கிறிஸ்தியான் கதை பாகம் 1 பிரிவு 2
இறுதியில் தான் விழுந்த பக்கமே கரையேறிவிட்டான்! நகரத்தை நோக்கி வேகமாக ஓடத்தொடங்கினான். அதன்பிறகு கிறிஸ்தியான் அவனைப் பார்க்கவேயில்லை! ஆனால் கிறிஸ்தியானோ இடுக்கமான வாசல் இருக்கும் திசைப்பக்கமாக மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றான். முதுகிலுள்ள சுமையின் பாரத்தினால் அவனால் கரையில் ஏற முடியாமல் தவித்தான்!
அப்போது சகாயர் என்ற ஒருவர் அங்கு வருவதை நான் என கனவில் கண்டேன். அவர் கிறிஸ்தியானைக் கண்டவுடன் நின்று, ஏனப்பா, என்ன ஆயிற்று? என்று அன்புடன் கேட்டார். நற்செய்தியாளர் என்ற மனிதர் நான் தண்டனைக்குத் தப்பும்படியாக இடுக்கமான வாசலைச் சென்றடைய வழிகாட்டினார். நான் அந்த வழியே செல்லும்போது தவறி இந்தக் குட்டைக்குள் விழுந்து விட்டேன் என்றான் கிறிஸ்தியான். நீ ஏன் கவனமாகப் போகக்கூடாது? இந்தக்குட்டையின் நடுவேதான் வரிசையாகக் கற்கள் போடப்பட்டுள்ளதே! அதை நீ பார்க்கவில்லையா? அவற்றின் மீது கால் வைத்து இந்தக் குட்டையை மிக எளிதாகக் கடந்திருக்கலாமே என்றார் சகாயர்.
நான் அவசரப்பட்டதால் அந்தக் கற்களைக் கவனிக்கவில்லை, ஐயா என்றான் கிறிஸ்தியான் வருத்தத்துடன்.
சரி சரி, உன் கையைக் கொடு என்று சொன்ன சகாயர் அவன் கையைப் பிடித்திழுத்து கரையில் சேர்த்தார்.
ஐயா, அழிவின் நகரத்திலிருந்து இடுக்கமான வாசல் செல்லும் வழியில் இந்தக் குட்டை இருக்கிறதே. இதனால் பயணம் செய்பவர்களுக்கு ஆபத்து வரக்கூடுமே. ஏன் இதுவரை இதை மூட வழி செய்யவில்லை? ஏன்று அக்கறையுடன் கேட்டான் கிறிஸ்தியான்.
இந்தக் குட்டையை மூடாமல் அப்படியே வைத்திருக்க வேண்டுமென்பது எங்கள் மன்னனின் விருப்பமல்ல. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக எத்தனையோ பேர் இதைச் சரிசெய்ய முயன்றிருக்கிறார்கள். ஆனாலும் இதைச் செப்பனிடமுடியவில்லை. ஏனென்றால் உலகிலுள்ள ஒவ்வொருவரும் தங்கள் இரட்சிப்பைக் குறித்து அவநம்பிக்கை கொள்ளும்போது அந்த எண்ணங்களே இந்தக் குட்டையை உருவாக்கின்றன. அவநம்பிக்கை எண்ணங்கள் பெருகி வருவதால் இந்தக் குட்டை எப்போதுமே நிரம்பி வழிகிறது. ஆனாலும்கூட விசுவாசத்தோடு இந்தக் குட்டையைக் கடக்க முற்படும்போது, நடுவில் போடப்பட்டுள்ள கற்களைக் கண்டுபிடித்து அதன் மூலம் மிக எளிதில் கடந்து செல்லலாம். இடுக்கமான வாசலை நெருங்குவதற்குள் பாதை சரியாகிவடும் என்ற சகாயர் கிறிஸ்தியானை வழியனுப்பி வைத்தார். இதற்குள்ளாக இளகிய நெஞ்சன் தனது கிராமத்தை அடைந்திருப்பதை நான் என் கனவில் கண்டேன். அவனுடைய நண்பர்கள் அவனைத் தேடி வந்தார்கள். சிலர் அவன் புத்தியோடு திரும்பி வந்ததற்காக அவனைப் பாராட்டினார்கள். வேறு சிலரோ அவன் துன்பங்களைக் சகிக்க முடியாமல் திரும்பி வந்ததற்காக அவனைக் கோழை என்று கூறி கேலி செய்தார்கள். சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த இளகிய நெஞ்சன் பிறகு தானும் அவர்களுடன் சேர்ந்து கிறிஸ்தியானைக் கேலி செய்யத்தொடங்கினான்!
