ஏக இறைவனாகிய இஸ்ரயேலரின் தேவனையும், அவரது செய்கைகள் எழுதப்பட்ட வேதாகமத்தையும் விட்டு விட்டு, கல்லாலும், மரத்தாலும், மீள் வேதங்களாலும், புரட்டு கதைகளாலும் அவரை அறிந்து கொள்ள முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?
WWW.TamilChristian.Tk
ChristianShirts.net Christian and family-friendly t-shirts





Last Comment

No Comments.

Calendar

March 2010
SunMonTueWedThuFriSat
 << < > >>
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   

news

Click to visit the home of unrestricted internet radio broadcasting






code: ChristianShirts.net Christian and family-friendly t-shirts

Who's Online?

Member: 0
Visitors: 3

Announce

rss Syndication

Choose a skin



Links

    சில பதிவ

    Posts displayed of the category: கட்டுரைகள்

    எதிர்காலம்

    மனிதர்கள் தாம் எப்போதும் எதிர்கால சிந்தையுள்ளவர்களாக காணப்படுகின்ற இயல்பை பெற்றுள்ளனர் எனலாம். அவர்களது எண்ணவலைகள் எப்போதும் எதிர்கால நலன்களை விரும்பியவாறு செல்வதையே நோக்காகக் கொண்டு அமைந்துள்ளன. தாம் என்னவாக வேண்டும் என்பதை மனிதர் சிந்திக்கும் போது எதிர்காலமானது சிறப்புடன் இருக்கவேண்டும் என்பதை அங்கீகரிப்பதுவே மனதின் நோக்கமாய் அமைந்து விடுகின்றது. சிறப்பு பெற்ற நாட்களில் வாழ்வதற்காய் மனிதன் இன்று தனது பிரதான சுமையை சுமப்பவனாகக் காணப்படுகின்றான். எதிர்கால நிலைமைகள் தமக்கு சாதகமாய் அமைந்துவிடுதல் வேண்டும் என போராடும் குணமுடைய மனிதனால் எவ்வளவு தூரம் அது சாத்தியமாகின்றது என்பதைக் கண்டறிய போதிய அவகாசம் கிடைத்துவிடுமானால் அவன் தனக்கு மிஞ்சிய சுமையை எப்போதோ கழற்றிவிட்டிருப்பான். எதிர்காலமானது ஒருவருக்கும் காத்திருப்பதை விரும்பாதது போன்று மிகவும் சீக்கிரமாய் சுழன்று திரிவதை தனக்கு வழமையாக்கிக் கொண்டிருப்பதை எதனாலும் மறுக்க முடியாது. சீக்கிரம் வந்து மறைகின்ற நாட்களில் எதிர்காலம் பிரகாசமடைவதற்காக பிரயாசப்படுகின்ற மக்களுக்குள் எவ்விதமான எண்ணங்கள் எதிர்கால நோக்கை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன என்பதை கணக்கெடுத்தால் அதனை எழுதி முடிக்க பலகோடி விக்கிபீடியாக்கள் தேவைப்படும்.  

    சுதந்திரமான எதிர்காலத்தை பெற்றிட துடித்திட்ட பலரும் சுதந்திரமாக இன்று மண்ணுக்குள் உழல்கின்றனர் என்பதை கடந்த காலம் ஒருவாறு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஞாபகங்களின் மீதியாக ஒன்று சேர்ந்த நட்புறவை நோக்கிக் கொண்டிருக்கின்ற மனதிற்கு மேலும் ஒருவகையில் எதிர்காலம் எதனை ஏற்படுத்தப் போகின்றது என்பதை கேள்விக்குறியாக எழுப்பவேண்டியுள்ளது. கடந்தவை கடந்துவிட்ட போதும் மாறாத நினைவுகள் தினமும் பூப்பூப்பதை யாரால் தடுத்து விட முடியும். அவை தினமும் மலரும் மலராக மாலையில் உதிர்ந்தும் விடுகின்றன. எனினும் நம்பிக்கை எனும் செல்வமிருந்தால் நிச்சயம் எதிர்காலம் துளிர்விடும்.
     

