இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். உபாகமம் 28:1

Sri Lanka Christian

தனியாளா?
10 Mar 2010 

தனியாள்

தனியாள்

தனியாள்

தனியாள்

Admin · 20 views · 0 comments
துதியுங்கள்
10 Mar 2010 
கர்த்தர் தம்முடைய ஊழியரை வழிநடத்தி மிகப்பெரிய காரியங்களை செய்கின்றவர். அவருடைய ஊழியர்களால் மிகப்பெரிய காரியங்களை செய்யமுடியும். எப்போதும் தேவனுடைய ஊழியர்கள் உலகிற்கு மிகவும் சவாலாய் அமைகின்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். தேவனுடைய ஊழியக்காரன் ஒருபோதும் சோர்ந்து போவதை தேவன் ஒரு போதும் விரும்புவதில்லை. அவருடைய ராஜரீக மக்களை வழிநடத்துகின்ற ஊழியர்கள் தேவனுடைய பார்வையில் அருமையானவர்கள். தேவனுடைய மந்தையை வழிநடத்தும் மேய்ப்பர்கள் தங்களிலும் மேலாக நல்மேய்ப்பர் கிறிஸ்துவின் போர்வீரர்கள். மக்கள் எனும் மந்தையை வழிநடத்தி சாத்தான் என்னும் வஞ்சகனுக்கு எதிர்த்து போர்செய்வதே ஊழியர்களின் இவ்வுலக கடமை. எழும்பி பிரகாசிப்பதுவே தேவன் எதிர்பார்க்கும் காரியம். அவருக்கு மகிமையை செலுத்துங்கள். 
1.       அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள். கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.

 
அதிசயமானது அவருடைய நாமம். அவருடைய நாமத்தினால் அற்புதங்களை செய்யும் வல்லமை அவருடைய ஊழியர்களுக்கு உண்டு. அவருடைய ஊழியர்கள் தாங்கள் கேட்பவற்றை பெற்றுக்கொண்டதாக விசுவாசிப்பதால் தேவனுடைய உடனடி கிரியை செயல்படுவதற்கு ஏதுவாகின்றது. தேவனால் ஆகாத காரியம் ஒன்றுண்டோ? அவர் சொல்ல ஆகின்றது. அவர் கட்டளையிட நிற்கின்றது. ஆகவே அவருடைய நாமம் எத்தனை எத்தனையாய் ஜனங்களுக்கு சாட்சியை அறிவிக்கின்றது.
2.       இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.
 

உலகத்தின் ஜெயங்கள் எல்லாம் வீணாணவைகளிலேயே தங்கியுள்ளது. அதினால் பிரயோஜனம் என்ன? தேவனுடைய வார்த்தை எப்போதும் எங்களை உயிர்ப்பிக்கின்றதாயிருக்கின்றது. தேவனால் உருவாக்கப்பட்ட சூரியனும் உலகமும் அதிலுள்ள அனைத்தும் தினந்தோறும் தேவனுடைய கிரியைகளை உலகிற்கு அறிவித்து வருகின்றதல்லவோ. ஆகையினால் பூமியின் குடிகள் கர்த்தரை துதிப்பதை ஆர்வமுடன் செய்வார்களா?
3.       சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.

உலகின் அனைத்தையும் கர்த்தரே படைத்தார். அவரால் முழு உலகின் சம்பத்துக்களும் படைக்கப்பட்டன. அவரின் கைகள் மனிதரை உருவாக்கிற்று. ஒவ்வொரு மனிதர்களும் இறைவனின் சாயலிலானவர்கள் என வேதாகமம் எடுத்துரைக்கின்றது. மனிதர்களை இறைவன் தன் சாயலாக படைத்துள்ளார். இதற்கு மாறாக மனிதன் ஒரு போதும் இறைவனாக முடியாது. ஆகவே மனிதரை படைத்த இறைவன் மனிதரை விட மேலானவர். அவர் மகிமையால் பூமி நிறைகின்றதாயிருக்கின்றது. பூமியை மகிமையால் நிறைக்கின்ற அவரே உயர்ந்த தேவன்.
4.       கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர். அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.

