைய தூதன் பதிலோடு கூறிய காரியத்தை காணலாம்.
அப்பதிலை கொண்டுவரும் தேவனுடைய தூதனை தேவனுக்கு எதிராக கிரியை செய்யும் சாத்தானின்
தூதர்களில் ஒருவன் இருபத்தொரு நாட்களாக தடுத்து நிறுத்தியிருந்ததாக தேவதூதனால் தானியேலுக்கு
அறிவிக்கப்படுகின்றது.



ஆகவே தேவனால் அனுப்பப்பட்ட பதிலானது சாத்தானால் தடுக்கப்படுவதின்
காரணமாக எமது விண்ணப்பத்திற்கான பதில் கிடைக்க தாமதமாகின்றது. நாம் ஜெபித்த காரியங்களை
குறித்து அறிந்த இறைவன் அதற்கான பதிலை எமக்கு கொடுக்கின்றார். அவர் சீக்கிரமே அதற்கான
பதிலை எமக்கு கொடுக்கின்றார். ஆயினும் அப்பதிலை நாம் பெற்றுக்கொள்ள தாமதமாகின்றது.
இதற்கு காரணமாக சாத்தானுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றது. இதற்கு நாம் செய்யவேண்டியது
சாத்தானை எதிர்த்து போரிட வேண்டியதாகும். சாத்தானுக்கு பயப்படவேண்டிய அவசியம் தேவையில்லை.
ஏனெனில் இயேசுவானவர் தமது சிலுவையில் சாத்தானுக்கு தோல்வியை ஏற்படுத்தி விட்டார். நாம்
சாத்தானை தோல்விக்குள்ளாக முடியும். அவ்விதம் செய்யும் போது தேவனுடைய பதில் சீக்கிரம்
கிடைக்கும் எனலாம்.



3    சரியான ஆயத்தமும் அர்ப்பணிப்பும்
விசுவாசமும் அவசியம்



ஆதாமின் குமாரர்கள் இருவர் தேவனுக்கு காணிக்கை செலுத்த சென்றனர்.
ஒருவன் ஆயத்தத்தோடு சென்றான். இன்னொருவன் சரியான ஆயத்தமில்லாது சென்றான். இருவரும்
பலியிட்டனர். ஆயத்தத்தோடு சென்றவனின் பலி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவனின் பலி ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இங்கு இவர்களுடைய பலியை பற்றி வேதாகமம் கூறும்போது ஒருவன் தன்னுடைய விளைச்சலின் சிறு
பகுதியை அளிக்கின்றான். மற்றவன் தன்னுடைய மந்தையில் தெரிவுசெய்து, கொழுமையானதை கண்டு,
தலையீற்றை கண்டு முதன்மையானதை காணிக்கையாய் செலுத்துகின்றான். 



எமது விண்ணப்பங்களும் தேவனுக்கு பிரியமான பலியாக இருக்க வேண்டும்.
தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ற வண்ணம் எங்களது ஜெபங்கள் காணப்படுமாயின் தேவன் அதற்கு
பதிலளிக்க ஆயத்தமுள்ளவராயிருக்கின்றார். மேலோட்டமாக அரையும் குறையுமாக ஜெபிப்பதை விட்டு
பயபக்தியுடன், ஆழ்ந்த ஞானத்துடன், உள்ளான இருதயத்துடன், பூரண விசுவாசத்துடன், அர்ப்பணிப்புடன்
வேண்டுதல் செய்யும் போது அதற்கான பதிலை நிச்சயம் பெற்றுக்கொள்ள முடிகின்றது.



 



சங்கீதம் 22:11



என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும்,
நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?


விசுவாசமாயிருக்கிறவன்
29 Jun 2009 
இயேசுக்கிறிஸ்துவே எங்கள் விசுவாசத்தின் பிரதான நபரானவராக இருக்கின்றார். ஏன் நாம் இயேசுவை விசுவாசிக்க வேண்டும்? இயேசு எங்களுக்காக பிதாவினால் அனுப்பப்பட்ட தேவனுடைய குமாரன். அவரை ஏற்றுக்கொள்கின்றவர்களெல்லாம் தேவனுடைய புத்திரராகின்ற சுவீகாரத்தைப் பெற்றுக்கொள்கின்றார்கள்.  எவ்வாறெனில் இயேசுவானவர் தேவனுடைய குமாரன் என ஏற்றுக்கொள்ளும் எல்லாரையும் இயேசுக்கிறிஸ்து ஏற்றுக்கொள்கின்றார். இயேசுக்கிறிஸ்து எவர்களையெல்லாம் ஏற்றுக்கொள்கின்றாரோ அவர்களெல்லாரும் பிதாவின் புத்திரர்களாய் இருக்கின்றார்கள். கிறிஸ்து தாம் உலகிற்கு வந்தபோதும் உலகத்தை நியாயந்தீர்ப்பதற்கு வரவில்லை. மாறாக உலகத்திற்கு இரட்சிப்பை அருளும்படியாக வந்தார். இந்த இரட்சிப்பானது உலகத்தில் உண்டாயிருக்கின்றது. நீண்டகாலமாக இந்த இரட்சிப்பானது இயேசுவை ஏற்றுக்கொள்ளுகின்றவர்களுக்குள்ளாக தேவனுடைய நித்தியத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது. அவரை ஏற்றுக்கொள்வதற்கு நாம் பெரிய தியாகம் ஒன்றும் செய்யவேண்டுவதில்லை. மாறாக அவர்பேரில் விசுவாசம் கொள்வதே அவரை ஏற்றுக்கொள்வதற்கான ஒரே காரியம். இதை யாருக்கும் சொல்லவேண்டுவதில்லை. மாறாக உள்ளத்தில் நாம் அவரை ஏற்றுக்கொள்ள முடியும். அவர் எம் உள்ளத்திற்குள்ளாக வரும் போது பரிசுத்த ஆவியானவர் எமக்குத் துணையாக நின்று எங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்துவார். எங்கள் பாவங்களை காண்பிப்பார். எங்கள் வாழ்வின் அசுத்தங்களை அகற்றி பரிசுத்தத்தை ஏற்படுத்திடுவார். நாம் பரிசுத்தம் அடைவோம். எங்கள் பாவங்களிலிருந்து எங்களால் விடுதலை அடைய முடியும். மந்திர சக்திகள், தீய ஆவிகள், பில்லி சூனியங்கள் எம்மை ஒன்றும் செய்யமுடியாது. ஏனெனில் நாம் ஜீவனுள்ள தேவனுக்கு பிள்ளைகளாக மாற்றப்பட்டிருக்கின்றோம். பிசாசு இத்தனை காலமும் எங்கள் கண்களை கட்டியிருந்தான். இன்று நாங்கள் பூரண விடுதலையை அனுபவிக்கின்றோம் என்று சத்தமிட முடியும். ஏனெனில் இயேசுவின் மேலாக நாம் விசுவாசம் கொள்ளும் போது எங்கள் ஜீவியமானது தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு ஏற்ற விதமாக ஆயத்தமாக்கப்படுகின்றது. புதிய ஜீவியமானது எங்களுக்குள்ளாக ஆரம்பிக்கப்படுகின்றது. அப்புதிய ஜீவியத்தின் காரணமாக பரலோக இராஜ்ஜியத்திற்கு ஏற்றவர்களாகவும் தேவனுக்கு ஏற்ற பிள்ளைகளாகவும் நாம் மாற்றப்படுகின்றோம். இன்னும் இந்த உலகத்தில் என்ன செய்ய வேண்டிக்கிடக்கின்றது. கிறிஸ்துவே தேவனை அடைவதற்கான பிரதான வாசல். அவர் நல்ல மேய்ப்பனாக இருக்கின்றார். அவருடைய கிருபையின் காலம் சீக்கிரம் முடிவடையப் போகின்றது. அக்காலம் முடிவடைவதற்கு முன்பாக அவரை அண்டிக்கொள்ளுகின்ற யாவரும் பாக்கியவான்களாயிருப்பார்கள் என வேதாகமம் கூறுகின்றது. எவ்வளவு சீக்கிரமாக இயேசுவை உங்கள் வாழ்க்கைக்கு அழைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அவர் மேலாக உங்கள் விசுவாசத்தை வைத்திடுங்கள். அப்போது நீங்கள் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க முடிவதோடு எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கையை பெற்றுக்கொள்ளவும் முடியும்.


யோவான் 12:44



அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.


