10 May 2008 - 07:38:19 pm
இலங்கை தமிழ் கிறிஸ்தவர்களுக்கு என்ன உரி
இலங்கையர் பெற்றுக் கொண்ட சுதந்திரம் இன்று எந்த தனி இனம் பெற்றுக் கொண்டுள்ளது என்பது உலகம் அறிந்த உண்மை.
ஆகவே தான் ஆயுதப் போராட்ட கலாச்சாரத்தை இலங்கை அனுபவிக்க நேர்ந்தது.
ஆயுதப் போராட்டம் எனும் சொல் இப்போது சிறுபான்மை இனத்திற்குரிய இன்னொரு சொல்லாக பார்க்கப்டுகின்ற நிலையை இன்றைய சிறுபான்மை சமுதாயம் அனுபவிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த நிலையில் கிறிஸ்தவ சமுதாயம் இரண்டு பக்கங்களிலும் தன் கடமையை செய்ய வேண்டிய நிலையில் காணப்படுகின்றது. சிங்கள கிறிஸ்தவர்களும் உள்ளனர். தமிழ் கிறிஸ்தவர்களும் உள்ளனர்.
ஆனால் சிங்கள கிறிஸ்தவர்கள் சிங்கள இனத்தில் சிறுபான்மையினர். அது போல் தமிழ் கிறிஸ்தவர்கள் தமிழ் இனத்தில் சிறுபான்மையினர்.
மொத்தத்தில் இலங்கையில் கிறிஸ்தவர்கள் தங்களுக்கான இடத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் இரு இனத்திலுமுள்ள கிறிஸ்தவர்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பவேண்டியது காலத்தின் கட்டாயம்.
சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் சிங்கள இனத்தாரோடு முரண்பட வேண்டிய நிலை. ஏனெனில் சிங்கள கிறிஸ்தவ போதகர்கள் சிங்கள இனத்தாரால் கொல்லப்படும் செய்திகள் ஏலவே பலமுறை கேள்விப்பட்டுள்ள விடயம். ஆனால் இந்த நிலை தமிழினத்தில் கேள்விப்படவில்லை என்பது பெரிய விடயம்.
தமிழர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான விடயங்களை மேற்கொள்ளவி்ல்லை-இது இலங்கையில். ஆக இதே காரணத்திற்காக தமிழர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் ஒன்றாக பெரும் பான்மையினரால் பார்க்கப்படும் நிலை. (இதை பெரும்பாலும் கிறிஸ்தவ சபைகளிலும் காணலாம். அதாவது அரசியல் கலந்த கிறிஸ்தவ சபைகளில்) ஆனாலும் கிறிஸ்தவ சபைகளில் அரசியல் பற்றி (பகிரங்கமாகவோ, மறைவாகவோ) பேசுவது தடைசெய்யப்பட்டுள்ள விடயம். இது தமிழினத்தில் சரி, சிங்கள இனத்தில் சரி.
ஏனெனில் மன்னிப்பும் ஒப்புரவாகுதலுமே கிறிஸ்தவம் கற்பிக்கும் உண்மை. இந்த வகையில் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு தனியான இடம் வழங்க முன்வரவேண்டும் இலங்கை அரசு. ஆயுதப்போராட்டத்தை கிறிஸ்தவம் விரும்புவதில்லை என்ற வகையில் தமிழ் கிறிஸ்தவ இனமும் ஆயுதப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவி்ல்லை.
ஆனால் தாம் வாழவேண்டிய நிலத்தில் வாழ்வதற்கு தமிழ் கிறிஸ்தவர்களுக்கு உரிமை உள்ளது என்ற படியால் தான் இனப் போராட்டம் நடந்த போதும் அவர்கள் இரு பக்கத்திற்கும் சாய்ந்து கொடுக்க வேண்டிய நிலை இருந்தது.
ஆக கிறிஸ்தவர்களின் நிலங்கள் இன்று அபகரிக்கப்பட்டுள்ளன. ஏனைய தமிழர்களோடு கிறிஸ்தவ தமிழினமும் பேரினவாதிகளுக்கு அடிபணிய நேரிட்டது. இந்த நேரத்தில் தான் ஏனைய தமிழர்களோடு தமிழ் கிறிஸ்தவ இனத்தையும் இணைத்து பலத்த சதிகள் நடைபெற்றன. தமிழ் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை அனுபவிக்க வேண்டிய நிலை உருவானது.
ஆகவே பெரும்பான்மையோ அல்லது இலங்கை அரசோ தமிழ் கிறிஸ்தவர்களுக்கு தனியான இடத்தை வழங்கவேண்டும்.
தமிழ் கிறிஸ்தவர்கள் என்றொரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டும்.
தமிழ் கிறிஸ்தவர்கள் அனுபவித்த கஸ்டங்களுக்கு நஸ்ட ஈடு வழங்க முன்வரவேண்டும்.
தமிழ் கிறிஸ்தவர்கள் மேல் கொண்டுள்ள சந்தேகத்தை விட்டு விட வேண்டும்.
தமிழ் கிறிஸ்தவர்களுக்கு சலுகைகளை அளிக்க வேண்டும்.

Syndication
No Comment for this post yet...