உலக ஞானியைச் சந்தித்தல்
கிறிஸ்தியான் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது அவனை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆவலோடு குறுக்கு வழியாக வேகமாக விரைந்துவரும் ஒருவனை என் கனவில் கண்டேன். அவன் பெயர் உலகஞானி. அவன் கிறிஸ்தியானின் ஊருக்குப் பக்கத்திலிருந்த உலகஞானம் என்ற ஊரைச் சேர்ந்தவன். கிறிஸ்தியான் சுமையைத் தூக்கிக்கொண்டு தள்ளாடியபடியே நடந்து செல்லவதைக் கண்ட உலகஞானி ஏனப்பா, இந்தப் பெரிய சுமையைத் தூக்கிக்கொண்டு எங்கே போகிறாய்? என்று அக்கறையுடன் கேட்பதுபோல விசாரித்தான். ஆமாம் பெரிய சுமைதான். உலகில் வேறு யாருக்குமே இவ்வளவு பெரிய சுமை இருக்காது என்று தான் தோன்றுகிறது. அதோ தொலைவில் இருக்கிற இடுக்கமான வாசலை நோக்கிச் செல்கிறேன். அங்கே சென்றால் என்னுடைய சுமையைத் தொலைக்கும் வழி சொல்லப்படுமாம் என்றான் கிறிஸ்தியான்.
ஏனப்பா, உனக்கு மனைவி பிள்ளைகள் இருக்கிறார்களா? என்று கேட்டான் உலகஞானி. இருக்கிறார்கள். ஆனால் இந்தச் சுமை என்னை அழுத்துவதால் அவர்களைப் பற்றி என்னால் அக்கறைப்பட முடியவில்லை என்று அங்கலாய்த்தான் கிறிஸ்தியான். நான் உனக்கு ஒரு ஆலோசனை கூறுகின்றேன். நீ அதைக்கேட்பாயா? என்று கேட்டான் உலகஞானி. சொல்லும் ஐயா, நல்ல யோசனை என்றால் அதன்படி செய்யலாமே என்றான் கிறிஸ்தியான் ஆவலுடன். முதலில் நீ இந்தச் சுமையைத் தூக்கி எறிய வேண்டும். அப்போதுதான் ஆண்டவர் அளிக்கும் ஆசீர்வாதங்களை உன்னால் அனுபவிக்க முடியும் என்றான் உலகஞானி. அது சரிதான் ஐயா. அதை ஒழிக்கத்தானே நான் இவ்வாறு பயணம் செய்து கொண்டிருக்கிறேன் என்றான் கிறிஸ்தியான். அதுசரி, உனக்கு இந்தப் பாதையைச் சுட்டிக்காட்டியது யார்? என்று கேட்டான் உலக ஞானி. நற்செய்தியாளர் என்ற ஒருவர் தான் வழிகாட்டினார் என்றான் கிறிஸ்தியான்.