    சமுதாயத்தில் ஏற்படும் இன்னல்கள் பெரும்பாலும் சமூக வளர்ச்சிக்கு தடைக்கற்களாக உருவாகிக்கொண்டு இருப்பினும் அவற்றை தூக்கியெறியும் பொறுப்புமிக்க செயல்திறன் ஜனநாயக நாட்டில் அமைந்துவிடுதல் வேண்டும் என்பதை எதிர்கால பயணிகள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. எதிர்பார்ப்புக்களை மட்டும் நிர்க்கதியாக்கிவிடாத எதிர்காலம் உருவானால் அதுவே போதும் என தவமிருந்து பெற்றுவிட்டால் வாழ்வின் மைல்கல் இன்பமாயிராது. கொட்டும் பனியிலும் வாட்டும் வெயிலிலும் கருகி கந்தலாகி பிரிந்த வாழ்வில் எதிர்காலம் என்ன சொர்க்கத்திற்கு நிகரா? அப்படியே அமைந்தாலும் வாழ்வின் வசந்தத்தை அள்ளி வீசுமா? வாழ்கின்ற காலம் கசப்பாய் அமைந்தபின்னர் சொர்க்கத்தின் வசதி இன்னோரன்ன ரம்மியங்கள் இனியும் என்னத்திற்கு! துக்கத்திலும் கொடுமை அனுபவித்த எமக்கு இனியென்ன சுகம் வேண்டும் என்பதைக்கூட இரகசியமாய் கேட்பதற்கு காலம் அனுமதிக்கவில்லை என்றால் எனக்குள் மட்டுமா மனசாட்சி வாழ்கிறது என கேட்கத்தான் தோண்றுகிறது.
     

    இடர் பாதை முற்றுப்பெற காலமில்லை. அது இன்னும் மானிடரை தள்ளாடச் செய்கிற வன்மையாளன். கொடுங்கோலன். வையகத்தில் வாழ்வோரை வஞ்சகமாய் வழிகெடுக்கும் நச்சுப்பிராணி. ஆசைகளின் மேல் நப்பாசை வைத்து வாழ்விற்கிருந்த வளையலையும் கழற்றி விற்றும் வீட்டுப்பசி அடங்கவில்லை. உள்ளக் குமுறல்கள் மட்டும் வெளியே கேட்டிருந்தால் மதுரை எரித்த கண்ணகியை நினைவூட்டும் செயலிங்கு நடந்திருக்கும். எப்போதும் காணும் கண்ணாடி நிழலாட்டம் எதிரில் பிரதிபலிக்கின்ற எதிர்காலம் போலாகும். நிலவிற்கு ஒளி தரும் சூரியனிலும் எதிர்காலம் கேள்விக்குறி! வாழ்வில் அர்த்தம் தேடும் மானிடவியலாளர்களுக்கு எதிர்காலம் மறைந்ததுவோ அன்றேல் மறந்து போயிற்றோ!
     

    வேதாகமம் தரும் விடை உன் கேள்விகளுக்கு தக்க பதில். எதிர்காலத்தை அறிந்த தேவன் உன் வாழ்வினை மாற்றிடும் கர்த்தர். வாழ்வில் சுமந்து திரியும் பாரங்களை தா என்று கேட்கிறார். எதிர்காலம் கற்பனையல்லவென்று கரம் நீட்டி அழைக்கின்றார். இன்று பட்ட உபத்திரவங்களால் கலங்குகின்றாயோ எனக் கேட்டு ஆறுதல் செய்பவர் அவர்தானே. உலகம் துன்பப்படுத்தும் என்றே பரலோகத்தை காட்சிப்படுத்தி சென்றார் என்பதினால் நீண்ட துன்பியலை பிரகாசமாய் மாற்றிட ஒருவர் உண்டு என்பதை நிச்சயம் அறிந்து கொள். உன் வாழ்க்கை அவர் கரத்தில் இருந்தால் துக்கங்கள் என்ன ஒரு பொருட்டா? பாவத்திற்கு மன்னிப்பு தருவதும் அதனோடிணைந்த இலவச ஈவெனும் நித்தியஜீவனை அருளுவதும் அவருக்கு விருப்பமன்றோ? பாவத்தினால் மரித்தவர் பரிசுத்தமாய் உயிர்த்தார். மீண்டும் வருவேன் என்று சொன்னார். நிச்சயம் வருவார் எதிர்காலம் இன்றே.
    Uyiron · 13 views · Leave a comment
    Categories: தகவல்கள், கட்டுரைகள்
    04 Mar 2010