விண்ணப்பத்தின் பலன்
27 Jun 2009 
எங்களுடைய விண்ணப்பங்களின் சத்தம் எப்போத

Miracle service
26 Jun 2009 
26,27,28 june 2009
Friday, saturday, sunday.
3.00 - 5.00 p.m
Today and tomorrow
At viharamahadevi park, townhall. Colombo 7. SriLANKA.
By JESUS never fails.
Come and get blessing from God.
Uyiron · 1 view · 0 comments
தேவ பயம்
26 Jun 2009 
கர்த்தருக்கு பயந்திருக்கும் ஒவ்வொருவருடைய வாழ்விலும்
கர்த்தர் கிரியை செய்கின்றார். அவர்கள் ஒவ்வொருவருடைய தலைமுறையையும் அவர் கண்காணிக்கின்றார்.
அவர் ஒவ்வொருவர் மேலாகவும் தம்முடைய கரத்தை நீட்டுகின்றார். அவருடைய செய்கைகளுக்கு
முடிவேயில்லை. அவருடைய இரக்கங்களுக்கு எல்லேயேயில்லை. ஆகையினால் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு
தம்முடைய அன்பை வெளிப்படுத்துகின்றார். அவர் தாம் படைத்த மனிதனை மிகவும் அன்பு கொண்டவராகவே
நோக்குகின்றார். அவர் மனிதன் மேல் பிரியமாயிருக்கின்றார். ஆதலால் அவர் மனிதன் பேரில்
மகிழ்ச்சியடைகின்றார். ஒவ்வொரு பொழுதும் மனிதன் மேலாக கரிசனை வைக்கக்கூடிய ஒருவராக
தேவன் மாத்திரமே இருக்கின்றார். உதவிக்காக வருகின்ற மனிதர்கள் எம்மை கைவிட்டு போகலாம்.
ஆனாலும் தேவனாகிய கர்த்தர் எம்மை ஒருபோதும் தவிக்க விடமாட்டார். அவருடைய உன்னதங்களில்
அவர் எங்களை உட்காரச்செய்யும் பொருட்டு எங்கள் மேல் இரக்கம் காண்பிக்கின்றவராயி;ருக்கின்றார்.
தேவனை நோக்கி பார்த்து அவருக்கு பயப்படவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். அப்போது
அவர் தம்முடைய இரக்கங்களின் காரணத்தினால் எங்களை காத்துக்கொள்வார். நாம் அவருக்கு பயப்படாது
செல்லும் போது அவர் எங்களிடமிருந்து தூரமாகின்றார். அதினிமித்தமான உலகத் துயரங்களுக்குள்ளான
நாங்கள் மூழ்க நேரிடுகின்றது. தொல்லைகள், கவலைகள், கஸ்டங்கள் எங்கள் வாழ்க்கையை ஊடறுக்கின்றது.
ஆயினும் அவைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு இயேசுக்கிறிஸ்து தம்மையே எங்களுக்கு பலியாக்கினார்.
ஆகவே அவருக்கு நாம் பயப்படுகின்ற போது அவருடைய கட்டளைகளுக்கு இணங்கி வாழ்கின்ற போது
அவருக்கு பிரியமானவைகளை செய்கின்ற போது அவர் எங்கள் மேல் இரக்கம் காட்டுகின்றார். இவ்வாறான
இரக்கமுள்ள தேவனை இதற்கு முதல் எப்போவாவாது நாம் சந்தித்திருக்கின்றோமா? ஆகவே அவருடைய
இரக்கங்களை பெற்றுக்கொண்டு நித்திய மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ள அவருக்கு பயப்படுதல்
எத்தனை மேன்மையுள்ள காரியமாக காணப்படுகின்றது. அது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கின்ற
காரியமாக இருக்கின்றது. அவர் தம்மேல் பயந்தவர்களுக்கு இரக்கம் காட்டுவது போல அவர்களது
சந்ததியாருக்கும் தமது இரக்கத்தை காண்பிக்க வல்லவராயிருக்கின்றார். அதினிமித்தமான அவர்
மேல் நாம் பயமுள்ளவர்களாக எங்கள் வாழ்க்கையில் நன்மை செய்ய முயல வேண்டும். அப்போது
அவருடைய இரக்கங்களுக்கு நாம் சொந்தங்கொண்டாட முடியும். அவருடைய எல்லையில்லா இரக்கங்களைப்
பெற்றுக் கொள்ள முடியும் என்பது நிச்சயமே.


லூக்கா 1:50 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத்
தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.


Admin · 4 views · Leave a comment
எபிரேயர் 4:9-16
26 Jun 2009 




ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம்
இனி வருகிறதாயிருக்கிறது.ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய
கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். ஆகையால்,
அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு,
நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம். தேவனுடைய வார்த்தையானது
ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும்,
ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும்,
இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அவருடைய பார்வைக்கு
மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது,
அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன
தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின
அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப்
பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும்,
பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப்
பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே
சேரக்கடவோம்.



 



Hebrew 4:9-16



There remaineth therefore a rest to the
people of God.  For he that is entered
into his rest, he also hath ceased from his own works, as God  did from his. Let us labour therefore to
enter into that rest, lest any man fall after the same example of unbelief. For
the word of God  is quick, and powerful,
and sharper than any twoedged sword, piercing even to the dividing asunder of
soul and spirit, and of the joints and marrow, and  is a discerner of the thoughts and intents of
the heart.  Neither is there any creature
that is not manifest in his sight: but all things  are naked and opened unto the eyes of him
with whom we have to do. Seeing then that we have a great high priest, that is
passed into the heavens, Jesus the Son of God, let us hold fast  our profession. For we have not an high
priest which cannot be touched with the feeling of our infirmities; but was in
all points tempted like as  we are, yet
without sin. Let us therefore come boldly unto the throne of grace that we may
obtain mercy, and find grace to help in time of need.



 


Admin · 1 view · 0 comments
பிரகாசிக்கும் மின்னல்
25 Jun 2009 


கிறிஸ்துவானவரின் வருகையானது அதிசீக்கிரத்தில் இருப்பது போலவே
அவருடைய நாளானது நிச்சயம் நிகழும் என வேதாகமம் தெளிவாக அறிவிக்கின்றது. ஏனெனில் கிறிஸ்துவானாவர்
இராஜாவாக வரப்போகும் நாளை காணுகின்ற கண்கள் அதைக் காணும்போது தங்கள் குற்றங்களை குறித்து
மனஸ்தாபப்படவேண்டியதாயிருக்கும். தாங்கள் செய்த அக்கிரமங்களுக்குத் தக்க பலனை அடைவதற்காக
அந் நாள் நியமிக்கப்பட்டிருக்கின்றது. அவருடைய வருகையின் நாளை குறித்துச் சொல்லும்
திராணி மனிதர்களுக்கு இன்னும் தரப்படவில்லை. மனிதர்கள் அறியாத நாளில் கிறிஸ்துவானவர்
வருவார். அவர் நிச்சயம் தமது நியாயத்தீர்ப்பை மனிதர்கள் மேல் வெளிப்படுத்துவார். அவரது
நாளின் ஆரம்பம் அல்லது முடிவு மிகவும் சீக்கிரம் நிகழப்போகின்றது. அவருடைய வருகையின்
நாளை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் எமக்கு கிறிஸ்துவின் மேலான நம்பிக்கை மற்றும்
விசுவாசமானது மிகவும் ஆழமாய் காணப்படவேண்டியதாய் உள்ளது. லூக்கா 17:24



“மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல
மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்”


சுதந்தரவாளி
24 Jun 2009 

தேவன் தம்முடைய செய்தியை மக்களுக்கு அறிவிக்கும்படியாக தீர்க்கர்களை
தெரிந்தெடுத்தார். அவர்கள் அவருடைய செய்தியை அறிவித்து வந்தார்கள். இவ்வாறு முந்திய
நாட்களில் இறைவனது செய்தியை மக்கள் இவ்வாறான தீர்க்கதரிசிகளினூடாக பெற்றுக்கொண்டு இறைவனது
சித்தத்தை அறிந்து கொண்டார்கள். இவ்வாறு தேவனுடைய வார்த்தையானது மக்களுக்கு தேவனுடைய
தீர்க்கர்களால் அறிவிக்கப்பட்டு வந்தது. அவர்கள் மக்களுக்கு எச்சரிப்புக்களை கொடுத்தனர்.
தேவனுடைய வார்த்தைகளை அதிகாரத்தோடு அறிவித்தனர். தேவனுடைய நியாயத்தீர்ப்புக்களை வெளிப்படுத்தினர்.
மனந்திரும்பும் படியான செய்திகள் கொடுக்கப்பட்டது. தேவனுடைய கரத்தின் செயற்பாடுகள்
அவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. மக்களுக்கு தேவனுடைய செய்தி கிடைக்கும் போதெல்லாம்
மக்கள் பாவத்தில் கிடந்தார்கள். அவர்கள் தங்கள் தேவனை மறந்திருக்கும் போதெல்லாம் தேவன்
அவர்களை எச்சரித்தார். அவர்கள் தங்கள் குற்றங்களை பாவங்களை விட்டுவிட வேண்டும் என தேவன்
தமது தீர்க்கதரிசிகளினூடாக எச்சரிக்கை விடுத்தார். சிலவேளைகளில் மக்கள் தங்கள் பாவங்கை
அறிக்கையிட்டு மன்நதிரும்பிய போதும் பலவேளைகளில் தேவனுடைய வார்த்தைகளை மக்கள் ஏற்றுக்கொள்ள
தயக்கம் காட்டினார்கள். இன்னும் பலர் புறக்கணித்தார்கள். ஆயினும் மக்கள் மேலான தேவனுடைய
அன்பு அவர்களை தேவன் பக்கமாக சார்ந்து கொள்ளச் செய்ய இன்னுமதிகமதிகமான தீர்க்கர்கள்
பயன்படுத்தப்பட்டனர். முற்றிலுமாக தேவனுடைய வார்த்தைகளை புறக்கணித்த மக்கள் மீது அழிவுகள்
ஏற்பட்டது. முற்றும் தேவனை மறந்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள். அவர்களுடைய ஆஸ்திகள்
அழிக்கப்பட்டன. அவர்களுடைய சந்ததி ஏனைய தேசங்களுக்கு சிதறடிக்கப்பட்டது. இயற்கை அழிவுகள்
மூலமாகவும் தேவன் அவர்களை உலகினின்று நீக்கினார். இவ்வாறாக தேவனுடைய செய்தியின் எச்சரிப்புக்கள்
அவர்கள் மேலாக கிரியை செய்தது. இவ்வாறு தேவனுடைய செய்தியை பெற்றுக்கொண்டும் அவருக்கு
விரோதமாக கிரியை செய்த மக்களுக்கு மேலும் தண்டனைகள் இறைவனால் வழங்கப்பட்டன. மக்கள்
தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயந் தீர்க்கப்பட்டனர். அவர்களுக்கு எச்சரிப்புக்களை
கொடுத்துக்கொண்டிருந்த தீர்க்கதரிசிகள் சிலவேளைகளில் மக்களால் துரத்தப்பட்டார்கள்.



ஆயினும் தேவனுடைய செய்தியை அவர்கலே மக்களுக்கு அறிவிக்கவேண்டிய
கடப்பாடுடையவர்களாய் இருந்தனர். தீர்க்கதரிசிகளின் காலம் முடிவில் இறைவனே மனிதனாய்
குமாரனாக வந்து தம்முடைய செய்தியை மக்களுக்கு அறிவித்தார். மக்கள் அச்செய்தியைக் கேட்டபோதும்
தங்கள் மனக்கவலைகளினிமித்தம் அச்செய்தியை உதறித்தள்ளினார்கள். அவர்களுக்கு அச்செய்தியின்
எச்சரிப்புக்கள் கடுமையாக காணப்பட்டதற்கு அவர்களுடைய பாவங்கள் காரணமாய் அமைந்துள்ளது.
ஏனெனில் உலகத்தின் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை உலகத்தின் தற்காலிக அதிபதியான பிசாசு
மறுதலிக்க வைக்கும் செயல்களில் ஈடுபடுகின்றான். பிசாசு எனும் சாத்தானின் தந்திரமானது
கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை என்பதும் அவர் உயிரோடு எழுப்பப்படவில்லை எனவும்
நம்ப வைப்பதாகும். ஆயினும் கிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ளவர்களாகிய எமக்கு சாத்தானின்
தந்திரங்களை எதிர்த்து நிற்பதற்கு பரிசுத்த ஆவியானவர் எமக்கு தோளோடு தோள் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்.
அதெப்படியெனில் கிறிஸ்துவானவர் இந்த உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களோடு இருப்பேன்
என்று எப்போது வாக்குக் கொடுத்தாரோ அன்றிலிருந்து அவர் எங்களோடு இருக்கின்றார். அவர்
தம்முடைய ஆவியாகிய பரிசுத்த ஆவியானவராய் எம் அருகில் இருக்கின்றார்.