உலகத்தின் செல்வங்களின் மிகுதியால் மனிதன் தான் செய்வது இன்னதென்று அறியாதிருக்கின்றார். காலையில் உதிர்த்து மாலையில் மறையும் மலருக்கு சமானமாய் வாழும் மனிதன் இந்த உலகில் என்னத்தை கட்டுகின்றார். மதிகேடனாக உலகத்தில் ஆசைவைத்து சொத்துக்களை சேர்த்து வைத்தாலும் அனுபவிக்கும் உரிமையை இறைவன் மட்டுமே வழங்க முடியும. இறைவனே அனுபவிக்கும் உரிமையை மனிதருக்கு அளிக்க மனிதன் இறைவனுக்கு சமமாகலாமோ?
  5. உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?

இறைவன் தம்முடைய ஓரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பி அவரை பாவத்திற்கு பலியாக மாற்றினார். அந்த மனித குமாரனான கிறிஸ்துவிற்கோ உலகில் தலை சாய்க்க இடமில்லை. அந்தளவில் மனிதர்மேல் அன்பு வைத்த இறைவன் எவ்வளவாய்த் தம்மைத் தாழ்த்தினார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவர் மிகவும் தாழ்மையுள்ளவராய் அடிக்கப்படும் ஆட்டுக்குட்டிக்கு சமானமாய் தன்னைத்தானே தாழ்த்தி பலியாக ஒப்புக்கொடுத்தார்.  
6. அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.

இந்த உலகத்தின் அதிபதிகளை நியமிப்பவர் தேவனே. சகலமும் அவரது கரங்களில் இருக்கின்றது. அவரே அனைத்திற்கு இராஜா. அவருடைய இராஜ்யமே பூமியில் நிலைநிறுத்தப்படும் என்று வேதாகமம் தீர்;க்கமாய் என்றோ அறிவித்துவிட்டது. ஆகையினால் வரப்போகும் இராஜ்யத்திற்கு அதிபதியாய் இறைவனுடன் அரசாட்சி செய்ய இப்போதே உன்னை தாழ்மைப்படுத்து. நீ எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் அவர் உன்னைக் காண்கின்றார். எவ்விதமான அசுத்தத்தையும் அவர் நீக்கிப்போட வல்லவர்.
7. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார். எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.

கர்த்தர் தமக்கு பிரியமானவனுக்கு தாம் பிரியமானபடி செய்கின்றார். அவர் செய்ய விரும்புவதே உலகத்தில் நடைபெறுகின்றது. அவரால் உலகத்தின் அனைத்து காரியங்களும் நடைபெறுகின்றது. அதனை யாரால் மாற்ற முடியும். அவர் சிறியோரை பெரிய இடத்திற்கு கொண்டுவருபவர். ஏழ்மைப்பட்டவனை பிரபுக்களோடு உட்காரப்பண்ணுகின்றவர். அவர் தம் ஜனத்தின் வேதனையை அறிந்தவர். அவரால் உன் வாழ்க்கை உயர்த்தப்படும் என்பது நிச்சயம் நீ அறிந்து கொள்ள வேண்டியது.
  8. அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.

எதிர்காலத்தை குறித்து கலங்கிக் கொண்டிருக்காதே. எதிர்காலத்தை மாற்றியமைக்கக் கூடியவர் தேவனே. அவரே சகலத்தையும் அதினதின் காலத்திற்கு தக்கதாய் செய்கின்றவர். ஆகையினால் உன் துக்கம் சந்தோஷமாய் மாறும். உன் கவலைகள் எல்லாம் மறைந்து விடும். அப்படியானால் பின்னும் இன்னே நீ ஏன் கலங்குகின்றாய். தேவனிடம் உன்னை ஒப்புக்கொடு. உன் வாழ்க்கையை தேவன் மிளிரப்பண்ணுவார்.
  9. மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.