அடடா! அவர் உன்னை ஏமாற்றியிருக்கிறார்! இதைவிட அபாயகரமான பாதையை வேறு எங்குமே காண முடியாது! ஏற்கனவே நீ பல வேதனைகளை அனுபவித்திருக்கிறாய் போலிருக்கிறதே! ஆதே உன் ஆடையெல்லாம் சேறு! அவநம்பிக்கை குட்டையின் சேறுதானே இது? இதுதான் உன் சோதனைகளின் ஆரம்பம். நான் சொல்வதைக் கேள். நீ இன்னும் தொடர்ந்து இதே பாதையில் சென்றால் சோர்வு, வலி, பசி, கடுங்குளிர், காட்டு மிருகங்களின்அபாயம், காரிருள் போன்ற அபாயங்களைச் சந்திப்பதோடு உயிரையும்கூட இழக்க வேண்டியிருக்கும்! ஏன் யாரோ ஒருவருடைய பேச்சைக் கேட்டு உன் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்கிறாய்? என்று அனுதாபத்துடன் கேட்டான் உலகஞானி.
இந்த எல்லா வேதனைகளைக் காட்டிலும் என் சுமையே எனக்குப் பெரிய வேதனையாக இருக்கிறது ஐயா! என்றான் கிறிஸ்தியான் கவலையுடன். எல்லாம் சரிதான், ஆனால் இந்தச் சுமை எப்படி உன் முதுகில் வந்தது? என்று கேட்டான் உலகஞானி. இதோ என் கையிலிருக்கும் இந்தப் புத்தகத்தைப் படித்தபிறகுதான் என்றான் கிறிஸ்தியான். நினைத்தேன். இவ்வாறுதான் உன்னைப்போலப் பலரும் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு வேண்டாத பாதைகளில் சென்று சொல்லிமுடியாத துன்பங்களைப் பெற்றிருக்கிறார்கள். நீயாவது நான் சொல்வதைக்கேள். உன்னுடைய சுமையை மிக எளிதாகப் போக்குவதற்கான வழியை நான் கூறுகிறேன். இது மிகச் சுலபமான வழி. மிகவும் பாதுகாப்பானது! வழியெங்கும் மகிழ்ச்சிதான்! என்று ஆசைகாட்டினான் உலக ஞானி.
அப்படியா? அந்த வழியை எனக்குச் சொல்லுங்கள், ஐயா! என்று ஆவலுடன் கேட்டான் கிறிஸ்தியான். சொல்கிறேன் கேள். சற்றுத் தொலைவில் நல்லொழுக்கம் என்ற நகரம் உள்ளது. அங்கே நீதிமான் என்ற அறிஞர் வசிக்கிறார். உன்னைப்போல அநேகருடைய சுமைகளை அகற்ற அவர் வழிகாட்டியிருக்கிறார். உன்னுடைய மனக்குழப்பத்தையும் அவர் தீர்த்துவைப்பார். அவர் வீட்டில் இல்லாவிட்டால் அவரைப்போலவே புத்திசாலியான அவர் மகன் மரியாதை உனது பிரச்சனையைத் தீர்த்துவைப்பான். நீ திரும்ப ஊருக்குப் போக வேண்டியதில்லை. உனது மனைவியையும் பிள்ளைகளையும் வரவழைத்து அந்த நகரத்திலேயே மகிழ்ச்சியாக வாழலாம். அங்கே குறைந்க வருமானத்திலேயே காலம்தள்ள முடியும். மேலும் அங்குள்ளவர்கள் எல்லாருமே உத்தமர்களாயிருப்பதால் உனக்கு எந்தத் துன்பமும் வராது என்று விளக்கினான் உலக ஞானி.
