ஏக இறைவனாகிய இஸ்ரயேலரின் தேவனையும், அவரது செய்கைகள் எழுதப்பட்ட வேதாகமத்தையும் விட்டு விட்டு, கல்லாலும், மரத்தாலும், மீள் வேதங்களாலும், புரட்டு கதைகளாலும் அவரை அறிந்து கொள்ள முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?

Who's Online?

Member: 0
Visitors: 5

Categories

helps







rss Syndication

Archives

Last Comment

No Comments

Calendar

August 2008
SunMonTueWedThuFriSat
 << < > >>
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    

Choose a skin



 

Helping Hands

16 May 2008 - 03:04:05 pm

சாட்சி

கர்த்தருடைய பரிசுத்தநாமத்துக்கு ஸ்தோத்திரம் நான் ஒரு பாரம்பரிய இந்துக் குடும்பத்திலே பிறந்தவன். மிகவும் பக்தி வைராக்கியத்தோடு இந்துக் கோவில்களில் தொண்டு செய்பவர்கள். நான் எங்கள் குடும்பத்தில் கடைசியாக ஏழாவதாக பிறந்தவன். என் வாலிப வயதிலேயே இந்தியாவில் உள்ள பெரிய இந்து ஆலயங்களாகிய திருப்பதி பழனி ஆகிய கோவில்களில் தலை மொட்டை அடித்து காவி உடுத்தி மிகவும் பத்தனாக இருந்தேன். காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சிகாமகோடி சங்கராச்சாரிய சுவாமிகளை இரண்டுமுறை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டவன். என்னுடைய 25வது வயதில் ஒரு கிறிஸ்தவப் பெண்ணை காதலித்து திருமணம் செய்தேன். பின்பு 1979ம் ஆண்டில் மேற்கு ஜேர்மனிக்கு குடும்பமாக சென்று வேலை செய்தோம் எங்கட்கு ஒரு பெண்ணும் ஒரு ஆணுமாக இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். பின்பு 1986 இல் கனடா வந்தோம். பணவசதி இருந்ததால் வீடும் வாங்கி இருந்தோம். 1990 ம் ஆண்டு யூலை மாதம் 24ம் திகதி காலை வேலைக்குப் போய் சிறிது நேரத்தில் என்னுடைய நாக்கு உணர்ச்சி இல்லாமல் வருவது போலவும் கண்பார்வை சிறிது மங்குவது போலவும் இருந்தது உடனே மேலதிகாரியிடம் கூறிவிட்டு மனைவியையும் வேலையிடத்தில் போய் கூட்டிக்கொண்டு டாக்ரரிடம் போனோம் அவர்கள் உடனே  நுஅநசபநnஉல ர்ழளிவையட க்கு அனுப்பினார்கள் அங்கு நரம்பு சிகிச்சை டாக்ரர்கள் என்னை பரிசோதித்துவிட்டு இது ஒரு ஆiழெச ளுவசழமந டிரவ லழர யசந எநசல டரஉமல என்று கூறிவிட்டு அடுத்தநாள் ளுpநஉயைடளைவ னுச இடம் அனுப்பினார்கள். அவர்களும் என்னை பரிசோதித்துவிட்டு இது குடும்ப பரம்பரை வியாதி என்றும் இதற்கு இப்போ மருந்து எதுவும் இல்லை நாளடைவில் அயளளயபந வாநசயில செய்து பார்க்கலாம் என அனுப்பிவி;ட்டார்கள். என்னுடைய குடும்பங்களில் பலருக்கு இப்படியான வருத்தங்கள் வந்து இறந்ததையும் நான அறிவேன். இப்பொழுது என் இடது பக்க கண் வாய் நாக்கு முதலியன இயங்கமுடியாமல் போய்விட்டன.