    வட்டி வாங்காதே!

    வட்டி வாங்கும் முறையை வேதாகமம் எதிர்க்கின்றது. இது ஆதிமுதலே கட்டளையிடப்பட்டிருக்கின்றது. 

    வட்டி வாங்குவதை விட்டு விட கடவுள் நேரடியாகவே பேசுகின்றார். ஏனென்றால் வட்டி வாங்கும் முறையை இறைவன் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. வட்டி  கொடுப்பதையோ வட்டி வாங்குவதையோ  கடவுள் எதிர்ப்பதினால் நாம் அதனை செய்வதற்கு கூடாது. நாம் அதிலிருந்து விடுபட வேண்டும். 

    யாத்-22:25 உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல  அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம். 

    கர்த்தருக்கு  பயப்படும் பயமானது வட்டி  வாங்குவதை தடுக்கின்றது எனலாம். சகோதரன் கையில் வட்டி  வாங்காதிருக்கும் படி வேதாகமம் தெளிவாக தேவனுடைய சத்தத்தை கூறி அறிவிக்கின்றது. இது  வேதாகமத்தில் தேவனால் அறிவிக்கப்பட்ட கட்டளையாக இருக்கின்றது.  

    லேவி-25:36 நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே  பிழைக்கும்படி செய்வாயாக. 

    பணத்தை  தானியத்தை வட்டிக்கும்  பொலிசைக்கும் கொடாதிருக்கும்படி  வேதாகமத்தில் தெளிவாகவே  தேவன் கட்டளையிடுகின்றார்.  

    லேவி-25:37 அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக. 

    சகோதரனுக்கு வட்டி கொடுப்பதை தேவன்  விரும்பவில்லை. சகோதரனுக்கு  வட்டி கொடுக்காதே! அதனை தேவன்  ஒரு போதும் விரும்பவில்லை.  

    உபா-23:19 கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக்  கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி  வாங்காயாக. 

    உன் தேவனுடைய ஆசீர்வாதத்தை நீ பெற்றுக்கொள்ள வேண்டுமானால் நீ வட்டி வாங்குவதை நிறுத்த  வேண்டும் என வேதாகமம் தெளிவாக  அறியத்தருகின்றது. ஆகவே ஆசீர்வாதமா அல்லது வட்டியா தீர்மானியுங்கள்.  

    உபா-23:20 அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம். நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டி வாங்காயாக. 

    நெகேமியா  கூறுகின்றதாவது..

    நெகே-5:10 நானும் என் சகோதரரும் என்  வேலைக்காரரும் இவ்விதமாகவா  அவர்களுக்குப் பணமும் தானியமும்  கடன்கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக. 

    தாவீது  அரசன் கூறுவதாவது...

    சங்-15:5 தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப்  பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும்  அசைக்கப்படுவதில்லை. 

    எரேமியா தீர்க்கதரிசி கூறியதாவது...

    எரே-15:10 ஐயோ! நான் அவர்களுக்கு வட்டிக்குக்  கொடுத்ததுமில்லை, அவர்கள்  எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை. 

    மீண்டுமாக இறைவன் தமது தீர்க்கதரிசிகளினூடாக இஸ்ரவேல் மக்களுக்கு வட்டியை  குறித்து அறிவிக்கும் காரியங்கள்...

    எசே-18:17 சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும்  பொலிசையும் வாங்காமலிருந்து  என் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.