சங்கீதம் 113லிருந்து
Uyiron · 10 views · 0 comments
மகிமை
10 Mar 2010 
 கர்த்தருக்கு பயப்படுகின்ற பயமே உலகில் மனிதருக்கு தேவையான ஒன்றாகும் எனலாம். மனிதன் தேவபயத்தை விட்டதினால் இன்று உலகத்தில் பல்வேறு வகையான அழிவுகளை உலகம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழவேண்டியவனாக மனிதன் எப்போது தன்னை மாற்றிக்கொள்ளுகின்றானோ அப்போதே தேவனுடைய சமாதானத்தை அவனால் அடைந்து கொள்ள முடியும். ஆனாலும் தேவன் எல்லாவற்றிற்கும் முன்னதாகவே அவருடைய மகிமையால் உங்களை நடத்தி வந்திருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தேவனுடைய கிருபையால் நீங்கள் அவருடைய மகிமையை அனுபவித்திருக்கின்றீர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆகையினால் கர்த்தருக்கு பயப்படும் பயமானது எப்போதும்உங்கள் வாழ்க்கையில் செயல்படவேண்டும். அதே நேரத்தில் முழுமையான உள்ளத்தால் தேவனை சேவிக்க கடமைப்பட்டுள்ளோம். தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கு அவரை சேவிப்பதையன்றி வேறு என்னத்தை இறைவன் விரும்புகின்றார். தேவன் செய்த மகிமையான கிரியைகள் எத்தனை அதிகம் என்பதை சிந்தித்து பார்ப்பீர்களாயின் தேவன் உங்களை அபரிதமாக ஆசீர்வதித்தார் என்பதை நிச்சயம் கண்டுணர்வீர்கள்.

நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள். அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். 1சாமுவேல் 12:24
Uyiron · 9 views · Leave a comment
சிறு பிள்ளை
09 Mar 2010 
சிறு பிள்ளைகளை என்னிடத்திற்கு வருவதற்கு

Uyiron · 3 views · Leave a comment
பரிசுத்தம்
06 Mar 2010 


பரிசுத்தம் என்பது பொதுவாக எல்லாரும் அறிந்த விடயம். ஏனெனில் பரிசுத்தமாய் வாழ்வதற்கான பாடத்தை கற்றுக்கொண்டவனாக மனிதன் காணப்படுகின்றான். ஆதலால் தினமும் தன்னை சுத்தப்படுத்திக் கொள்வது மனிதனது உள்ளுணர்வுடன் சம்பந்தப்பட்ட ஓர் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. தன்னையையும் தனது சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை மனிதன் பெற்றுக்கொண்டதினால் அவனது வாழ்க்கையில் சுத்தமாக வாழ விருப்பம் தெரிவிக்கின்றான். சுத்தத்தின் மூலமாக அவனது சரீரம் நலமடைவதுடன் அவனது உள்ளார்ந்த எண்ணங்களும் சிறப்புடன் உயிர்ப்படைகின்றன.

அவ்விதமாக உலகத்தின் அனைத்து உயிரினங்களும் சுத்தத்தை விரும்புகின்றன. தினமும் தாங்களை சுத்தப்படுத்தி புதிய ஜீவனாக வாழ்வதற்கு ஆர்வம் கொண்டுள்ள உலகில் எல்லாம் தினம் தினம் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