ஏனெனில் பிசாசானவனின் தந்திரங்களிலிருநு;து எம்மை விடுவிக்கத்தக்க
செயலை மேற்கொண்ட இயேசுக்கிறிஸ்துவின் மேலான விசுவாசமே எங்களை தேவனோடு இணைக்கின்றது.
நாம் தேவனோடு இணைவதற்கான ஒரே வழி இயேசு கிறிஸ்துவாய் இருக்கின்றது. இயேசுக்கிறிஸ் எம்மை
தேவனோடு இணைக்கின்ற பாலமாய் இருக்கின்றார். எவ்வாறெனில் இயேசுக் கிறிஸ்துவைக் கண்டவன்
பிதாவைக் காண்கின்றான் என்பதும் பிதாவின் செயல்களையே இயேசு செய்கின்றார் என்பது வேதாகமம்
தெளிவாக கூறுகின்றது. தேவனுடைய செய்தியை கொடுக்கின்றவராக கிறிஸ்து வருவதே உலகத்திற்கு
தேவனால் கிடைத்த இறுதியான வெளிப்பாடாக இருக்கின்றது. அதென்னவென்றால் தேவனுடைய செய்தியை
உலகமானது கிறிஸ்துவின் ஊடாகவே கேட்கின்றது. அவரே உலகத்திற்கு வந்த தேவனுடைய இறுதியான
ஊடகமாக காணப்படுகின்றார். அவராலேயல்லாமல் இரட்சிப்பு இல்லை. அவரே நித்திய எதிர்காலத்தை
வாக்களிக்கின்ற மேசியா. அவர் அன்று அருளிய நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வதே இன்றைய மக்களுக்கு
நாம் கொடுக்கத்தக்க பிரதான செய்தியாகும். தேவன் எவ்வாறு தம்முடைய செய்தியை மக்களுக்கு
அறிவிக்க இயேசுவை தெரிந்து கொண்டாரோ அவ்வாறு இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருடைய செய்திகளுக்கு
தலைசாய்க்கும் போது தேவனுக்கு ஏற்ற செய்தியை கடைபிடிக்கின்ற மக்களாக நாம் மாற்றப்படுகின்றோம்
என்றால் அதில் எந்த சந்தேகமுமில்லை.





எபிரெயர் 1:1-2





பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள்
மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,





இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்.
இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.


கர்த்தருக்குக் காத்திரு
23 Jun 2009 




உலகம் தீமையான காரியங்களை எமக்குள்ளாக திணிக்கமுடியும்.
நாம் உலகின் பாடுகளால் கலங்கிப் போகும் போது எங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையானது
எம்மில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாக காணப்படலாம். இவ்வித ஏமாற்றத்தை பெற்றுக்
கொண்டு அதற்கெதிராக பழிவாங்கும் எண்ணங்கள் சிலவேளைகளில் எம் எண்ணங்களில் ஏற்படுவது
சாதாரண விடயமானாலும் அதன் முடிவோ அபாயமானதாய் அமைந்திருக்கும். அதென்னவென்றால் நாங்கள்
எங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தீமைக்கு நாமும் தீமை செய்ய விரும்பும் போது எம்மில் தேவனுக்கேற்ற
சாயலைக் காணமுடியாது போய்விடும்.



ஏனென்றால் தேவனுடைய வார்த்தையானது தீமைக்கு தீமையை
ஏற்படுத்தவோ செய்யவோ வேண்டாம் என தெளிவுபடுத்துகின்றது. ஏனெனில் எமக்காக கர்த்தர் பதிற்
செய்வார். நாங்கள் வீணாக பழிவாங்கத் துடிக்கும் உள்ளத்தை கர்த்தருடைய கரத்தில் கொடுப்பதற்கு
முயற்சி செய்ய வேண்டும். பழிவாங்கும் எண்ணம் மறையாது தொடர்ந்து உங்களுக்குள்ளாக உருவாகிக்
கொண்டிருக்கலாம். எனினும் தேவனுடைய கரத்தில் அவ்வெண்ணத்தை ஒப்புக்கொடுப்பது சிறந்ததாய்
அமைந்திருக்கும். ஏனெனில் இரட்சிக்கும் தேவனுடைய கரம் எமக்காக கிரியை செய்யும் போது
நாம் பயப்படத் தேவையில்லை. பழிவாங்குவது தேவனுடைய விடயமாய் இருக்கின்றது. கர்த்தர்
எமக்காக யுத்தம் செய்யும் போது நாம் அமைதியாக இருந்தாலே போதுமானதாயிருக்கின்றது.



தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே. கர்த்தருக்குக்
காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார். நீதிமொழிகள் 20:22


Admin · 8 views · Leave a comment
தேவனுடைய ஆசீர்வாதங்கள்
22 Jun 2009 




தேவன் இன்று நீதிமானை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
அவருடைய கண்கள் பரிசுத்தமுள்ள மனிதனை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்றது. அவரே வானத்தையும்
பூமிiயும் உருவாக்கி மனிதனையும் உருவாக்கினவர். இன்று நீதியாய் உள்ள மனிதன் எப்போது
தேவனை தேடி வருவான் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார். வாழ்க்கையில் பரிசுத்தமுள்ள
மனிதனால் தேவனுடைய ஆசீர்வாத்தையும் அவருடைய நீதியையும் பெற முடியும். எவ்வாறு தேவனுடைய
ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வது? செய்யும் வேலைகளில் பரிசுத்தம் காணப்பட வேண்டும். நினைவுகளான
சிந்தனைகள் சரியானவைகளாக இருக்க வேண்டும். அவனுடைய செயலும் சொல்லும் தேவனுக்கு ஏற்ற
விதத்தில் இருக்க வேண்டும். அப்போது தேவன் தம்முடைய கிருபையை அவன் மேல் பொழிகிறார்.



கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடிய
பரிசுத்தமுள்ள மனிதன் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வான் என்பது நிச்சயமானதே



“யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய
பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து,
தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே. அவன் கர்த்தரால்
ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்”. சங்கீதம்
24:3-5


Admin · 9 views · Leave a comment
வெளிப்படுத்தின விசேஷம் 7:9-17
19 Jun 2009 
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்பற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு: ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக. ஆமென், என்றார்கள்.

அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள். சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை. வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார். தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர்யாவையும் துடைப்பார் என்றான்.

After this I beheld, and, lo, a great multitude, which no man could number, of all nations, and kindreds, and people, and tongues, stood before the throne, and before the Lamb, clothed with white robes, and palms in their hands; And cried with a loud voice, saying, Salvation to our God which sitteth upon the throne, and unto the Lamb. And all the angels stood round about the throne, and  about the elders and the four beasts, and fell before the throne on their faces, and worshipped God, Saying, Amen: Blessing, and glory, and wisdom, and thanksgiving, and honour, and power, and might,  be unto our God for ever and ever. Amen. And one of the elders answered, saying unto me, What are these which are arrayed in white robes? and whence came they? And I said unto him, Sir, thou knowest. And he said to me, These are they which came out of great tribulation, and have washed their robes, and made them white in the blood of the Lamb. Therefore are they before the throne of God, and serve him day and night in his temple: and he that sitteth on the throne shall dwell among them. They shall hunger no more, neither thirst any more; neither shall the sun light on them, nor any heat. For the Lamb which is in the midst of the throne shall feed them, and shall lead them unto living fountains of waters: and God shall wipe away all tears from their eyes.
Revelation 7:9-17
Admin · 15 views · 0 comments
வரும் காலத்திற்கான பார்வை
18 Jun 2009 
கர்த்தருடைய ஆவியானவரின் நாளாகிய பெந்தகொஸ்தே நாளின் போது பரிசுத்த ஆவியானவர் சீடர்கள் மத்தியில் கடந்து வந்தார். சீஷர்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட போது அவர்கள் பலவித பாஷைகளில் தேவனை ஸ்தோத்திரம் செய்தார்கள். கர்த்தருடைய பெலன் அவர்கள் மேல் நிழலிட்டதால் அவர்கள் பெலனடைந்தார்கள். அன்றைய நாள் தொடங்கி இன்றைய நாள் வரைக்கும் கர்த்தருடைய நற்செய்தி உலகமெங்கும் பிரசித்தமாகிக் கொண்டிருக்கின்றது. ஏனெனில் இது கடைசிக்காலமாயிருக்கிறது. இவ்விதமான நாளிற்காகவே பலரும் காத்துக் கொண்டிருந்தனர். இவர்களுடைய எதிர்பார்ப்பாகிய இந்த நாளின் போது கர்த்தருடைய ஆவியானவர் எங்களுக்குள்ளாக கடந்து வருவதால் தீர்க்கதரிசனங்களை ஆவியானவர் தந்தருளுகின்றார். சொப்பனங்களை காண்பிக்கின்றார். இது ஒரு புது பெலனாக உருவெடுக்கின்றது. சமூகத்தில் இயேசுவை குறித்து சாட்சி கொடுக்க பரிசுத்த ஆவியானவரின் பெலன் உதவி செய்கின்றது. கிறிஸ்து இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் சிறந்த ஊடகமாக நாம் பரிசுத்த ஆவியானவரால் மாற்றப்படுகின்றோம்.

கடைசி நாள்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இவ்வாறாக தேவனுடைய ஆவியாவரை விசுவாசிப்பதன் மூலமாக அவர் எங்கள் வாழ்வில் பலத்த அற்புதங்களை செய்ய வல்லவராயிருக்கின்றார் என்பதை அறிந்து கொண்டு அவருக்கு இடம் கொடுக்கும் போது புதுவித வல்லமையால் நிரப்பிடுவார். எதிர்காலத்தை குறித்த தீர்க்க தரிசனங்களை சொப்பனங்களை நமக்கு காட்டுவார். இது எவ்வளவு பெரிய பாக்கியம். இதை அடைந்து கொள்ள இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவரது கிருபை உங்கள் மேல் தங்கும்.

