கர்த்தருக்குக் காத்திரு
உலகம் தீமையான காரியங்களை எமக்குள்ளாக திணிக்கமுடியும்.
நாம் உலகின் பாடுகளால் கலங்கிப் போகும் போது எங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையானது
எம்மில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாக காணப்படலாம். இவ்வித ஏமாற்றத்தை பெற்றுக்
கொண்டு அதற்கெதிராக பழிவாங்கும் எண்ணங்கள் சிலவேளைகளில் எம் எண்ணங்களில் ஏற்படுவது
சாதாரண விடயமானாலும் அதன் முடிவோ அபாயமானதாய் அமைந்திருக்கும். அதென்னவென்றால் நாங்கள்
எங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தீமைக்கு நாமும் தீமை செய்ய விரும்பும் போது எம்மில் தேவனுக்கேற்ற
சாயலைக் காணமுடியாது போய்விடும்.
ஏனென்றால் தேவனுடைய வார்த்தையானது தீமைக்கு தீமையை
ஏற்படுத்தவோ செய்யவோ வேண்டாம் என தெளிவுபடுத்துகின்றது. ஏனெனில் எமக்காக கர்த்தர் பதிற்
செய்வார். நாங்கள் வீணாக பழிவாங்கத் துடிக்கும் உள்ளத்தை கர்த்தருடைய கரத்தில் கொடுப்பதற்கு
முயற்சி செய்ய வேண்டும். பழிவாங்கும் எண்ணம் மறையாது தொடர்ந்து உங்களுக்குள்ளாக உருவாகிக்
கொண்டிருக்கலாம். எனினும் தேவனுடைய கரத்தில் அவ்வெண்ணத்தை ஒப்புக்கொடுப்பது சிறந்ததாய்
அமைந்திருக்கும். ஏனெனில் இரட்சிக்கும் தேவனுடைய கரம் எமக்காக கிரியை செய்யும் போது
நாம் பயப்படத் தேவையில்லை. பழிவாங்குவது தேவனுடைய விடயமாய் இருக்கின்றது. கர்த்தர்
எமக்காக யுத்தம் செய்யும் போது நாம் அமைதியாக இருந்தாலே போதுமானதாயிருக்கின்றது.
தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே. கர்த்தருக்குக்
காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார். நீதிமொழிகள் 20:22


Syndication
No Comment for this post yet...