பரிசுத்தமாய் வாழ்க்கையை நாம் அமைக்க வேண்டிய அவசியத்தை வேதாகமம் நமக்கு கற்றுத்தருகின்றது. ஏனெனில் உலகினை படைத்த தேவனால் எழுதப்பட்ட வேதாகமம் பரிசுத்தத்தைப் பற்றிக் கூறுகின்றதென்றால் அதனை படைத்த இறைவனின் நோக்கத்தை வெளிப்படுத்திக் காட்டுகின்றதல்லவோ. உலகம் பரிசுத்தமாய் அமைய வேண்டும் என்பதை உலகத்தை உருவாக்கிப் படைத்தவரால் மட்டுமே கட்டளையாய் கொடுக்க முடியும். உலகத்தை படைத்த தேவனும் பரிசுத்தராய் இருக்கின்றார் என வேதாகமம் கூறுகின்றது. ஆதலால் வேதாகமத்தின் வாயிலாக பரிசுத்தத்தை பற்றிய பலவிடயங்களை எம்மால் கற்றுக்கொள்ள முடிகின்றது.

ஏழாம் நாளை பரிசுத்தப்படுத்திய தேவன். பூமியை உருவாக்கிப் படைத்த கர்த்தர் ஏழாவது நாளில் ஓய்ந்திருந்தார். ஆகவே ஏழாம் நாளை பரிசுத்தப்படுத்துகின்றார். ஆறு நாட்கள் படைக்கப்பட்ட முழு உலகின் உருவாக்கமும் ஆறாம் நாளோடு முடிவுக்கு வர ஏழாம் நாளை கர்த்தர் பரிசுத்தப்படுத்துகின்றார். ஆகவே அதன் மூலமாகத்தான் தற்போதைய வாரங்கள் உருவாகியுள்ளன. ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள் என்பது இங்கே தான் ஆரம்பிக்கப்படுகின்றன. அதனை வேதாகமம் கடைபிடிக்க உதவியுள்ளது. இதனை நடைமுறையாகக் கொண்டு யூதர்கள் ஏழாவது நாளை ஓய்வுநாளாக கடைபிடிப்பது வழக்கமாகி வந்த கட்டளையாக உள்ளது.

(“தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.” ஆதியாகமம் 2:3 “ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.” யாத்திராகமம் 20:8 “கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார். ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.” யாத்திராகமம் 20:11 “நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவேண்டும். உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.” யாத்திராகமம் 31:13 “ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக. அது உங்களுக்குப் பரிசுத்தமானது. அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன். அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.” யாத்திராகமம் 31:14 ஆறுநாளும் வேலைசெய்யலாம். ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள். அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது. ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். யாத்திராகமம் 31:15 )

தேவன் பரிசுத்தமுள்ளவராய் இருக்கின்றார். தேவனாகிய கர்த்தர் எப்போதும் பரிசுத்தமுள்ளவராயிருக்கின்றவர். ஆகையினால் பரிசுத்தமுள்ள ஓரே தேவன் அவரே. அவர் மனிதர்களை பரிசுத்தமுள்ளவர்களாக விளங்கும்படி அழைத்தார். ஆகையினால் தமக்கென ஒரு பரிசுத்த ஜாதியாக இஸ்ரவேலரை தெரிந்தெடுத்தார். அவர்களைக் கொண்டு முழு உலகினையும் பரிசுத்தப்படுத்தும் விதமாக உலகிற்கு இஸ்ரவேலரை பரிசுத்த ஜாதியாக நியமித்தார். தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர் என்பதை அறிவிக்க வேண்டிய ஜனமாக இஸ்ரவேலர் இருக்கும் போது அவர்கள் தங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தேவனுடைய கட்டளையாக காணப்பட்டது. அதன் மூலமாக தேவனை பரிசுத்தர் என்பதை உலக ஜனங்கள் கண்டுகொள்வார்கள்.