இயேசு கிறிஸ்து கூறினார்.: “கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்கதரிசனஞ்சொல்;லுவார்கள். உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள். உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்.” அப்போஸ்தலர் 2:17
தேவன் எம் தந்தை
17 Jun 2009 
எங்கள் தேவனை நாம் அப்பா பிதாவே என்று உரிமையோடு அழைக்க முடியும். ஏனெனில் தேவனை அப்பா என்றழைக்க நாம் பயப்படவேண்டிய தேவையில்லை. அவர் நம்மோடு இருக்கின்றவராகையால் அவரை உரிமையோடு அழைக்க முடியும். ஏனெனில் நாம் ஆண்டவருக்கு முன்னராக அடிமைத்தனத்தின் ஆவியை பெற்றுக்கொள்ளவில்லை. அவருக்குள்ளாக நாம் புத்திர சுவீகாரத்தின் ஆவியை பெற்றிருக்கின்றோம் என்று வேதாகமம் கூறுகின்றது. எவ்வாறு இந்த சந்தர்ப்பம் எமக்கு ஏற்றபட்டது. கிறிஸ்து நமக்காக சிலுவையில் மரித்ததினாலே நாம் இவ்வாறான ஓர் சலாக்கியத்தைப் பெற்றுக் கொண்டுள்ளோம். கிறிஸ்து சிலுவையின் மேலாக பெற்ற வெற்றியானது எங்களை பிதாவின் புத்திரர்களாக மாற்றுகின்றது. ஆயினும் நாம் சிலுவையில் மரணித்த கிறிஸ்து தேவனுடைய சரீரமான வெளிப்பாடு எனவும் அவர் மரணத்திலிருந்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் எனவும் மீண்டும் உலகிற்கு வரப்போகின்ற இராஜாதி இராஜா எனவும் விசுவாசிக்கும் போது நாம் தேவனில் அவருடைய புத்திர சுவிகார ஆவியை பெற்றுக் கொள்ளுகின்றோம்.

ஏனெனில் கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நம்மை இயேசுவானவர் தேவனோடு இணைத்து வைக்கின்றார். அது எம்மை தேவனுக்கு ஏற்ற பிள்ளைகளாக மாற்றியமைக்கின்றது. இதன் மூலமாக நாம் பெற்றுக் கொள்ளுகின்ற நித்திய ஜீவனானது எம்மை பிதாவுக்கு புத்திரர்களாக மாற்றுகின்றது. அதனால் நாம் பயமுள்ள ஆவியை விட்டு தேவனுக்குரிய புத்திரர்களாக தேவனை அப்பா என்றும் பிதாவே என்றும் அழைக்கத்தக்க ஆவியை பெற்றுக் கொள்ளுகின்றோம். உலகத்தின் மனிதர்கள் தங்கள் பாவத்திலிருந்து விடுபட்டு கிறிஸ்துவை அடைந்து கொள்ளும் போது அவர்கள் பிதாவை அப்பாவாக கொள்ள முடிகின்றது. அவரது தகப்பன் முறையிலான உறவின் வாயிலாக நாம் தேவனை அறிந்து கொள்ளுகின்றோம்.

~அந்தப்படி திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா, பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவீகாரத்தின் ஆவியை பெற்றீர்கள்| ரோமர் 8:15

புதிய வாழ்வின் நம்பிக்கை
16 Jun 2009 
தேவனுடைய ஜனங்களாயிருப்பதற்கான தகுதியை இயேசுக் கிறிஸ்துவின் மூலமாய் பெற்றுக்கொண்ட சிலாக்கியமுள்ள ஜனங்களாய் நாம் காணப்படுகின்றோம். ஒரே தேவனுடைய ஒரே மக்களாய் நாம் இருப்பதற்கு நம்முடைய செயல்கள் அல்ல. மாறாக தேவனுடைய கிருபையின் காரணமாக இயேசுக்கிறிஸ்துவின் மீட்பினால் நாம் அவருடைய சொந்த ஜனங்களாய் உள்ளோம் என பேதுரு தெளிவாக அறிவிக்கின்றார். இரக்கமானது சாதாரணமாக நாம் வெளிப்படுத்துகின்ற உணர்வை விட மிகவும் பெறுமதி வாய்ந்ததாக அமைந்துள்ளது. முன்னர் நாம் இரக்கம் பெறாதவர்களாக காணப்பட்டபோது எம்மால் சரியாக நடந்து கொள்ள முடியாததாய் இருந்திருந்த போது தேவனுடைய அன்பு எம்மீது இரக்கம் பெற வைத்தது. அதனால் நாம் தேவனுடைய இரக்கத்தை பெற்றுக்கொண்டோம். தேவனுடைய இரக்கமானது எமக்கு நித்திய ஜீவனை பெற்றுத் தருகின்றது. அவருடைய வார்த்தைகள் எமக்கு புதிய ஜீவனுள்ள உணவு ஆகும்.

தேவனுடைய வார்த்தையான வேதாகமமானது எமது அனுதின வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஆவியின் போசாக்கை கொண்டுள்ள புத்தகமாகும். நாம் தேவனுடைய ஜனங்களாவதற்கு முன் எம்மிடமிருந்த பழைய வாழ்க்கையானது பல்வேறு பாவங்களையும் எல்லாவித சாபங்களைக் கொண்டு அமைந்திருந்த பாவமான வாழ்க்கையாக காணப்பட்டது. அதனால் நமது வாழ்க்கையின் எதிர்காலமானது சூன்யமாகவும் அர்த்தமற்றதாகவும் காணப்பட்டது. ஆயினும் அந்த நிலை மாற்றப்படத்தக்கதாக இப்போது நாம் தேவனுடைய பிள்ளைகளாக காணப்படுகின்றோம். தேவனுடைய பிள்ளைகளான பின் எமக்கு எதிராக எந்த வித மந்திரமோ தந்திரங்களோ சாத்தானால் மேற்கொள்ள முடியாது. கிறிஸ்து உலகத்தினை வெற்றி கொண்டது போலான வல்லமையை நாமும் பெற்றுக்கொண்டுள்ளோம். இயேசுவின் அதே வல்லமை எமக்குள்ளாக பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்படுகின்றது. அவரது வல்லமையையும் அவரது துணையையும் கொண்டு நாம் சாத்தானுக்கு எதிர்த்து நி;ற்க முடிவதோடு உலகத்தின் பாவங்களிற்கு எதிராக எம்மால் செயற்பட முடியும். இவ்விதமாய் இயேசுக்கிறிஸ்துவின் மூலமாய் தேவனுடைய பிள்ளைகளான எம்மை பரிசுத்த ஆவியானவர் வழிநடத்திச் செல்லுகின்றார்.

முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை. இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள். முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள். 1பேதுரு 2:10