இப்பொழுது நான் வணங்கும் இந்து தெய்வங்களிடம் முறையிட்டு வேண்டுதல் செய்து எந்தப் பலனுமில்லாமல் இரண்டு கிழமைகளுக்கு மேலாகிவிட்டது. இந்த வேளையில் எங்களுடைய கிறிஸ்தவ நண்பர்கள் பலர் இயேசுவைப் பற்றி என்னிடம் கூறி அவர் பரிகாரியாகிய கர்த்தர் உண்மைக் கடவுள் அவரிடம் வந்தால் சுகம் கிடைக்கும் என்றார்கள் எனக்கோ மிகவும் எரிச்சலும் கோபமும் அவர்களையே எதிர்த்து பேசிவிட்டேன். இப்படியிருக்கும் போது ஒரு நாள் பகல் 12 மணியிருக்கும் நான் வீட்டின் மேல் அறையில் படுத்திருந்தேன் அப்பொழுது எனக்கு ஒரு சத்தம் கேட்கிறது நான்தான் உண்மைத் தெய்வம் இயேசுகிறிஸ்து என்னிடம் வந்தால் உனக்கு சுகம் கிடைக்கும். நீ எனக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்று கேட்டது. உடனே நான் கீழே வந்து நடந்த சம்பவத்தை சமையல் செய்து கொண்டிருந்த மனைவியிடம் கூறினேன். பின்பு அந்த கிறிஸ்தவ நண்பர்களிடம் போண் பண்ணி ஞாயிறு ஊhரசஉh க்கு வருவதாக கூறினோம்;. ஞாயிறு ஊhரசஉh க்கு போய் ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது எனக்கு ஏதோ எல்லாம் செய்தது என்னையுமறியாமல் அழுதுகொண்டிருந்தேன். ஆராதனையின் பின் எனக்காக
ஜெபித்தார்கள். அன்றிலிருந்து எனக்கு வியாதியாக இருந்தாலும் மனதில் ஒரு பெரிய சமாதானம் இருந்தது. இரண்டு நாள் கழித்து செவ்வாய்க்கிழமை காலை வழமைபோல் முகம் கழுவும் போது வாய்க்குள் தண்ணீர் நின்று விட்டது. எனக்கு பெரிய சந்தோ~ம் இல்லாவிட்டால் வாய்க்குள் தண்ணீர் நிற்காமல் கீழே ஒழுகிவிடும் வாய் மூடுப்படாததினால். உடனே கண்ணாடியில் என் கண்ணை மூடி திறந்து பார்த்தேன் அதுவும் சரியாக வேலை செய்தது எனக்கோ பெரிய சந்தோ~ம் உடனே மனைவியிடம் ஓடிப்போய் கூறினேன். மனைவி உடனே அழுது ஜெபம் பண்ணினா. அன்றிலிருந்து ஜீவனுள்ள தேவன் இயேசுகிறிஸ்து தான் என்பதை அறிந்து வீட்டில் உள்ள எல்லா இந்து தெய்வங்களினதும் படங்கள் சிலைகள் எல்லாவற்றையும் புயசடியபந இல் கட்டி வைத்துவிட்டேன். அன்றிலிருந்து தேவாலயத்திற்கு ஒரு ஆராதனை தவறாது போய்வந்தேன். என் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு இது ஒரு பெரிய அதிசயமான ஆச்சரியமான காரியமாக இருந்தது.

இப்படியான வேளைகளில் அதிகமான போதகர்கள் செய்தி கொடுக்கும் போது கர்த்தர் என்னோடு பேசினார் என்று கூறுவார்கள். எனக்கோ ஒரே குழப்பமாக இருக்கும் ஏன் என்னோடு கர்த்தர் பேசுவதில்லை என்று பின்பு நான் யோசித்தேன் நான் ஏதும் பாவம் செய்கின்றேனோ என்று எனக்குத் தெரிந்த பாவமாகத் தோன்றின எல்லாவற்றையும் விட்டு விலகி கர்த்தர் என்னோடு பேச வேண்டும் என்று ஆவலாய் பல மாதங்கள் காத்திருந்தேன். ஒரு நாள் 1991ம் ஆண்டு ழுஉவ மாதம் 10ம் திகதி அதிகாலை நான் நித்திரை விட்டெழுந்து றுயளாசழழஅ போய்வந்து படுத்திருந்தேன் அப்பொழுது ஒரு பெரிய சத்தம் "நான் உன்னை ஆசீர்வதித்திருக்கிறேன்" என்று கேட்டது நான் பயந்து எழுந்திருந்தேன் அப்போ நேரம் 1மணி 50 நிமிடம் மீண்டும் அதே சத்தம் "நான் உன்னை ஆசீர்வதித்திருக்கிறேன் நீ ஆசீர்வாதமானவன்". மீண்டும் மூன்றாவது முறையாக அதே சத்தம் "நான் உன்னை ஆசீர்வதித்திருக்கிறேன் நீ பலருக்கு ஆசீர்வாதமாய் இருப்பாய்" . இந்த சத்தம் கேட்டு முடிய என் மனைவி நித்திரையாக படுத்திருந்தபடி கூறினா பார்த்தீங்களா காந்தன் கர்த்தர் எங்களில் எவ்வளவோ அன்பாக இருக்கிறார் என்று. அப்பொழுது நானும் உண்மை தான் என்று கூறிவிட்டு ஜெபித்துக் கொண்டே படுத்து நித்திரையாகி விட்டேன். காலையில் மனைவியிடம் கேட்டேன் இரவு ஏன் சென்னனீர் கர்த்தர் எங்களில் எவ்வளவோ அன்பாக இருக்கிறார் என்று அப்போ அவா கூறினா நான் எப்போ சொன்னனான் நான் ஒன்றும் சொல்லவில்லையே என்று. இப்போ எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது ஏன்என்றால் 100 வீதம் நான் விழிப்பாக இருந்து இந்த சம்பவங்களை எல்லாம் கேட்டேன் இவா தான் ஒன்றும் சொல்லவில்லை என்கிறா என்ன இது என்று யோசித்துக் கொண்டு காரில் வேலைக்கு போய்க்கொண்டிருந்தேன்;. இப்போ பரிசுத்தஆவியானவர் என்னோடு பேசுகிறார்
"நித்திரையாக இருந்த உன்னுடைய மனைவியைக் கொண்டு நான் உன்னோடு பேசியதை உறுதிப்படுத்தினேன்" என்று எனக்கு ஒரே சந்தோ~மும் சமாதானமும். இது இன்றைவரை மறக்கமுடியாத ஒரு பெரிய சம்பவமாக என் வாழ்க்கையில் அமைந்துவிட்டது. எனக்கு வருத்தம் சுகமானதைவிட இது தான் பெரிய அதிசயமாக இருந்தது. இந்த சம்பவத்தை பல போதகர்களோடு பகிர்ந்து கொண்டேன். அப்பொழுது அவர்கள் கூறுவார்கள் கர்த்தர் உங்களை அழைத்து அபிN~கித்திருக்கிறார் என்றும் தங்களுக்காக ஜெபிக்கும் படியும். இது மாத்திரமல்ல இன்றைவரைக்கும் என்னுடைய ஒவ்வொரு ஜெபத்துக்கும் கர்த்தர் ஆச்சரியமாகவும் அற்புதமாகவும் பதில் தந்துகொண்டிருக்கிறார்.

