துரதிஷ்டவசமான மிக நீண்ட கால போரியல் வரலாற்று நிகழ்வு பூரணமாக நிறைவடைந்துள்ளது. கிட்டத்தட்ட முப்பது வருட கால யுத்தம் மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது. இலங்கையில் உள்ளேயே இடம்பெயர்வோர் தொகை அதிகமாகியிருந்தது. ஒவ்வொர் யுத்தத்தின் பிரதிபலனாக மக்கள் தாங்கொணா துயரத்தை அடையவேண்டியிருந்தது. மக்களை பகடைக்காய்களாக வைத்து நகர்த்திக்கொண்டிருந்த தலைவர்களுக்கு யுத்தம் ஒரு பொருட்டாக தெரியவில்லை. இலங்கை அரசியல் சட்டங்கள் பெரும்பான்மை மக்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒன்றாக பெரும்பான்மை மக்களது சமயம், மொழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது. இது அரசிற்கு விரோதமான எண்ணத்தை கொண்டுவந்திருக்கின்றது எனினும் உண்மையை வெளிக்கொணர மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதானது அரசியலமைப்பிற்கு எதிரானதாகும்.
தினம் இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் மனிதம் ஒழந்ததேயொழிய வெற்றி கிடைக்கவில்லை. மண்ணுக்காக போரிட வேண்டிய அவசியம் மனிதனுக்கு ஏற்பட்டு ஏனைய மனிதரின் உயிரை பறிக்குமாயின் அது சரியான முயற்சியல்ல. வெற்றிபெற வேண்டும் என எண்ணும் மனிதனுக்கு ஏனைய மனிதர்களை அழிக்கத்தான் வேண்டும் என நினைப்பது தர்மமாகாது. ஓவ்வொரு குண்டுவெடிப்புக்களும் ஒருத்தனுக்கு பலர் எண்ணும் எண்ணிக்கையில் மனித இனத்தை மனித இனமே அழித்துக்கொண்டிருந்தது.
சமுதாயத்தை காக்க விரும்பும் தலைவர்கள் தம் ஜனங்களையும் கூடவே பிறரையும் காக்க நினைப்பர். மாறாக மக்களை கொன்று சமாதானத்தை அடைய விரும்பும் சர்வாதிகாரிகளுக்குரிய எண்ணங்கள் மக்கள் தலைவனுக்குள் இருக்கக் கூடாது. மக்களை அழிப்பதற்காக மக்களை உபயோகிக்கும் எண்ணமுள்ள தலைவர்களின் கதியை உலகம் அன்றுதொட்டு அறிந்து வந்துள்ளது. உலகின் பயங்கரவாத எண்ணங்களுள்ள தலைவர்கள் சமுதாயத்தில் மரணிக்கும் போது மக்கள் மகிழ்ச்சியடைவதில் தப்பில்லையென்பது ஓர் சுதந்திரத்தை நோக்கிய எதிர்காலத்தை கொண்டவர்களுக்கு விளங்கும். தமக்கு நிம்மதியான காலம் என மக்கள் சிந்திப்பார்களாயின் அதுவே வெற்றியாகும். இனி ஒரு தமிழனும் வெடிகுண்டை சுமந்து சாகவேண்டியதில்லை என நினைக்கும் போது தமிழருக்கும் நிம்மதி பெருமூச்சு விடலாம். தான் பெறுவதை விட இருமடங்கு துக்கத்தை இன்னொருவன் பெற வேண்டும் என எண்ணுவதும் பயங்கரவாதமே.
மக்களுக்காக போராடும் போராட்டம் நியாயமானதாக அமைந்திருத்தல் சிறப்பான மக்கள் தலைவனை உருவாக்கும். குறுகிய காலத்தில் போராட்டத்திற்காக மக்கள் இறப்பது நியாயம் குறைவாக இருந்தாலும் அதி நீண்ட காலத்திற்கு மக்கள் யுத்தத்திற்குள்ளாக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் நிலை அதைவிட பேராபத்தாகும். மக்கள் சமாதானத்திற்காக இறந்து கொண்டிருப்பதை விட ஒரே நாளில் மடிவது சரியானதே. துர்க்குணமுள்ள தலைவனின் மரணம் மேலானதாகும்.
மக்களுக்கு சமாதானத்தை கிடைக்கச்செய்ய அவர்களை அழிப்பது துரோகத்தனமாகும். பயங்கரவாதத்திற்காக அப்பாவிகள் பலியாக்கப்பட்டது சபிக்கப்பட வேண்டியது. உலகில் வசதியாக வாழ தற்கொலை செய்யும் முட்டாள்தனமான எண்ணம் தோன்றுவது நியாயமாகுமா? வர்கள் எப்போது வாழ்க்கையை அனுபவிப்பர். பிரிந்து நின்று உரிமைக்குரல் எழுப்ப முடியாது. எப்போது உரிமைக்காக சேர்ந்து இருந்து குரல் எழுப்பப்படுகிறதோ அப்போது தான் கல்மனமும் கரையக்கூடும். எதிர்ப்புக்கள் வெற்றியை ஏற்படுத்தாது. ஆயினும் அதிகாரத்திடம் நீதி கேட்பது சரியானதென மனுநீதி சோழனின் அரசவையிற் புகுந்த மாட்டின் கதை எடுத்துக் கூறும். போராடி வென்றெடுப்பது உரிமையல்ல. மாறாக உரிமையுடன் கேட்டு பெற்றுக்கொள்வதே மானிட உரிமையாகும்.
பயங்கரவாதம் பிடுங்கப்பட்டது போல அரசியல்வாதிகளின் ஆபாச, தூரநோக்கற்ற, பிரிவினைவாத எண்ணங்கள், பேச்சுக்கள், வேரோடு நீக்கப்பட வேண்டியுள்ளது. மக்களால் தெரியப்பட்டு தலைவர்களானவர்கள் மக்களை பிரித்து வைக்கும் சதிகளில் ஈடுபடுவதை சமுதாயம் அறிந்து கொள்ளும் போது உடனடியாக மக்களது உரிமைகள் வெளிப்படுவதை மானிட உரிமை அமைப்புக்கள் எடுத்துக் காட்டவேண்டியது அவசியமாகும். போராட வேண்டியது மனிதர்களுடன் அல்ல. மனிதர்கள் எதிரிகளுமல்லர். என்று மானிடன் நேசிக்கப்படுகின்றானோ அன்றே மனிதன் மதிக்கப்படுவான்.
எபேசியர் 6:12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
கிறிஸ்தவர்ளாகிய எமது போராட்டம் மனிதருடனாக அல்ல. அது கிறிஸ்துவிற்கு எதிரான சாத்தானுடனாகும். அவனே உலகின் பொல்லாத எதிரியாவான். அவன் மக்களுக்கு எதிராக செயற்பட்டு அவர்களை தேவனிடமிருந்து பிரிக்கின்றான். அவன் மக்களை பாவம் செய்ய தூண்டுகின்றான். அவன் மக்களுக்குள் கலகத்தை ஏற்படுத்துகின்றான். அவனது செய்கைகளை உலகம் அங்கீகரிக்க முடியாது. அவன் பொல்லாதவனும் பொல்லாத சேனைகளின் தலைவனுமாவான். அவனே மக்களுக்குள் தீய எண்ணங்களை விதைப்பவனாகவும் மக்களை விரோத எண்ணமுடையவர்களாகவும் மாற்றி மக்கள் தேவனிடம் செல்லாதவாறு தடுப்பவனாவான்.

18:35:08 . 05 Jun 2009

Syndication
No Comment for this post yet...