தொழுது கொள்
15 Jun 2009 
தொழுகை முக்கியம் என வேதாகமம் கூறுகின்ற போதும் தொழுது கொள்ளுகின்ற போது நாம் இறைவனை கிட்டிச் சேரமுடியும் என்பது விசுவாச நம்பிக்கையாக உள்ளது. ஏனெனில் தொழுகைக்கான அழைப்பு எமக்கு எந்நேரமும் உண்டு. ஏனெனில் தொழுதுகொள்ளும் உரிமை எமக்குள்ளதனால் நாம் தொழுகைக்கு முக்கியத்துவம் செலுத்த வேண்டியது அவசியமாக இருக்கின்றது. கிறிஸ்து எமக்காக மரித்ததினாலே நாம் அவரை தொழுது கொள்ள வேண்டியது அவசியம். எமது தொழுகையின் முக்கிய பாகம் இயேசுவுக்கே செலுத்தப்பட வேண்டும். கர்த்தருடைய நாமமானது அதிசயமானது. அவருடைய நாமத்தை தொழுது கொள்ளுபவனுக்கே இரட்சிப்பு கிடைக்கும் என வேதாகமம் போதிக்கின்ற முக்கிய விடயமாகும்.
கர்த்தருடைய நாமத்தின் மேலாக விசுவாசம் கொண்டு அவர் நித்தியமான பிதாவெனவும் அவர் மாம்சமாக கிறிஸ்துவாக வெளிப்பட்ட மனித குமாரன் எனவும் தம்முடைய ஆவியினால் வெளிப்படும் ஆவியானவராகவும் இருக்கின்றார் எனவும் விசுவாசித்து அவருடைய நாமத்தை தொழுகையில் அவர் நமக்கு இரட்சிப்பை கட்டளையிட வல்லவராயிருக்கின்றார். அவருடைய கிரியைகள் அவர் தம்மை எங்களுக்கு வெளிப்படுத்துகின்ற காரியங்கள் மூலமாக அவரை கண்டு கொள்ளுகின்ற நாம் அவருக்கேற்ற கனத்தை கொடுக்கும் படியாக அவரை தொழுது கொள்ளுவது அவசியமாக இருக்கின்றது. அவர் எங்களுடைய நேச பிதா என்பதை மறுக்க முடியாது. ஆகவே அவரது அன்பு எங்களை அவருடைய பலத்த கிரியைகளை காணும்படியாக செய்தது. அவர் எங்கள் மத்தியில் அற்புதங்களையும் அடையாளங்களையும் இன்றும் நடப்பித்துக் கொண்டிருக்கின்றார். அவரது செயல்கள் மூலமாக அவர் இன்றும் தம்மை உயிருள்ள தேவனாக, இரட்சகராக, மாவேந்தராக காண்பித்துக் கொண்டிருக்கின்றார்.
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்@ நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். அப்போஸ்தலர் 2:21-22
தேவபக்தி
14 Jun 2009 
“கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்”. 2 பேதுரு 2:9
நியாயத்தீர்ப்பானது ஆக்கினையானது. அது அக்கிரமக்காரருக்காக வைக்கப்பட்டுள்ளது. அக்கிரமக்காரர் யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படுவர் என வேதாகமம் எடுத்துக் கூறுகின்றது. அக்கிரத்தினை செய்து கொண்டிருக்கின்றவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிப்பதில்லை. ஏனெனில் அவர்களுடைய அக்கிரமங்கள் அவர்களை கிறிஸ்துவிடமிருந்து பிரித்து வைத்துள்ளன. அவர்கள் நியாயத்தீர்ப்பின் நாளாகிய கர்த்தருடைய நாளிலே தங்கள் அக்கிரமங்களுக்குத் தக்கதான பலனை பெற்றுக் கொள்வார்கள்.
இவ்விதமாக இந்த சோதனையிலிருந்து தேவபக்தியுள்ள சந்ததி இரட்சிக்கப்படும். எவ்வாறெனில் கிறிஸ்துவை அறிந்துகொண்ட ஜனமாகிய தேவபக்தியுள்ளவர்கள் தேவனின் பிள்ளைகளாக காணப்படுவதினால் அவர்கள் இந்த சோதனையினின்று தப்புவிக்கப்படுவர். அவர்கள் தேவனோடு கூட பரலோகத்தில் கிறிஸ்துவின் வலதுபாரிசத்தில் இருந்து ஆளுகை செய்வார்கள். அவர்கள் இயேசுவால் மீட்கப்பட்ட தேவனுடைய குமாரர் எனப்படுவார்கள்.
தேவபக்தியுள்ள கூட்டம் இரட்சிக்கப்படுவதோடு கூட அக்கிரமக்காரர் ஆக்கினைக்குள்ளாக நியாயந்தீர்க்கப்பட்டு ஆக்கினையை அடைவர். இதற்கான காலம் வெகு சீக்கிரம் வருகிறது. அதற்குள்ளாக கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் தேவபிள்ளைகள் தங்கள் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்வர். அவர்கள் நித்தியகாலம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றுக்ககொள்வர். நித்திய ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டவர்களோ தங்கள் தீர்ப்பை ஆக்கினைக்குள்ளாக பெற்று தண்டனைக்குள்ளாக கடந்துசெல்வர்.
Admin · 6 views · Leave a comment
கிறிஸ்துவிடம் வேண்டுதல்
13 Jun 2009 
கிறிஸ்து தம்மிடம் வேண்டிக்கொள்ள செய்யவேண்டிய காரியத்தை தாமே கூறியுள்ளார். “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் ப+ட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்”. மத்தேயு 6:6 ஜெபம்பண்ணும் போது மனுஷர் பார்க்கிற வண்ணமாக ஜெபிக்கக் கூடாது எனவும் அறை வீட்டிற்குள் சென்று அறைக் கதவைப் ப+ட்டியபின் தனிமையாக ஜெபிக்கும் படியும் இயேசு கூறுகின்றார். இயேசுவை நோக்கி ஜெபிக்கவோ வேண்டுதல் செய்யவோ குறிப்பிட்ட இடத்தை நோக்கி செல்லவேண்டிய அவசியம் இல்லை. அவரை தொழுதிட நாம் தனியான அறையையே நாட முடியும். கிறிஸ்துவிடம் நித்தியஜீவனை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள். நீங்கள் நித்திய ஜீவனை பெற்றதற்கு அடையாளமாக உங்களுக்கு பரிசுத்த ஆவியானவரை தந்தருளுவார். பரிசுத்த ஆவியானவர் நீங்கள் நடக்கவேண்டிய வழிகளை உங்களுக்குத் தெரிவிப்பார். மேலும் தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தைகள் உங்களுக்கு உதவும். உங்கள் மேலான எல்லாவித சாபங்கள், துயரங்கள், துக்கங்கள், வியாதிகள், வறுமைகள் நீங்கும். நீங்கள் புதிதாக்கப்படுவீர்கள். உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் பரலோக இராஜ்ஜியத்திற்குரிய ஐசுவரியங்களை, பரலோக செல்வங்களை கிறிஸ்துவின் மூலமாகப் பெற்றுக்கொள்வீர்கள். கிறிஸ்து உங்கள் தேவனாயிருப்பார். அவர் உங்களை தேற்றுவார். உங்கள் விண்ணப்பங்கள் கிறிஸ்துவால் ஏற்றுக்கொள்ளப்படும். அவருடைய செய்கைகள் உங்களை தைரியப்படுத்தும். உங்களுடைய ஜெபத்தின் வல்லமையினால் நீங்கள் கேட்டுக்கொள்வது எதுவோ அவைகளை உங்களுக்கு தேவன் தந்தருளுவார். இந்த பூமியில் நீங்கள் கேட்பதை பரலோக இராஜ்ஜியத்தின் எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு உங்களுக்கு அருளுவதற்கு இறைவன் இயேசு ஆயத்தமாக இருக்கின்றார்.
Admin · 14 views · Leave a comment
யோசுவா 24:14-21
12 Jun 2009 
ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள். கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள். நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.

அப்பொழுது ஜனங்கள் பிரதியுத்தரமாக: வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, கர்த்தரை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக. நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தாமே. தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே. ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள். யோசுவா ஜனங்களை நோக்கி: நீங்கள் கர்த்தரைச் சேவிக்கமாட்டீர்கள். அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன். உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னியார். கர்த்தர் உங்களுக்கு நன்மைசெய்திருக்க, நீங்கள் கர்த்தரை விட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார் என்றான். ஜனங்கள் யோசுவாவை நோக்கி: அப்படியல்ல, நாங்கள் கர்த்தரையே சேவிப்போம் என்றார்கள்.

