விசுவாசமாயிருக்கிறவன்
இயேசுக்கிறிஸ்துவே எங்கள் விசுவாசத்தின்
பிரதான நபரானவராக இருக்கின்றார். ஏன் நாம் இயேசுவை விசுவாசிக்க வேண்டும்? இயேசு எங்களுக்காக
பிதாவினால் அனுப்பப்பட்ட தேவனுடைய குமாரன். அவரை ஏற்றுக்கொள்கின்றவர்களெல்லாம் தேவனுடைய
புத்திரராகின்ற சுவீகாரத்தைப் பெற்றுக்கொள்கின்றார்கள். எவ்வாறெனில் இயேசுவானவர் தேவனுடைய குமாரன் என ஏற்றுக்கொள்ளும்
எல்லாரையும் இயேசுக்கிறிஸ்து ஏற்றுக்கொள்கின்றார். இயேசுக்கிறிஸ்து எவர்களையெல்லாம்
ஏற்றுக்கொள்கின்றாரோ அவர்களெல்லாரும் பிதாவின் புத்திரர்களாய் இருக்கின்றார்கள். கிறிஸ்து
தாம் உலகிற்கு வந்தபோதும் உலகத்தை நியாயந்தீர்ப்பதற்கு வரவில்லை. மாறாக உலகத்திற்கு
இரட்சிப்பை அருளும்படியாக வந்தார். இந்த இரட்சிப்பானது உலகத்தில் உண்டாயிருக்கின்றது. நீண்டகாலமாக இந்த இரட்சிப்பானது இயேசுவை ஏற்றுக்கொள்ளுகின்றவர்களுக்குள்ளாக தேவனுடைய நித்தியத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது. அவரை ஏற்றுக்கொள்வதற்கு நாம் பெரிய தியாகம் ஒன்றும் செய்யவேண்டுவதில்லை. மாறாக அவர்பேரில் விசுவாசம் கொள்வதே அவரை ஏற்றுக்கொள்வதற்கான ஒரே காரியம். இதை யாருக்கும் சொல்லவேண்டுவதில்லை. மாறாக உள்ளத்தில் நாம் அவரை ஏற்றுக்கொள்ள முடியும். அவர் எம் உள்ளத்திற்குள்ளாக வரும் போது பரிசுத்த ஆவியானவர் எமக்குத் துணையாக நின்று எங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்துவார். எங்கள் பாவங்களை காண்பிப்பார். எங்கள் வாழ்வின் அசுத்தங்களை அகற்றி பரிசுத்தத்தை ஏற்படுத்திடுவார். நாம் பரிசுத்தம் அடைவோம். எங்கள் பாவங்களிலிருந்து எங்களால் விடுதலை அடைய முடியும். மந்திர சக்திகள், தீய ஆவிகள், பில்லி சூனியங்கள் எம்மை ஒன்றும் செய்யமுடியாது. ஏனெனில் நாம் ஜீவனுள்ள தேவனுக்கு பிள்ளைகளாக மாற்றப்பட்டிருக்கின்றோம். பிசாசு இத்தனை காலமும் எங்கள் கண்களை கட்டியிருந்தான். இன்று நாங்கள் பூரண விடுதலையை அனுபவிக்கின்றோம் என்று சத்தமிட முடியும். ஏனெனில் இயேசுவின் மேலாக நாம் விசுவாசம் கொள்ளும் போது எங்கள் ஜீவியமானது தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு ஏற்ற விதமாக ஆயத்தமாக்கப்படுகின்றது. புதிய ஜீவியமானது எங்களுக்குள்ளாக ஆரம்பிக்கப்படுகின்றது. அப்புதிய ஜீவியத்தின் காரணமாக பரலோக இராஜ்ஜியத்திற்கு ஏற்றவர்களாகவும் தேவனுக்கு ஏற்ற பிள்ளைகளாகவும் நாம் மாற்றப்படுகின்றோம். இன்னும் இந்த உலகத்தில் என்ன செய்ய வேண்டிக்கிடக்கின்றது. கிறிஸ்துவே தேவனை அடைவதற்கான பிரதான வாசல். அவர் நல்ல மேய்ப்பனாக இருக்கின்றார். அவருடைய கிருபையின் காலம் சீக்கிரம் முடிவடையப் போகின்றது. அக்காலம் முடிவடைவதற்கு முன்பாக அவரை அண்டிக்கொள்ளுகின்ற யாவரும் பாக்கியவான்களாயிருப்பார்கள் என வேதாகமம் கூறுகின்றது. எவ்வளவு சீக்கிரமாக இயேசுவை உங்கள் வாழ்க்கைக்கு அழைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அவர் மேலாக உங்கள் விசுவாசத்தை வைத்திடுங்கள். அப்போது நீங்கள் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க முடிவதோடு எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கையை பெற்றுக்கொள்ளவும் முடியும்.
யோவான் 12:44
அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.


Syndication
No Comment for this post yet...