கிறிஸ்துவிடம் வேண்டுதல்
கிறிஸ்து தம்மிடம் வேண்டிக்கொள்ள செய்யவேண்டிய காரியத்தை தாமே கூறியுள்ளார். “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் ப+ட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்”. மத்தேயு 6:6 ஜெபம்பண்ணும் போது மனுஷர் பார்க்கிற வண்ணமாக ஜெபிக்கக் கூடாது எனவும் அறை வீட்டிற்குள் சென்று அறைக் கதவைப் ப+ட்டியபின் தனிமையாக ஜெபிக்கும் படியும் இயேசு கூறுகின்றார். இயேசுவை நோக்கி ஜெபிக்கவோ வேண்டுதல் செய்யவோ குறிப்பிட்ட இடத்தை நோக்கி செல்லவேண்டிய அவசியம் இல்லை. அவரை தொழுதிட நாம் தனியான அறையையே நாட முடியும். கிறிஸ்துவிடம் நித்தியஜீவனை பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள். நீங்கள் நித்திய ஜீவனை பெற்றதற்கு அடையாளமாக உங்களுக்கு பரிசுத்த ஆவியானவரை தந்தருளுவார். பரிசுத்த ஆவியானவர் நீங்கள் நடக்கவேண்டிய வழிகளை உங்களுக்குத் தெரிவிப்பார். மேலும் தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தைகள் உங்களுக்கு உதவும். உங்கள் மேலான எல்லாவித சாபங்கள், துயரங்கள், துக்கங்கள், வியாதிகள், வறுமைகள் நீங்கும். நீங்கள் புதிதாக்கப்படுவீர்கள். உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் பரலோக இராஜ்ஜியத்திற்குரிய ஐசுவரியங்களை, பரலோக செல்வங்களை கிறிஸ்துவின் மூலமாகப் பெற்றுக்கொள்வீர்கள். கிறிஸ்து உங்கள் தேவனாயிருப்பார். அவர் உங்களை தேற்றுவார். உங்கள் விண்ணப்பங்கள் கிறிஸ்துவால் ஏற்றுக்கொள்ளப்படும். அவருடைய செய்கைகள் உங்களை தைரியப்படுத்தும். உங்களுடைய ஜெபத்தின் வல்லமையினால் நீங்கள் கேட்டுக்கொள்வது எதுவோ அவைகளை உங்களுக்கு தேவன் தந்தருளுவார். இந்த பூமியில் நீங்கள் கேட்பதை பரலோக இராஜ்ஜியத்தின் எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு உங்களுக்கு அருளுவதற்கு இறைவன் இயேசு ஆயத்தமாக இருக்கின்றார்.


Syndication
No Comment for this post yet...