Now therefore fear the LORD, and serve him in sincerity and in truth: and put away the gods which your fathers served on the other side of the flood, and in Egypt; and serve ye the LORD. And if it seem evil unto you to serve the LORD, choose you this day whom ye will serve; whether the gods which your fathers served that were on the other side of the flood, or the gods of the Amorites, in whose land ye dwell: but as for me and my house, we will serve the LORD. And the people answered and said, God forbid that we should forsake the LORD, to serve other gods; For the LORD our God, he  it is that brought us up and our fathers out of the land of Egypt, from the house of bondage, and which did those great signs in our sight, and preserved us in all the way wherein we went, and among all the people through whom we passed: And the LORD drave out from before us all the people, even the Amorites which dwelt in the land:  therefore will we also serve the LORD; for he  is our God.
And Joshua said unto the people, ye cannot serve the LORD: for he is an holy God; he is a jealous God; he will not forgive your transgressions nor your sins. If ye forsake the LORD, and serve strange gods, then he will turn and do you hurt, and consume you, after that he hath done you good. And the people said unto Joshua, Nay; but we will serve the LORD.
Joshua 24:14-21
Admin · 6 views · 0 comments
சபிப்பதா? ஆசீர்வதிப்பதா?
11 Jun 2009 
கிறிஸ்துவின் கட்டளை நாம் சகலரையும் ஆசீர்வதிக்க வேண்டுமாக இருக்கின்றது. எம்மை நேசிக்கின்றவர்களை மாத்திரமல்ல. எம்மை சபிப்பவர்களையும் நாம் ஆசீர்வதிக்க தயாராக இருக்க வேண்டும். எங்களை எதிர்க்கிறவர்களுக்கு நாங்கள் நன்மை செய்ய வேண்டும் என இயேசு கூறுகின்றார். எங்களை துன்பப்படுத்துகின்றவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டுமாக இருக்கின்றது.
மொத்தமாக எங்களை தள்ளிவிட்ட, எதிர்த்த, அன்பு செலுத்தாத, துன்பப்படுத்தின ஒவ்வொருவரையும் நாம் நினைக்கும் போது ஜெபிப்பதும் ஆசீர்வதிப்பதும் இயேசுவின் கட்டளையாக உள்ளது. இயேசு சிலுவையில் இருந்தபோதும் கூட தம்மை கொலை செய்ய சதி செய்தவர்களுக்காக மன்னித்து ஜெபிக்கின்றார். அதைப்போலான அன்பை எம்மிடம் எதிர்பார்க்கின்றார். கிறிஸ்து எவ்வாறு எதிரிகளை நேசித்தாரோ அவ்வாறு நாமும் எம் எதிரிகளை நேசிக்க கற்றுக் கொள்ள Nவுண்டியது அவசியமாக இருக்கின்றது.
பிறரை மன்னிப்பதே நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதற்கான ஒரே அத்தாட்சியாக இருக்கின்றது. ஏனெனில் உலகத்தின் ஆசீர்வாதங்கள் தீயோருக்கும் நல்லோருக்கும் ஒன்றாகவே காணப்படும். எனினும் உலகத்தின் பின்னரான வாழ்க்கை தீயோருக்கு கசப்பானதாகவும் நல்லோருக்கு மகிழ்வானதாகவும் அமையும். இவ்வுலகத்திலுள்ள தீயோருக்கு அன்பு செலுத்துவதின் மூலமாக எதிர்கால பரலோகத்தின் வாரிசுகளாக நாம் மாற்றப்படுவதோடு கூட பிதாவின் பிள்ளைகளாக மாற்றப்படுகின்றோம்.
“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்@ உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்@ உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்@ உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்@ அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்”. மத்தேயு 5:44-45
Admin · 14 views · Leave a comment
ஒரே நோக்கு
09 Jun 2009 
கிறிஸ்தவர்களாயினும், கத்தோலிக்கர்களாயினும், யூதர்களாயினும் அவர்களுடைய ஒரே நோக்கு மேசியாவை எதிர்கொள்ள காத்திருப்பதாகும். எல்லா சபைகளினதும் எதிர்பார்ப்பு கிறிஸ்துவின் மேலேயே காணப்படுகின்றது. கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்க்கும் இத்தகையோர் பரலோக இராஜ்ஜியத்தினைக் குறித்த தெளிவான சிந்தை கொண்டுள்ளனர். . “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்”. 2 தெசலோனிக்கேயர் 1:7-10 தேவனை அறியாதவர்களுக்கு நீதியுள்ள ஆக்கினை உண்டு. கிறிஸ்துவை விசுவாசியாதவர்களுக்கு நீதியுள்ள ஆக்கினை உண்டு. தேவனையும் கிறிஸ்துவையும் அறியாவிட்டால் ஆக்கினை உண்டு என வேதாகமம் தெளிவாக கூறுகின்றது. இயேசு தமது சீடரோடுங் கூட வானத்தில் தென்படும் போது அவ்வாறு நடைபெறும். கிறிஸ்து வரும் நாளானது பாவிகளுக்கு துக்கத்தை கொண்டு வரும் நாளாகும். அது விசுவாசிகளுக்கு சந்தோஷத்தை தரும். குpறிஸ்துவின் பிள்ளைகள் மகிழ்ந்து களிகூறும் நாள் அதுவாகும். அந்நாளில் பாவிகள் வருத்தமடைவர். அவர்களுடைய மகிமை அற்றுப் போகும். ஒருவரும் நீதியுள்ள நியாயத்தீர்ப்பினின்று தப்பித்துக்கொள்ள முடியாது. கிறிஸ்துவை அறிந்துகொண்டு அவர்மேல் விசுவாசம் வைப்போருக்கு கிருபையாய் தேவன் தம்முடைய நித்திய ஜீவனை இலவசமாய் அருளுகின்றார். அவர்கள் தேவனால் பெலப்படுத்தப்படுகின்றனர். அவர்களை பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகின்றார். கிறிஸ்துவின் வருகை மிகவும் ஆச்சரியமான கிறிஸ்துவின் மீட்பின் நாளாகும். பாவிகளும் விசுவாசிகளும் பிரிக்கப்பட்டு இயேசுவோடு கூட அவருடைய பிள்ளைகள் செல்லும் நாளாகும். இது மிகவும் சீக்கிரம் நடைபெறப் போகும் உலகலாவிய சம்பவமாகும். இந்நாளில் கிறிஸ்துவின் மேலாக கட்டப்பட்ட சபைகள் கர்த்தருடனே கூட பரலோக இராஜ்ஜியத்திற்குள்ளாக எடுத்துக் கொள்ளப்படும். இந்த பாக்கியமான சம்பவம் சீக்கிரமாகவும் அதே வேளை இரகசியமாகவும் நடைபெறும் என வேதாகமம் தெளிவாக கூறுகிறது. அந்நாளை நிச்சயமாக யாராலும் குறித்து கூற முடியாது. ஏனெனில் தேவனுடைய வருகை உலகளாவிய ரீதியில் நடைபெறும் இரகசிய சம்பவமாகும். அதற்கு ஆயத்தப்பட செய்ய வேண்டியது ஒன்றே. கிறிஸ்துவிடம் அவரது நித்திய ஜீவனுக்காக வேண்டுதல் செய்வதே.
Admin · 22 views · Leave a comment
வேலையும் படியும்
08 Jun 2009 
வேலைக்குரிய சம்பளத்தை உடனடியாக கொடுக்கும் படி வேதாகமத்தில் தேவனால் கட்டளையிடப்பட்டுள்ளது. ஒருவன் வேலை செய்யும் போது அதற்குத் தகுந்த கூலியை அவன் அடையவேண்டியவனாக இருக்கின்றான். அது அவனது ஜீவியத்திற்கான ஓட்டத்தை கொண்டு செல்லும் ஒரு படி. அதை உடனடியாக கொடுப்பது ஒரு கிறிஸ்தவனின் கடமையாக இருக்கின்றது. அவ்வாறு கொடுக்க முடியாது போவது அவனுக்கு பாவமான காரியமாகும். ஏனெனில் ஏழையானவன் தனக்கு கிடைக்க வேண்டிய காரியத்தை குறித்து இறைவனிடம் கூறும்போது அது கொடுக்க வேண்டிய நபருக்கு பாவமானதாக அமைந்து விடுகின்றது.
உபாகமம் 24:14-15  - உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக. அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்.  அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்.  அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்.  அது உனக்குப் பாவமாயிருக்கும்.
Admin · 16 views · 0 comments
அன்பு கூரவேண்டும்
07 Jun 2009 
தேவன் பயங்கரமானவர் என்பதை வேதாகமம் தெளிவாக கூறுகிறது. அவர் வல்லமையுள்ள பயங்கரமான தேவனாக இருக்கின்றார். அவரது வல்லமைக்கு முன்னாக ஒன்றுமில்லை. அவரே பூமியை உருவாக்கி மனிதர்களை அதின் மேல் வைத்தவர். அவரது செயல்கள் பட்சபாதமுடையதல்ல. அவர் தமது மக்கள் மேல் கரிசனை உள்ளவராக காணப்படுகின்றார். அவர் திக்கற்ற பிள்ளைக்கு உதவுகின்றவர். விதவைக்கு நியாயம் செய்யாதவர்களை அவர் பூமியில் வைப்பதில்லை. ஏனெனில் தேவன் நியாயம் செய்யும் வண்ணமாகவே எங்களுக்கு கற்பிக்கின்றார். தேவனுடைய அன்பு அந்நியன் மேலாக காணப்படுகின்றது. அவ்வாறாக கிறிஸ்துவின் பிள்ளைகளான நாமும் எம்மத்தியில் உள்ள அந்நியர் மேல் அன்புவைக்க வேண்டிய கடப்பாட்டில் காணப்படுகின்றோம். அவர்களுக்கு உதவ வேண்டியது எமது கடமையாக இருக்கின்றது. எங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவன், கர்த்தாதி கர்த்தர், எல்லா தேவர்களைப் பார்க்கிலும் அவர் மிக உயர்ந்தவர். அவர் மாத்திரமே தேவனாக இருக்கின்றார். அவரது ஒரே போறான குமாரனை உலகிற்குள் அனுப்பும் எண்ணம் காணப்பட்டதும் அன்பினாலேயாகும். அவர் அந்நியனுக்கு உதவுவது போல நாமும் அந்நிய ஜனங்களுக்கு உதவ வேண்டியதை எதிர்பார்க்கின்றார்.
உபாகமம் 10:17-18 - உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்.  அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்..
Admin · 12 views · 0 comments
இலங்கையர் என்பதே எம்மொழி
06 Jun 2009 
துரதிஷ்டவசமான மிக நீண்ட கால போரியல் வரலாற்று நிகழ்வு பூரணமாக நிறைவடைந்துள்ளது. கிட்டத்தட்ட முப்பது வருட கால யுத்தம் மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது. இலங்கையில் உள்ளேயே இடம்பெயர்வோர் தொகை அதிகமாகியிருந்தது. ஒவ்வொர் யுத்தத்தின் பிரதிபலனாக மக்கள் தாங்கொணா துயரத்தை அடையவேண்டியிருந்தது. மக்களை பகடைக்காய்களாக வைத்து நகர்த்திக்கொண்டிருந்த தலைவர்களுக்கு யுத்தம் ஒரு பொருட்டாக தெரியவில்லை. இலங்கை அரசியல் சட்டங்கள் பெரும்பான்மை மக்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒன்றாக பெரும்பான்மை மக்களது சமயம், மொழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது. இது அரசிற்கு விரோதமான எண்ணத்தை கொண்டுவந்திருக்கின்றது எனினும் உண்மையை வெளிக்கொணர மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதானது அரசியலமைப்பிற்கு எதிரானதாகும்.
தினம் இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் மனிதம் ஒழந்ததேயொழிய வெற்றி கிடைக்கவில்லை. மண்ணுக்காக போரிட வேண்டிய அவசியம் மனிதனுக்கு ஏற்பட்டு ஏனைய மனிதரின் உயிரை பறிக்குமாயின் அது சரியான முயற்சியல்ல. வெற்றிபெற வேண்டும் என எண்ணும் மனிதனுக்கு ஏனைய மனிதர்களை அழிக்கத்தான் வேண்டும் என நினைப்பது தர்மமாகாது. ஓவ்வொரு குண்டுவெடிப்புக்களும் ஒருத்தனுக்கு பலர் எண்ணும் எண்ணிக்கையில் மனித இனத்தை மனித இனமே அழித்துக்கொண்டிருந்தது.
சமுதாயத்தை காக்க விரும்பும் தலைவர்கள் தம் ஜனங்களையும் கூடவே பிறரையும் காக்க நினைப்பர். மாறாக மக்களை கொன்று சமாதானத்தை அடைய விரும்பும் சர்வாதிகாரிகளுக்குரிய எண்ணங்கள் மக்கள் தலைவனுக்குள் இருக்கக் கூடாது. மக்களை அழிப்பதற்காக மக்களை உபயோகிக்கும் எண்ணமுள்ள தலைவர்களின் கதியை உலகம் அன்றுதொட்டு அறிந்து வந்துள்ளது. உலகின் பயங்கரவாத எண்ணங்களுள்ள தலைவர்கள் சமுதாயத்தில் மரணிக்கும் போது மக்கள் மகிழ்ச்சியடைவதில் தப்பில்லையென்பது ஓர் சுதந்திரத்தை நோக்கிய எதிர்காலத்தை கொண்டவர்களுக்கு விளங்கும். தமக்கு நிம்மதியான காலம் என மக்கள் சிந்திப்பார்களாயின் அதுவே வெற்றியாகும். இனி ஒரு தமிழனும் வெடிகுண்டை சுமந்து சாகவேண்டியதில்லை என நினைக்கும் போது தமிழருக்கும் நிம்மதி பெருமூச்சு விடலாம். தான் பெறுவதை விட இருமடங்கு துக்கத்தை இன்னொருவன் பெற வேண்டும் என எண்ணுவதும் பயங்கரவாதமே.
மக்களுக்காக போராடும் போராட்டம் நியாயமானதாக அமைந்திருத்தல் சிறப்பான மக்கள் தலைவனை உருவாக்கும். குறுகிய காலத்தில் போராட்டத்திற்காக மக்கள் இறப்பது நியாயம் குறைவாக இருந்தாலும் அதி நீண்ட காலத்திற்கு மக்கள் யுத்தத்திற்குள்ளாக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் நிலை அதைவிட பேராபத்தாகும். மக்கள் சமாதானத்திற்காக இறந்து கொண்டிருப்பதை விட ஒரே நாளில் மடிவது சரியானதே. துர்க்குணமுள்ள தலைவனின் மரணம் மேலானதாகும்.
மக்களுக்கு சமாதானத்தை கிடைக்கச்செய்ய அவர்களை அழிப்பது துரோகத்தனமாகும். பயங்கரவாதத்திற்காக அப்பாவிகள் பலியாக்கப்பட்டது சபிக்கப்பட வேண்டியது. உலகில் வசதியாக வாழ தற்கொலை செய்யும் முட்டாள்தனமான எண்ணம் தோன்றுவது நியாயமாகுமா? வர்கள் எப்போது வாழ்க்கையை அனுபவிப்பர்.  பிரிந்து நின்று உரிமைக்குரல் எழுப்ப முடியாது. எப்போது உரிமைக்காக சேர்ந்து இருந்து குரல் எழுப்பப்படுகிறதோ அப்போது தான் கல்மனமும் கரையக்கூடும். எதிர்ப்புக்கள் வெற்றியை ஏற்படுத்தாது. ஆயினும் அதிகாரத்திடம் நீதி கேட்பது சரியானதென மனுநீதி சோழனின் அரசவையிற் புகுந்த மாட்டின் கதை எடுத்துக் கூறும். போராடி வென்றெடுப்பது உரிமையல்ல. மாறாக உரிமையுடன் கேட்டு பெற்றுக்கொள்வதே மானிட உரிமையாகும்.
பயங்கரவாதம் பிடுங்கப்பட்டது போல அரசியல்வாதிகளின்  ஆபாச, தூரநோக்கற்ற, பிரிவினைவாத எண்ணங்கள், பேச்சுக்கள், வேரோடு நீக்கப்பட வேண்டியுள்ளது. மக்களால் தெரியப்பட்டு தலைவர்களானவர்கள் மக்களை பிரித்து வைக்கும் சதிகளில் ஈடுபடுவதை சமுதாயம் அறிந்து கொள்ளும் போது உடனடியாக மக்களது உரிமைகள் வெளிப்படுவதை மானிட உரிமை அமைப்புக்கள் எடுத்துக் காட்டவேண்டியது அவசியமாகும். போராட வேண்டியது மனிதர்களுடன் அல்ல. மனிதர்கள் எதிரிகளுமல்லர். என்று மானிடன் நேசிக்கப்படுகின்றானோ அன்றே மனிதன் மதிக்கப்படுவான்.
எபேசியர் 6:12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
கிறிஸ்தவர்ளாகிய எமது போராட்டம் மனிதருடனாக அல்ல. அது கிறிஸ்துவிற்கு எதிரான சாத்தானுடனாகும். அவனே உலகின் பொல்லாத எதிரியாவான். அவன் மக்களுக்கு எதிராக செயற்பட்டு அவர்களை தேவனிடமிருந்து பிரிக்கின்றான். அவன் மக்களை பாவம் செய்ய தூண்டுகின்றான். அவன் மக்களுக்குள் கலகத்தை ஏற்படுத்துகின்றான். அவனது செய்கைகளை உலகம் அங்கீகரிக்க முடியாது. அவன் பொல்லாதவனும் பொல்லாத சேனைகளின் தலைவனுமாவான். அவனே மக்களுக்குள் தீய எண்ணங்களை விதைப்பவனாகவும் மக்களை விரோத எண்ணமுடையவர்களாகவும் மாற்றி மக்கள் தேவனிடம் செல்லாதவாறு தடுப்பவனாவான்.
Admin · 41 views · 0 comments
பிலிப்பியர் 3:9-14
05 Jun 2009 

நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன். நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை. ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.



And be found in him, not having mine own righteousness, which is of the law, but that which is through the faith of Christ, the righteousness which is of God by faith: That I may know him, and the power of his resurrection, and the fellowship of his sufferings, being made conformable unto his death; If by any means I might attain unto the resurrection of the dead. Not as though I had already attained, either were already perfect: but I follow after, if that I may apprehend that for which also I am apprehended of Christ Jesus. Brethren, I count not myself to have apprehended: but  this one thing  I do, forgetting those things which are behind, and reaching forth unto those things which are before, I press toward the mark for the prize of the high calling of God in Christ Jesus. Philippians 3:9-14


Admin · 6 views · 0 comments
தீர்க்கதரிசன
04 Jun 2009 
Sri lanka தீர்க்கதரிசன
தூய ஆவியானவரின் கிரியைகள்
04 Jun 2009 
கிறிஸ்துவிற்கு பின்னரான இன்றைய நாட்களில் கிரியை செய்கின்றவராக பரிசுத்த ஆவியானவர் காணப்படுகின்றார். கிறிஸ்து உயிர்த்தெழுந்தவராக பரலோகிற்கு செல்லுமுன் தமது ஆவியானவரை அனுப்புவதாக கட்டளையிட்டதை இப்போது நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றோம். இன்றைய சபைகளில் தூயஆவியானவரே பிரதானமானவராக காணப்படுகின்றார். எவ்வாறு கிறிஸ்து கண்களுக்கு காணப்பட்டாரோ அவ்விதமாகவன்றி பரிசுத்த ஆவியானவர் எம் மாம்ச கண்களால் காணமுடியாதவராக காணப்படுகின்றார். ஆனாலும் அவரது செயல்கள் நிறைவேற்றப்படுகின்றன.

தூய ஆவியானவர் கிறிஸ்துவைக் குறித்து சாட்சிக் கொடுக்கின்றவராக இருக்கின்றார்.

“இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை”. எபேசியர் 3:6. கிறிஸ்துவின் இரகசியங்களை வெளிப்படுத்துகின்றவராக பரிசுத்த ஆவியானவரே காணப்படுகின்றார். ஏனெனில் இந்த இரகசியத்தை முற்காலத்தில் அல்லது கிறிஸ்துவிற்கு முன்னிருந்தவர்கள் அறிந்து கொள்ளவில்லை. கிறிஸ்தவர்களது மாபெரும் துணையாளராக தூயஆவியானவர் காணப்படுகின்றார். ஏனெனில் கிறிஸ்தவன் தான் மற்றோருடன் இருக்கின்ற பொழுது அவனுடைய செயல்கள் ஆவியானவரால் எண்ணப்படுவது போல ஒவ்வொருவரதும் செயல்களை அவதானித்துக் கொண்டிருக்கின்றார். கிறிஸ்தவனுக்கு கூறப்படும் காரியங்களை அவரும் அருகிலிருந்த படியே பார்க்கின்றார். சபையில், வெளியில், வீட்டினில், எங்கும் அவர் இருக்கின்றார். மனிதனுக்கு அருகில் அவர் நபராக காணப்படுகின்றார். கிறிஸ்தவன் தனது ஆவியில் அவரோடு பேச முடியும். ஒரு பிள்ளை தகப்பனோடு உறவாடுவது போல தூய ஆவியானவரோடு உரையாட முடியும். ஏனெனில் அவர் ஆவியாயிருக்கிற போதிலும் எங்களை கண்காணித்துக் கொண்டு இருக்கின்றார். கிறிஸ்துவிற்கு முன்னராக காலத்தில் தேவன் மகிமையில் வெளிப்பட்டார். இராஜாக்களுக்கும் மக்களுக்கும் அவர் செய்தியை தமது தீர்க்கதரிசிகளினூடாக கொடுத்துக் கொண்டிருந்தார். கிறிஸ்து மூலமாக தேவன் நேரடியாக மனிதக் கண்களுக்கு தென்பட்டதோடு தமது செய்தியை அவர்களுக்கு அறிவித்தார். இன்றைய நாட்களில் தேவன் தமது ஆவியில் எங்களோடு இணைந்திருக்கின்றார். நாம் எமது ஆவியின் ஊடாகவே அவரோடு தொடர்பு கொள்ள முடிகின்றது. ஆகவே தான் கிறிஸ்துவிற்காக மரிக்கவும் அநேகர் தயாராக இருந்திருக்கின்றார்கள். ஏனெனில் மரணம் மாம்சத்திற்குரியது. ஆதன் பின்னரான நித்திய வாழ்க்கை தேவனுடன் தொடரப் போகின்றது. மரணத்தின் போது ஆவியானது மாம்சத்திலிருந்து ஒரு நொடியில் பிரிந்து விடுகின்றது. அதன் பின் சரீரம் மண்ணோடு மண்ணாகிப் போகும். ஆவியோ நாம் உலகில் செய்த பலன்களுக்கு தேவனிடமிருந்து பலனை எதிர்கொள்ளும். ஆகவே தான் இன்றும் பரிசுத்த ஆவியானவர் தம் மக்களோடு பேசுவதை விரும்புகின்றார். அவர் தொடர்ந்து தம் மக்களான கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களோடு இணைந்து செயலாற்ற விரும்புகின்றார். கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாக பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வழிநடத்தலை பெற்றுக்கொள்ள இன்றே சந்தர்ப்பம். பயன்படுத்திக்கொள்ளுங்கள். பாக்கியவான்களாகுங்கள்.
உலக இறுதி தீர்ப்பு
02 Jun 2009 
உலக மக்களுக்கு உலக இறுதியில் நடைபெறும் சம்பவங்களை வேதாகமம் ஏற்கனவே அறிவித்துள்ளது. வேதாகமத்தின் மிகவும் பயங்கர செய்தியாக அமைந்துள்ள இறுதி தீர்ப்புக்கள் பற்றிய முன்னறிவிப்புக்கள் மிகவும் அவதானம் செலுத்தி பார்க்கப்படவேண்டிய ஒன்றாக காணப்படுகின்றது. இங்கு இயேசு கூறிய இறுதிதீர்ப்புக்கள் மிகவும் கவனத்தை கவருகின்றன. மனிதத்தன்மையுள்ளவராக பிறரை அன்புடன் ஏற்றுக்கொண்டவரான சாந்தமுள்ள கிறிஸ்துவானவர் உலக இறுதி தீர்ப்புக்குறித்து மிகவும் கடுமையாக எச்சரிப்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கை குறித்து கணக்கொப்புவிக்கவேண்டிய மிகவும் கடுமையான காரியத்தை அறிவிக்கின்றார். அவர்கள் தங்களுடைய வாழ்வில் செய்த கிரியைகளுக்குத் தக்க பலன்களை அனுபவிப்பதற்காக தங்கள் வாழ்நாட்களை குறித்த கணக்கொப்புவிப்பை அறிவிக்க வேண்டியதாக உள்ளது. முதலாவதாக குறிப்பிடப்படும் அதிகூடிய தண்டனை பெறக்கூடியவர்களை இயேசுக்கிறிஸ்துவே சுட்டிக்காட்டுகின்றார். மதத்போதகர்கள் இவ்வித ஆக்கினையை அடைவார்கள் (1). இயேசுவின் சுவிசேஷத்தை தள்ளிவிட்ட நபர்களுக்கும் நகரங்களுக்கும் இவ்வித இறுதி தீர்ப்பு மிகவும் கொடூரமாக அமையும் என்பதாக இயேசு கூறுகின்றார் (2). கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்ப்பையும் ஏற்றுக்கொள்ளாமலம் கிறிஸ்துவை உதறிதள்ளிவிட்டவர்களுக்கு மிகுந்த ஆக்கினை உண்டு (3). ஓவ்வொரு மனிதனும் தனது ஒவ்வொரு வீணான வார்த்தைகளுக்கும் நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் (4). இயேசுக்கிறிஸ்து கூறியபடி ஒருவன் கொலையை விட குறைவான குற்றத்தை செய்திருந்தாலும் அவன் நரக ஆபத்திலே உள்ளான். மனிதர் தாம் மற்றோக்கு காட்டிய அன்பின் பிரகாரமாகவே அவர்கள் இறைவனது அரசிற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவர். அல்லது அதற்கேற்ற விதத்தில் நரக ஆக்கினையை அடைவர்.