    எசே-22:12 இரத்தஞ்சிந்தும்படிக்குப் பரிதானம் வாங்கினவர்கள்  உன்னில் இருக்கிறார்கள். நீ வட்டியையும் பொலிசையையும் வாங்கி, பொருளாசையினால் உன்  அயலானுக்கு இடுக்கண் செய்து, என்னை மறந்துபோனாய் என்று  கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

    Admin · 47 views · Leave a comment
    Categories: கட்டுரைகள்
    17 Nov 2009

    பிரயோஜனமானவை

    தேவனுடைய வழிகள் நிச்சயம் பயனுள்ளவை. அவை மனிதருக்கு தேவனை கண்டடையத்தக்க வழியைக் காட்டுகின்றது. அதன் மூலமாக மனிதன் தேவனை அறிய முடிகின்றது. அவ்வழிகளில் வேதாகமம் இன்றும் மக்களை தேவனண்டைக்கு வழிநடத்துகின்ற ஒன்றாக அமைந்துள்ளது. ஆதலால் தேவனுடைய வசனத்திற்கு செவிகொடுப்பது மனிதர்களாகிய எம்மேல் விழுந்த கடமையாக உள்ளது. நாம் தேவ சத்தத்திற்கு செவிகொடுப்பது அவரது சித்தத்தினை கண்டடைவதற்கு சமமானதாகும்.

    உன் வழியை பிரயோஜனப்படுத்திக் கொள்வதற்கு நீயும் ஆயத்தமாக இருந்தால் உன்னை தேவனுக்காக அர்ப்பணித்து வாழ். அவர் உன்னை மாற்றக்கூடியவர். அவர் உன்னை தம் பக்கமாக சேர்க்க விரும்புகின்றார். அவர் ஒருபோதும் உன்னை கைவிடப்போவதில்லை. அவருடைய அன்பு எப்போதும் எம்மைத் தாங்க வல்லமையுள்ளதாய் உள்ளது.

    தீத்து 3:8. இந்த வார்த்தை உண்மையுள்ளது. தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்யஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன். இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள். 
     

    மனஸ்தாபம்


    மனிதனுடைய செயல்கள் எப்போதும் தேவனுக்கு எதிரான செயல்களாகவே உள்ளது. அதன் காரணமாக தேவனுக்கு எப்போதும் மனிதன் மேலாக அன்பு கூர முடியவில்லை. ஆகையினால் மனிதனுக்கு பலவித அழிவுகள் ஏறபடுவதற்கு இறைவன் இடங் கொடுக்கின்றார். மனிதனது இருதய சிந்தனைகள் யாவும் கெட்டவையாகவும் துன்மார்க்கம் நிறைந்தும் காணப்படுகின்றன. அவன் ஒருபோதும் இறைவனை சிந்திக்கவும் இல்லை. மாறாக அவருக்கு எதிராக விக்கிரகங்களை எழுப்பினான். ஆகையினால் மனிதனுக்காக இறைவன் மனம் வருந்துகின்றார்.

    உனது செயல்களும் அவருக்கு ஏமாற்றத்தையே அளிக்கின்றது. நீ நல்ல காரியங்களை செய்யவில்லை. உன் காரியங்கள் அனைத்தும் தேவனுக் எதிராக உள்ளது. அவர் உன்னை நோக்கிப் பார்க்கின்றார். அவருக்காக நீ நல்ல காரியங்களை செய்வாயா? உன் அசுத்தங்களை விட்டுவிட்டு அவருக்காக பரிசுத்தமாய் வாழ்வாயா?

    ஆதியாகமம் 6:6. தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.

    தேவகிருபை


    எல்லாவிதத்திலும் தேவனுடைய கிருபை எமக்கு அருமையானதாக விளங்குகின்றது. தேவனுடைய கிருபையின் நிமித்தமாக நாம் தினமும் தேவனை கிட்டிச் சேர்வதற்கு உதவியாக அமைந்துள்ளது. அவருடைய கிருபையானது எம்மீது தங்குவதற்கு நமக்குள்ளான பெருமை ஒன்றுமில்லை. நம்முடைய நீதிகளாலல்ல. தேவன் நம்மீது வைத்த அன்பினாலேயே அவரது கிருபையை நாம் பெற்றுக் கொண்டோம்.