(“நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர். ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக. நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர். ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.” லேவியராகமம் 11:44-45 “ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள். நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.” லேவியராகமம் 20:7-8 கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக. நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன். லேவியராகமம் 20:26)

தேவனுடைய நாமத்தை பரிசுத்தக்குலைச்சலாக்கலாகாது. அவர் பரிசுத்தமுள்ளவர். அவர் தமது பரிசுத்தத்தில் மாட்சிமை செலுத்தி வருகின்றார். அவரது நாமத்தை அசட்டை பண்ணினால் இந்த உலகில் மாபெரும் சாபத்தை அனுபவிக்க நேரிடும் என்பதனை வேதாகமம் அறிவிக்கின்றது. அவருடைய நாமத்தை பயன்படுத்தி பொய்யாணையிடுபவர்களை அவர் தண்டிக்கின்றார். தேவனுடைய பெயரை பயன்படுத்தி பொய் கூறுகின்றவர்களை தேவன் வெறுத்துவிடுவதாக வேதாகமத்தின் மூலமாக அறிவிக்கின்றார். அவ்வாறானவர்களை தேவன் அவர்களது சந்ததியிலிருந்தே அகற்றி விடுகின்றார். ஆகையினால் கர்த்தருக்கு முன்பாக பரிசுத்தமாய் இருப்பதற்கு முயற்சிக்க வேண்டியது மனிதரது கடமையாய் காணப்படுகின்றது.

(“நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே. உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே. நான் கர்த்தர்.” லேவியராகமம் 18:21 “அதைப் புசிக்கிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால் அவன் தன் அக்கிரமத்தைச்சுமந்து, தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.” லேவியராகமம் 19:8 “என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக. நான் கர்த்தர்.” லேவியராகமம் 19:12 “தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராயிருப்பார்களாக. அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தமாயிருக்க வேண்டும்.” லேவியராகமம் 21:6 )


நாம் வாழும் தேசத்தை தீட்டுப்படுத்தக் கூடாது என வேதாகமம் எச்சரிக்கின்றது. தேசத்தை கொலைகளே தீட்டுப்படுத்துகின்றது. கொலை செய்பவர்களால் தேசமானது பரிசுத்தக்குலைச்சலாகின்றது. தேசத்தை தீட்டுப்படுத்துவது இரத்தம் எனவும் குறிப்பிடுகின்றது. இவ்விதமாய் தேசம் கொலையாளிகளால் தீட்டுப்படுமானால் அவர்களை தேசத்திலிருந்து நீக்கப்படுவதினாலேயே தேசமானது பரிசுத்தமாக்கப்படுகின்றது. தேசத்தை பரிசுத்தப்படுத்தத்தக்க முறையாக தேசத்தை தீட்டுப்படுத்தியவனின் மரணமே அமைகின்றது. ஆகையினால் தேசத்தை தீட்டுப்படுத்துகின்ற காரியங்களிலிருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. தேசத்தை பரிசுத்தமாய் வைத்திருக்கும் கடமையானது ஒவ்வொரு தேச குடிமக்களுக்கும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. தேசத்தின் பரிசுத்தத்தை அதன் குடிகளே காத்துக்கொள்ள வேண்டியதாயிருக்கின்றது.

(நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள். இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும். இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை. நீங்கள் குடியிருக்கும் என் வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்த வேண்டாம். கர்த்தராகிய நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே வாசம்பண்ணுகிறேன் என்று சொல் என்றார். எண்ணாகமம் 35:33-34)

என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருப்பீர்களாக. நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன். நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர். லேவியராகமம் 22:32
நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். உபாகமம் 7:6