இந்தப் பெரியவர் கூறுவதுதான் சரியான வழி போலத் தெரிகிறது என்று நினைத்த கிறிஸ்தியான், ஐயா, அந்த நீதிமானின் வீட்டுக்கு எப்படிச் செல்வது? என்று உற்சாகமாகக் கேட்டான். அதோ தெரிகிறதே ஒரு மலைச் சிகரம். அதன் அடிவாரத்திலுள்ள வீடுகளில் முதல் வீடுதான் அவர் வீடு என்று சுட்டிக் காட்டினான் உலக ஞானி. கிறிஸ்தியான் அவனிடம் விடைபெற்று, மலைச்சிகரத்துக்குத் திரும்பிச் செல்வதை நான் என் கனவில் கண்டேன். அவன் அந்த அடிவாரத்தை நெருங்கியபோது மலைச்சிகரத்தை நிமிர்ந்து பார்த்தேன். சிகரம் சரிந்துபோய் அவன்மீது விழுந்துவிடுவதுபோலத் தோன்றியது! பயந்து நடுங்கினான் கிறிஸ்தியான்! அவனுடைய முதுகிலிருந்த சுமையின் எடை அதிகமாகி அவனை அப்படியே அழுத்தியது! மலையிலிருந்து அடிக்கடி புறப்பட்ட அக்கினி சுவாலைகள் அவன் பயத்தை அதிகரித்தன! அவன் உடல் நடுங்கியது! வியர்வை ஆறாகப் பெருகியது! ஐயோ, உலக ஞானியின் யோசனையைக்கேட்டு மோசம் போனேனே! என்று கதறி அழுதான்.
நற்செய்தியாளருடன் இரண்டாம் சந்திப்பு
அப்போது அந்த வழியே நற்செய்தியாளர் வருவதைக் கண்டான் கிறிஸ்தியான். தான் செய்த தவறை உணர்ந்த அவன் வெட்கித் தலைகுனிந்தான்!
அவனைக் கண்டவுடன், கிறிஸ்தியானே, நீ இங்கே என்ன செய்கிறாய்? என்று கோபத்துடன் கேட்டார் நற்செய்தியாளர். ஒன்றுமே பதில்கூற முடியாமல் தலைகுனிந்தவாறே நின்றான் கிறிஸ்தியான். நான்தான் உன்னை இடுக்கமான வாசலை நோக்கிச் செல்லும் பாதையில் போகச் சொன்னேனே! நீ எப்படி வழிதவறி இங்கே வந்தாய்? என்று மீண்டும் கேட்டார் நற்செய்தியாளர்.
தயங்கியவறே நடந்ததை விவரிக்கத் துவங்கினான் கிறிஸ்தியான். நற்செய்தியாளருடன் பல குறுக்குக் கேள்விகள் கேட்டு அனைத்தையும் அறிந்து கொண்டார். கிறிஸ்தியானே, நான் சொல்லப் போவதைக் கவனமாகக் கேள். உன்னை ஏமாற்றிய உலக ஞானி இது போலப் பலரையும் நேரான பாதையிலிருந்து வழிதவற வைத்து அழிவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். அவன் கூறும் பாதையில் சென்றால் கண்டிப்பாக அழிந்துதான் போகவேண்டும்! ஆண்டவரின் வார்த்தைகளை நம்பி அவர்காட்டும் பாதையில்தான் நீ செல்ல வேண்டும். அவருடைய வார்த்தைகளை வாசிக்கிறேன் கேள். பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்க மாட்டோமென்று விலகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில், பூமியியே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவih நாம் விட்டு விலகினால் எப்படித் தப்பிப் போவோம்? (எபி.12:25 ). எனவே பரலோகத்திலிருந்து பேசுகிற ஆண்டவருக்கே நீ செவி கொடுக்க வேண்டும். இதோ இன்னொரு வசனம் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப் போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார் (எபி. 10:38 ). கிறிஸ்தியனே, நீ உன் பாதையிலிருந்து பின்வாங்கிப் போயிருக்கிறாய். இது ஆண்டவருக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காது என்று வலியுறுத்தினார் நற்செய்தியாளர்.