    உனக்குள்ளாகவும் தேவகிருபையை பெற்றுக்கொள்ள நீ தேவனுடைய பிள்ளையாக மாற வேண்டியது அவசியமாக உள்ளது. அவருடைய கிருபை பெரியது. அவரை அண்டிக்கொள்கின்ற யாவருக்கும் அவரது கிருபையானது இலவச ஈவாக அருளப்படுகின்றது. அதன்மூலமாக தேவனது பிள்ளையாக மாறும் வாய்ப்பு உனக்கு கிடைக்கின்றது.

    சங்கீதம் 36:7 "தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்"

    பொல்லாப்பை மாற்றும் தேவன்

    அன்று யூத ஜனங்களுக்கு எதிராக மாபெரும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஏனெனில் ஆமான் எனும் மனிதன் யூதனான மொர்த்தெகாயை விரும்பவில்லை. அவன் யூதனுக்கு எதிராக கலகம் செய்தான். ஆனாலும் அந்த அந்நிய ஆமான் யூதர்களுக்கு எதிராக போட்ட திட்டங்கள் யாவும் நடைபெற தேவன் விடவில்லை.


    உன் வாழ்வில் இயேசு இருப்பதினால் உனக்கு பொல்லாப்பு செய்ய ஒருவனாலும் கூடாது. ஆகையினால் உனக்கு எதிராக வரும் பொல்லாப்புக்களை உன் எதிரிகள் மேலேயே தேவனாகிய கர்த்தர் திருப்பி விடுவார் என்பதை அறிந்து அவருக்கு உன் உள்ளத்தைக் கொடு.



    எஸ்தர்
    8: 6.
    என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும்? என்றாள்.



    7. அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன். அவன் யூதர்மேல் தன் கையைப்போட எத்தனித்தபடியினால் அவனை மரத்தில் தூக்கிப்போட்டார்கள்.



    8. இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடுங்கள். ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற் போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.


    தேவன் ஆசீர்வதிப்பவர்

    ஆபிரகாமின்
    மகனான ஈசாக்கு தேவனையே பணிந்து வந்தான். தேவன் அவனை ஆசீர்வதித்தார். அவனுக்கு அதினிமித்தமாக எதிரிகள் பலர் உருவானார்கள். ஆயினும் எதிரிகள் மேல் தேவன் ஈசாக்குக்கு பலத்த வெற்றியை உண்டு பண்ணினார். ஆதலால் ஈசாக்கின் தேவனால் ஈசாக்கின் எதிரிகள் தோற்கடிக்கப்பட்டார்கள்.


    தேவன் உன்னை ஆசீர்வதிப்பதற்கு நீ தேவனையே தேடினால் அவர் உன்னை எப்போதும் ஆசீர்வதிப்பார். உன் ஆசீர்வாதத்தை கண்டு உனக்கெதிராக எழும்புகின்ற எதிரிகள் வீழ்ந்து போவார்கள். நீ எதிரிகள் முன் தேவனால் ஆசீர்வாதமுள்ளவனாய் திகழுவாய்.



    ஆதியாகமம்
    26: 28.
    அதற்கு
    அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம். ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம்பண்ணினோம்.



    29. நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம். நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்.


    தேவனே இறைவன்


    தேவன் எப்போதும் தமது மகிமையை வேறு யாருக்கும் கொடுக்க விரும்புவதில்லை. யாரும் அவருடைய மகிமையை பெற்றுக் கொள்ள முடியாது. ஆகையினால் தேவனுக்கு பிரதியீடாக மனிதன் செய்யும் விக்கிரகங்களை தேவன் அருவருக்கின்றார். மனிதன் அறியாமையால் தேவனுக்கு எதிராக சிலைகளை நாட்டுகையில் தேவன் எரிச்சலடைகின்றார். தேவன் தாம் படைத்த உலகில் உள்ள மனித கைவண்ணங்களான விக்கிரகங்களை உடைக்கும் படியாக அவர் சீக்கிரம் நியாயந்தீர்க்கப் போகின்றார்.