1.    குறிப்பாக மாற்கு 12:38-40ல் நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்டஜெபம் பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.  அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார். ஏனெனில் வெளிப்பிரகாரமாக பரிசுத்த வாழ்வை நடத்தி உள்ளான விதத்தில் உலக ஆசாபாசங்களுக்கு உட்பட்டு நடப்போர் இறுதி தீர்ப்பிலிருந்து தப்பிவிட முடியாது. அவர்கள் இறுதி தீர்ப்பில் அதிக ஆக்கினை அடைவார்கள் என இயேசு கிறிஸ்து எச்சரிக்கின்றார்.

2.    இயேசுவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாத நகரங்களுக்கு இறுதி தீர்ப்பில் மிகவும் கொடிய தண்டனையை அனுபவிக்க வேண்டிய நேரிடும். அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக் கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற் போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்: கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்.  உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும். நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

3.    மனந்திரும்ப விருப்பமற்றவர்களுக்கு ஆக்கினை உண்டு. அவர்களது சந்ததிகளுக்கும் அவ்விதமே நேரிடும்.

4.    மத்தேயு 12:36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எப்படி இந்த ஆக்கினையிலிருந்து தப்பிக்கொள்வது. கர்த்தருடைய நாமத்தினால் வருகின்ற இயேசுக்கிறிஸ்துவை ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் அவரை காணாதிருப்பீர்கள். மத்தேயு 23:37-39 “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்.  உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்”. ஏனெனில் உலகின் பாவங்களுக்காக மரித்தவர் கிறிஸ்துவே. அவரது மரணம் மூலமாக நாம் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள அவரை விசுவாசிப்பதே மிகச்சிறந்த வழிமுறையாகும். இன்றும் உயிரோடு உள்ளவராக எம்மை வழிநடத்துபவரான கிறிஸ்துவை விசுவாசிப்பதே நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளும் வழியாகும். நித்திய ஜீவன் இலவசமாய் இறைவனால் கொடுக்கப்படுகின்றது. இந்த இலவச நித்திய வாழ்க்கையை அனுபவிக்க செய்யவேண்டியது ஒன்றே. இயேசுக்கிறிஸ்துவை விசுவாசி, அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள். ஏனெனில் வரப்போகும் கிறிஸ்து இராஜாவாக உலகத்தை நியாயந்தீர்க்க வருகின்றார். அவரது வருகையில் உத்தமாய் இருந்தோர் நித்திய ஜீவனைபெற்று பரலோகத்தை அடைவர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவரை எதிர்ப்போர் மிகுந்த ஆக்கினை அடைவதற்காய் நரகினில் தள்ளப்படுவதற்காய் மிகப்பெரிய நியாயத்தீர்ப்பிற்கு முகங்கொடுக்க வேண்டிய அவமானத்திற்குள்ளாய் தங்களை ஆயத்தப்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Admin · 13 views · 0 comments
நியாயம் என்ன?
01 Jun 2009 
நியாயஞ்செய்வதை வேதாகமம் வலியுறுத்துகின்றது. உலகில் மக்கள் தங்கள் மேல் அதிகாரத்தை கொண்டவர்களுக்காக தங்களை நடத்தும் தலைவர்களுக்காக தங்கள் காரியங்களை செய்கின்றார்கள். தலவர்கள் எவ்வித பாதையை தீர்மானிக்கின்றார்களோ அப்பாதை மக்களது ஜீவனோபாயமாகின்றது. அவ்வித மக்களின் துயரங்களையும் துக்கங்களையும் கவனிக்கத்தக்க சிறந்த தலைமைத்துவ சக்திகள் உலக அரங்கில் இருந்து நீங்கப்பெற்றுள்ளதை கண்கூடாகப் பார்க்க முடியும். மக்கள் தம் வாழ்வில் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு பதிலளிக்கும் விதத்திலான செயற்பாடுகள் அதிகமாக இலங்கை சமுதாயத்தில் காண்பது அரிதாக உள்ளது. மக்களின் எதிர்கால நோக்கை தீர்மானிக்கும் சக்திகள் மக்களை மேல்நோக்கி வரவிடாமல் இன்னுமாக அவர்களை மிதித்து செல்கின்றது. அதிலும் ஆதிக்க வெறிக்கொண்ட தலைவர்களுக்கு மக்கள் பகடைக்காய்களாக ஆக்கப்படுவதோடு தம் சகோதர இனத்தாருக்கு தம் ஆதிக்க வெறியை வெளிப்படுத்தும் வண்ணமாக மக்கள் கூட்டம் இருந்து கொண்டிருப்பது விரும்பத்;தகாகது. எவ்வாறாயினும் மக்கள் தாம் மிதிக்கப்பட்டு செல்வதை அறிந்தும் தலைவர்களின் பகடைகளாக ஏனையோருக்கு பங்கம் விளைவிக்க தயங்காது செல்கின்றனர். மீளமுடியாதவர்களாய் இருந்து கொண்டு ஆதிக்க வெறிக்காய் ஆர்ப்பரிக்கும் போது நடப்பது எதுவுமில்லை. வீணான செயலுக்காய் ஆர்ப்பரிக்கும் மடைமைகளாக ஆக்கப்பட்டுள்ளவர்களுக்கு இனியும் ஆதிக்கவெறியின் பயனற்ற தன்மை தெளிவாய் விளங்கும் என்பதனை கண்டறிவதற்கு நீண்ட காலங்கள் செல்லலாம். ஆதிக்கத்தின் மேலாக கட்டபட்டவர்க்கு பொருளாதாரம் தாழ்ந்தாலென்ன, விழுந்தாலென்ன தாம் ஆதிக்கத்தை நிலைநாட்டமுடியும் என்னும் நப்பாசை இன்னும் அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லும் என்றால் மிகையில்லை. உலகம் பொருளாதாரத்தில் ஆட்டம் காணும் இந்நேரத்தில் உலகில் வருமானத்தை பெற்றுக்கொள்ள இடம்பெயர் அகதிகளை காட்டி வருமானம் பெற்றுக்கொண்டிருக்கின்றது இலங்கை. அகதிகளாக்கப்பட்ட மக்களிற்கு உரியவை செல்கின்றதா என்பதை குறித்த செய்திகளை பத்திரிகைகள் வெளியிடவுமில்லை. அவை பகிர்ந்தளிக்கப்படுவதாக காண்பிக்கப்படவுமில்லை. ஆக மொத்தத்தில் இலங்கையின் செயற்பாடுகள் மக்களுக்காகவன்றி ஆதிக்கவெறிக்காகவே பயன்படுத்தப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. “ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற. உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்;த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்”. நீதிமொழிகள் 31:8,9
இறுதி வருகை
31 May 2009 
அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்.
உலகம் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சவாலாக கிறிஸ்துவின் இராஜரீகமான வருகை அமையவுள்ளது. இயேசுவை எதிர்த்தோர் அவரை காணப்போகின்றார்கள். இயேசுகிறிஸ்துவை ஏசியவர்கள், எதிர்த்தவர்கள், அவமதித்தவர்கள் அவரைக் காணப்போகின்றார்கள். அப்போது அவர்களின் நிலை என்ன? மத்தேயு 25:31ல் கூறப்படும் இக்காரியம் எதைப்பற்றி கூறுகின்றது. உலகிற்கு இறைவன் மனித சாயலாக மனிதன் காணும் வண்ணமாகவே வந்ததால் அவரது வெளிப்பாடு இங்கு மனுஷகுமாரன் எனப்படுகின்றது. இயேசுக்கிறிஸ்துவே இவ்வுலகின் படைப்பாளராவார். அவர் பாவிகளின் கைகளினால் மரணத்தை தழுவினார். ஆனாலும் அவர் இறைவன் என்பதினால் மரணத்திலிருந்து ஜெயம்கொண்டவராக மனுஷகுமாரன் உயிரோடு எழும்பினார். மரணம் மனிதர்களை மாத்திரமே மரணிக்க வைக்கலாம். இறைவனால் மனிதனுக்கு தண்டனையாக கொடுக்கப்பட்ட மரணத்தை இறைவன் மனிதன் மேல் வைத்த அன்பின் நிமித்தமாக மனிதனாக வந்து மரணத்தை எதிர்கொண்டு வெற்றி சிறந்து காட்டினார். இது இயேசுவை கொலைசெய்த மனிதர்களுக்கு கிட்டிய வெற்றியல்ல. மனிதர்களை மரணத்திலிருந்து விடுவிக்கத்தக்கவர் தான் என்பதை காட்டிக்கொடுத்த கிறிஸ்துவின் வெற்றியே ஆகும். இவ்வாறு மரணத்தை வெற்றிகொண்ட இறைவனை விசுவாசிப்பதன் மூலமாக நாமும் மரணத்தை வெற்றிக்கொள்ள முடியும். புதிய நித்திய ஜீவனை நாம் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான சந்தர்ப்பமே இங்கு தரப்படுவதற்காகவே உள்ளது. கிறிஸ்து உலகிற்கு வரப்போகும் நாள் மிகவும் தொலைவிலில்லை. அது மிகவும் அருகிலிருக்கின்றது. அந்நாளை யாரும் அறியார். சிலவேளைகளில் இதை நீங்கள் வாசிக்கும் முன்னதாகவோ கூட இடம்பெற்றிருக்கலாம். அவரது வருகை பரிசுத்த தூதரோடுங்கூட இருக்கும் என வேதாகமம் கூறுகின்றது. அவர் சீக்கிரம் வரப்போகின்றார் என ஏற்கனவே வேதாகமம் எச்சரிக்கின்றது. இவ்வித தீர்க்கதரிசனங்களைக் கொண்ட புத்தகமாக இன