ஐயா, நான் தவறு செய்துவிட்டேனே என்று கிழே விழுந்து கதறி அழுதான் கிறிஸ்தியான். நற்செய்தியாளர் கைகொடுத்து அவனைத் தூக்கி விட்டார். பயப்படாதே கிறிஸ்தியான். எந்தப் பாவமும் எந்தத் தூசணமும் மனுசருக்கு மன்னிக்கப்படும்.... அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு (மத்தேயு 12:31 , யோவான் 20:27 ). உலக ஞானியைப் பற்றி ஓரிரு உண்மைகளை நான் பற்றி நல்ல அறிவு உடைவயன்தான் நல்ல குணமுடையவன்தான் நல்லொழுக்கத்துடன் வாழ்பவன்தான். ஆனாலும் அவன் சிலுவiயைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும் கூறப்படும் போதனைகளுக்குச் செவிகொடுக்காதபடியால் அவன் ஆண்டவருக்கு விரோதமானவனே. அவனது போதனையில் மூன்று தவறுகள் காணப்படுகின்றன. முதலாவது அவன் உன்னைச் சரியான பாதையிலிருந்து வழிதவற வைத்தான். இரண்டாவது சிலுவையை நீ வெறுத்துப் புறக்கணிக்கும்படி செய்தான். மூன்றாவது மரணத்துக்குச் செல்லும் பாதையில் உன்னைச் திசை திருப்பிவிட்டான் என்று விளக்கினார் நற்செய்தியாளர்.
கிறிஸ்தியான் முகத்தை மூடிக்கொண்டு அழுதான்.
ஐயா, நான் அவனுடைய முட்டாள்தனமான யோசனையைப் பின்பற்றி சரியான பாதையிலிருந்து விலகி வந்துவிட்டேனே! என்று கதறினேன். தன்னைக் காப்பற்றும்படி கெஞ்சினான்! கவபை;படதே, கிறிஸ்தியான். நீ உண்மையாகவே உன் தவறுகளை உணர்ந்தால் ஆண்டவர் உன்னை நிச்சயமாக மன்னிப்பார். வா nஐபம் செய்வோம் என்று நற்செய்தியாளர் கூறவே இருவருமாகவே முழங்காற்படியிட்டனர். கிறிஸ்தியான் தனது தவறுகளை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்டான்.
அதன்பிறகு நற்செய்தியாளர் அவன் செல்ல வேண்டிய சரியான பாதையைச் சுட்டிக்காட்டி, அவனை அன்போடு வழியனுப்பி வைத்தார். கிறிஸ்தியான் அங்குமிங்கும் பார்க்காமல் வேகமாக நடந்துசென்றான். எதிரே வருபவர்களிடம் அவன் பேச்சுக் கொடுக்கவேயில்லை! சரியான பாதையை அடைந்தவுடன் இன்னும் வேகமாக நடக்கத் துவங்கினான்!
இறுதியில் இடுக்கமான வாசலை நெருங்கிவிட்டான் கிறிஸ்தியான்! வாசல் கதவின்மீது தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கத் திறக்கப்படும் (மத்.7:7) என்று எழுதப்பட்டிருந்தது!
கிறிஸ்தியான் அதன்படி கதவைத் தட்டினான்! தயாளன் என்ற பெயருடைய நல்ல மனிதர் கதவைத் திறந்தார். யாரப்பா நீ? எங்கிருந்து வருகிறாய்? உனக்கு என்ன வேண்டும்? என்று அன்புடன் கேட்டார்.
ஐயா, நான் அழிநகரத்திலிருந்து வரும் ஒரு பாவி. பெயர் கிறிஸ்தியான். வருங்கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள நான் சீயோன் மலைக்குச் செல்லவேண்டும். அதற்கு இந்த வழியாகத்தானே போக வேண்டும்? என்று கேட்டான். ஆமாம், உள்ளே வா என்று கூறிய தயாளன் கதவை அகலமாகத் திறந்தார். கிறிஸ்தியானின் கையை வேகமாகப் பற்றி உள்ளே இழுத்தார். கதவை மீண்டும் படாரென்று மூடித் தாளிட்டார்.
இடுக்கமான வாசல் கோட்டையில் கிறிஸ்தியான்
ஏன் ஜயா, என்னை இழுத்தீர்கள்? என்று வியப்புடன் கேட்டான் கிறிஸ்தியான்.

Syndication
No Comment for this post yet...