    உயிருள்ள
    தேவனை நீ கல்லால் மண்ணால் செய்தால் இறைவனுக்கு எவ்வளவு கோபம் வரும். நாளைய தினத்தை அறியாத வெறும் மனிதன் தேவனை எவ்வாறு அறிவான். ஆதலால் நீ விக்கிரகத்தை சுற்றி வருகிறாயோ. தேவ கோபம் உன்மேல் இறங்கும்.



    எசேக்கியேல்
    6:13.
    அவர்கள்
    தங்கள் நரகலான சகல விக்கிரகங்களுக்கும் மதுரவாசனையான தூபத்தைக் காட்டின ஸ்தலங்களாகிய உயர்ந்த சகல மேடுகளிலும், பர்வதங்களுடைய சகல சிகரங்களிலும், பச்சையான சகல விருட்சங்களின்கீழும், தழைத்திருக்கிற சகல கர்வாலி மரங்களின்கீழும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் நடுவிலும்  அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும்,
    அவர்களில் கொலையுண்டவர்கள் கிடக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.


    ஆரவாரத்தோடு வருகின்றார்.

    தேவன் சீக்கிரம் உலகிற்கு வரப்போகின்றார். அவர் இராஜாவாக நியாயாதிபதியாக உலகிற்கு மீண்டும் வரப்போகின்றார். அன்று கர்த்தர் வந்தபோது அவரை கொலைசெய்தவர்கள் அவரைக் காணும்படியாக சீக்கிரம் வரப்போகின்றார். சகல வல்லமையோடும் அதிகாரத்தோடும் உலகில் ஆளுகை செய்யும் தேவனாகிய கர்த்தர் அவருக்காக வாழ்ந்து மரித்தவர்களை உயிரோடு எழுப்பப் போகின்றார். அன்றிலிருந்து இன்றுவரை கிறிஸ்து தேவனுக்காக வாழ்ந்தவர்கள் உயிரோடு எழும்புவார்கள்.

    தேவனுடைய வருகையை காண்பதற்கு நீ விரும்புகின்றாயா? உன்னை அவர் பரலோகத்திலிருந்து இறங்கி வரும்போதே காண்பதற்கு நீ இப்போதே உன் அறைக்குள் சென்று தனிமையாக அவரிடம் வேண்டிக் கொள்.

    1 தெசலோனிக்கேயர் 4:16. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.


    உடன்படிக்கையின் தூதன்

    தேவனாகிய
    கர்த்தர் தம்மை ஜனங்களுக்கு காண்பிக்க விரும்புகின்றவர். ஏனெனில் ஜனங்கள் தமக்கு பிரியமானவைகளையே எப்போதும் செய்ய வேண்டும் என தேவன் விரும்புகின்றார். அவர் மனிதர்கள் மேலாக பிரியமுள்ளவர். அவருடைய காரியமானது மனிதர்கள் தேவனைக் கண்டடைய வேண்டும். அவர் உயிருள்ளவராகையால் ஏன் அவருக்கு வீணாக விக்கிரகங்களை உருவாக்க வேண்டும். அவரை நேரடியாகவே காண முடியுமே.


    உன்னுடைய
    வாழ்விலும் உயிருள்ள உண்மையான தேவனை நீ அறியாது இத்தனை நாட்களை கடத்தியிருக்கின்றாய். அவர் உயிரோடு இருக்கையில் ஏன் அவரை கல்லுக்குள்ளும் மண்ணுக்குள்ளும் பார்க்கப்போகிறாய். இன்றே உனது அறையில் அவரை நோக்கி வேண்டுதல் செய். அவர் உனக்கு தென்படுவார்.



    மல்கியா
    3:1.
    இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான். அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார். இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


    1, 2, 3, 4, 5, 6, 7  Next page