26வா துரடலஇ 1993ம் ஆண்டு கர்;த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வீட்டு
ஜெபக்கூட்டம் ஆரம்பமானது. வீட்டுக்கூட்டத்தில் கர்த்தர் பெரிய அதிசயங்களையும் அற்புதங்களையும் நடப்பித்தமையால் ஜனங்கள் அதிகமாக வரத் தொடங்கிவிட்டார்கள் இதனால் இடம் போதாமையால் ஒரு இடம் தேவை என ஜெபித்தோம. ஆண்டவர் ஆச்சரியமாக 25 ளுநறநடடள சுன இல் உள்ள தேவாலயத்தைக் காட்டினார். அவர்களோடு போய்க் கதைத்தோம் அப்போ அவர்கள் மிகக்குறைந்த வாடகையில் ஆராதனை நடத்த ஆலயத்தை தந்துவிட்டார்கள். துரநெ 4வா 1994 ம் ஆண்டு முதலாவது ஆராதனை ஆலயத்தில் ஆரம்பமானது அன்றிலிருந்து இன்றைவரை தேவன் தம்முடைய சர்வவல்லமையுள்ள கரத்தினால் அற்புதங்கள் அதிசயங்கள் நடப்பித்து ஆத்துமாக்களை சபையில் சேர்த்துக் கொண்டு வருகிறார். இதுவரை கர்தருடைய கிருபையால் ஐந்து பாடற்கசற்றை வெளியிட்டுள்ளோம். நூற்றுக்கும் அதிகமான இந்து கத்தோலிக்க மக்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் எடுத்து சபையில் சேர்ந்துள்ளார்கள்.

எங்களுடைய தரிசனம் வுழசழவெழ மாநகரத்தில் உள்ள இரண்டு லட்சம் தமிழ் இந்து மக்களுக்கு இயேசுவே தெய்வம் என்ற நற்செய்தியை சுவிசே~மாய் அறிவித்து இரட்சிப்புக்குள் வழிநடத்துவது. எங்கள் தாய் நாட்டில் இலங்கையில் 5 வருடங்களுக்கு ஒருமுறையாவது சென்று சுவிசே~க் கூட்டங்கள் நடத்தி இயேசுவை அறிவிப்பது. கர்த்தருக்கு சீடர்களை உருவாக்கி விடுவது. இலங்கை இந்தியா போன்ற வறுமையான தேசத்தில் ஊழியம் செய்யும் ஊழியர்களுக்கு உதவி செய்து ஊக்குவிப்பது. இன்னும் கர்த்தர் என்னென்ன செய்யச் சொல்லுகிறாரோ அதைச் செய்வது. இன்னும் முக்கியமாக ழுஉவ 14வா 1997 இல் அதிகாலை கர்த்தர் எனக்கு ஒரு தரிசனத்தைக் இரண்டு முறை காட்டினார். என்னால் அதை மறக்கமுடியவில்லை. உடனேயே எழுந்து அதை அப்படியே படமாக கீறி வைத்து விட்டேன்.

அதைக்குறித்து கர்த்தரிடம் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். அந்த தரிசனத்தை கர்த்தர் ஏற்ற வேளையில் நிறைவேற்றி சபையில் ஒரு பெரிய எழுப்புதலை கட்டளையிடுவார் என்பதில் சந்தேகமேயில்லை. ஏன்எனில் தரிசனம் தந்தவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் உண்மையுள்ளவர். ஆமென்.
Admin · 89 views · 0 comments

Permanent link to full entry

http://uyir.2k00.com/295329802997-b5/297030062975302129703007-b5-p2.htm

Comments

No Comment for this post yet...


Leave a comment

New feedback status: Awaiting moderation





Your URL will be displayed.

 
Please enter the code written in the picture.


Comment text

Options
   (Set cookies for name, email and url)