Uyiron · 4 views · 0 comments
தேவ குமாரன் இயேசு
06 Mar 2010 
  1. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.
  2. வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.
  3. வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான். ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டுபோகிறான்.
  4. அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.
  5. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்.
  6. இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார். அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை.
  7. ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று  மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  8. எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள். ஆடுகள் அவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை.
  9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
 10. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
 11. நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
 12. மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான். அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.
 13. கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்.
 14. நானே நல்ல மேய்ப்பன். பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
 15. நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன். ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
 16. இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு. அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.
 17. நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
 18. ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான். நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
 19. இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று.
 20. அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பயித்தியக்காரன். ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள்.
 21. வேறே சிலர்: இவைகள் பிசாசுபிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்.
 22. பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது. மாரிகாலமுமாயிருந்தது.
 23. இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்.
 24. அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள்.
 25. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை. என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.
 26. ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.
 27. என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
 28. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.
 29. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார். அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
 30. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
 31. அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.
 32. இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
 33. யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை. நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.
 34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?
 35. தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத்  தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
 36. பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும்  இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?
 37. என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை.
 38. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.
 39. இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி,
 40. யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானங் கொடுத்துக்கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார்.
 41. அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை. ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள்.
 42. அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
(யோவான் 10:1-42)
Uyiron · 11 views · 0 comments
நல்ல மேய்ப்பன்
06 Mar 2010 

கிறிஸ்தவம் காட்டிய நல்ல மேய்ப்பன் இயேசுக் கிறிஸ்து. அவர் பூமியில் யுத்தஞ்செய்ய வரவில்லை. தம்முடைய மந்தைகளை மீட்டுக்கொள்ளும்படிக்கே வந்தார். பாவத்தில் வீழுந்து போன மனித சமுதாயத்தை பரிசுத்தப்படுத்தும் பொருட்டு அவர் வந்தார்.

ஆகையினால் போரிட்டு தனது நற்செய்தியை உலகிற்கு அறிவிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. மனிதருக்கு சமாதானத்தை அருள வந்தவாரால் எப்படி யுத்தம் செய்ய முடியும். பாவ மன்னிப்பை தரும்படி வந்தவரால் எப்படி பாவத்தை செய்ய முடியும். ஆகையினால் தான் பாவமற்றவராக சிலுவையில் மரிப்பதற்காக பாவ வழிகளை தெரிந்து கொள்ளவில்லை.

நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக தன் ஜீவனையே கொடுக்கின்றான் என்று கூறிய இயேசு அதனை செய்தும் காட்டினார் என்றால் வியப்படைவானேன்! தம்மை விசுவாசிப்பவனுக்கு தம்முடைய கிருபையை வெளிக்காண்பிக்கின்றார். அவரிடம் விசுவாம் வைப்போனுக்கு தம்முடைய பரலோக இராஜ்ஜியத்தின் வாசல்களைத் திறக்கின்றார்.

உலகையும் அதிலுள்ள ஆசைகளையும் வெறுத்து விடுங்கள் என்று கூறிய அவருக்கு இந்தப் பூமியில் தலைசாய்க்கவும் இடமிருக்கவில்லை. பூமியை படைத்த கர்த்தருக்கே மனிதன் இடம்கொடுத்து ஏற்றுக்கொள்ள அவனுக்கு மனமிருக்கவில்லை. அவரே கர்த்தர். அவராலே அனுப்பப்பட்ட ஒரே குமாரன் அவரே. சிலுவையில் தொங்கும் உலக இரட்சகர் வேதனை அனுபவித்தது உலக மக்களுக்காகவென்றால் அவரது அன்பு எத்தனை.

தாம் படைத்த மக்களை மீண்டும் மீட்டுக்கொள்ள தம்மையே பலியாக ஈந்தவரான கிறிஸ்துவின் நற்செய்தி கேட்டிட காதுகள் அடைத்துக்கொண்டனவோ. அவரை விசுவாசிப்போன் இந்த உலகம் காட்டாத உன்னதத்தை அனுபவிப்பான் என்பதனை அறியவில்லையோ.

அன்பு காட்டுங்கள் என்று கூறும் மதத்திற்காக போர்ச்சண்டை பிடித்து நற்செய்தி கூறினால் அதன் அர்த்தம் என்ன? அன்பு காட்டும் மதத்தை பரப்பாவிட்டாலும் பரவாயில்லை. போரிடாதிருங்கள் என்று கூறுவதே உச்சிதமல்லோ. ஆனால் இயேசுக் கிறிஸ்துவோ அன்பு காட்டுங்கள் என்று கூறி அன்பையும் காட்டிச் சென்ற உத்தம மகான். வேறு யார் இந்த உலகில் இதற்கு உதாரணம்? மகான்கள் இருந்தாலும் நித்திய வாழ்வை தரக்கூடிய பரிசுத்தர் வேறு யார்?

இறைவனால் கடைசியாக அனுப்பட்ட அவரது குமாரனாகிய கிறிஸ்துவே இந்த உலகின் கடைசி நற்செய்தியாளர். அவரையல்லாமல் வேறு யாரும் இந்த உலகில் தீர்க்கதரிசிகளில்லை. அவரையல்லாமல் வேறு யாரும் பரலோக இராஜ்ஜியத்தை தரப்போவதில்லை. அவரே நித்திய ஜீவன். அவரே வாழ்வு. அவருக்குப் பின்வருவோர் அவரது நாமத்தை பயன்படுத்தும் கள்ளத்தீர்க்கதரிசிகள் என்று வேதாகமம் எச்சரிக்கின்றதல்லவோ.

நல்ல மேய்ப்பன் கிறிஸ்துவின் வழியே பொருத்தமான பாதையாகும். மனிதரை பாவத்திலிருந்து மீட்டுக்கொள்ளத்தக்க வேறு யாரால் முடியும்? எல்லாம் வல்ல இறைவனான இயேசுக் கிறிஸ்துவே தேவன். அவரையன்றி இரட்சிப்பு வேறொருவராலும் இல்லை.

Uyiron · 11 views · Leave a comment
கர்த்தர் நியாயாதிபதி
06 Mar 2010 
  கர்த்தரை தேடினால் அவர் வெளிப்படுவார்;. கர்த்தரை விட்டுவிட்டால் அவரும் எம்மை கைவிட்டு விடுவார்;.

 
2 நாளாகமம் 15:2. அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, ய+தா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள். நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார். நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார். அவரை விட்டீர்களாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.

கர்த்தரை கனம் பண்ணுகிறவர்களை கர்த்தர் கனம் பண்ணுவார். அசட்டை பண்ணுபவர்களை கர்த்தரும் அசட்டை பண்ணுவார்.
1 சாமுவேல் 2:30. என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன். என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் எனறு கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தரை விட்டு வேறு விக்கிரகங்களை வணங்கி பொல்லாப்பு செய்தால் கர்த்தர் அழித்துப் போடுவார்.
உபாகமம் 4:25-26 நீங்கள் உங்களைக் கெடுத்து, யாதொரு விக்கிரகத்தையாவது யாதொரு சாயலான சுரூபத்தையாவது பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தால், நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன். நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள்.

அக்கிரமம் செய்தால் கர்த்தரால் தண்டனை.
2சாமுவேல் 7:14 நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான். அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.

கர்த்தருக்கு விரோதமாய் யுத்தம் செய்தால் உங்களுக்கு தோல்வி
2நாளாகமம்13:12 இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக யுத்தஞ்செய்யாதேயுங்கள். செய்தால் உங்களுக்குச் சித்திக்காது என்றான்.

கர்த்தரின் கட்டளை படி செய்தால் பிழைக்கலாம். செய்யாவிட்டால் அழிவு.
எசேக்கியேல்20:13 ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் வனாந்தரத்தில் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள். என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பான். அவர்களோ அவைகளில் நடவாமல், என் நியாயங்களை வெறுத்து, என் ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள். ஆதலால் அவர்களை நிர்மூலமாக்கும்படி வனாந்தரத்திலே என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.

நீதி நியாயம் செய்பவன் பிழைப்பான்.
எசேக்கியேல்33:19 துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.

மனுஷர் முன்பாக தர்மம் செய்யாதிருங்கள். மனுஷர் முன் புகழுக்காக செய்தால் இறைவனிடமிருந்து ஒன்றும் கிடைக்கப்போவதில்லை
மத்-6:1 மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

பாவிக்கு கர்த்தர் செவிகொடுப்பதில்லை.
யோவா-9:31 பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம், ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.

தேவனுக்கு பயந்தால் உன் குடும்பம் ஆசீர்வதிக்கப்படும்
யாத்-1:21 மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். 


ஆகையினால் நீங்கள் செய்யவேண்டியது...
 

1 இராஜாக்கள் 8:22-63
22. பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து:  23. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை. தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.  24. தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தை காத்தருளினீர். அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர். இந்நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர்.  25. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரரும் எனக்கு முன்பாக நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.  26. இஸ்ரவேலின் தேவனே, என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய்யென்று விளங்குவதாக. 27. தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே. நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? 28. என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்.  29. உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக. 30. உமது அடியானும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பஞ் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபத்தைக் கேட்டருளும். பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே அதை நீர் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.  31. ஒருவன் தன் அயலானுக்குக் குற்றஞ்செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன் வந்தால்;,  32. அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப்பண்ணி, அவனைக் குற்றவாளியாகத் தீர்க்கவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாய்ச் செய்து அவனை நீதிமானாக்கவும் தக்கதாய் உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக. 33. உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, இந்த ஆலயத்துக்கு நேராக உம்மை நோக்கி விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,  34. பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்கள் பிதாக்களுக்குக் நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக. 35. அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால் வானம் அடைபட்டு மழைபெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தங்களை தேவரீர் கிலேசப்படுத்துகையில் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால். 36. பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக. 37. தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்கள் சத்துருக்கள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றிகைபோடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வருகிறபோதும்,  38. உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனுஷனானாலும் தன் இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்துக்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,  39. உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,  40. தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக. 41. உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே. 42. அப்படிக்கொத்த அந்நிய ஜாதியானும், உமது நாமத்தினிமித்தம் தூரதேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம்பண்ணினால்,  43. உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக.  44. நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்துக்கும், உம்முடைய நாமத்துக்கு நான் கட்டின இந்த ஆலயத்துக்கும் நேராக்க கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினால்,  45. பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக.  46. பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே. ஆகையால் அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அந்தச் சத்துருக்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகும்போது, 47. அவர்கள் சிறைப்பட்டுப் போயிருக்கிற தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கி வேண்டுதல் செய்து,  48. தங்களைச் சிறைப்பிடித்துக்கொண்ட தங்கள் சத்துருக்களின் தேசத்திலே தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது,  49. உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து,  50. உம்முடைய ஜனங்கள் உமக்கு விரோதமாய்ச் செய்த பாவத்தையும், அவர்கள் உம்முடைய கட்டளையை மீறிய அவர்கள் துரோகங்களையும் எல்லாம் மன்னித்து, அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோகிறவர்கள் அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்குக் கிடைக்கப்பண்ணுவீராக. 51. அவர்கள் எகிப்தென்கிற இருப்புக் காளவாயின் நடுவிலிருந்து தேவரீர் புறப்படப்பண்ணின உம்முடைய ஜனமும் உம்முடைய சுதந்தரமுமாய் இருக்கிறார்களே.  52. அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது ஜனமாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக. 53. கர்த்தராகிய ஆண்டவரே, நீர் எங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணும்போது, உம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்னபடியே, தேவரீர் பூமியின் சகல ஜனங்களிலும் அவர்களை உமக்குச் சுதந்தரமாகப் பிரித்தெடுத்தீரே என்று விண்ணப்பம்பண்ணினான். 54. சாலொமோன் கர்த்தரை நோக்கி: இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்தபின்பு, அ&#
Uyiron · 4 views · 0 comments
வரலாற்று பார்வை
05 Mar 2010 
இஸ்ரவேல் தேசம் எவ்விதமாக யாருக்கு ஒப்புĨ

Uyiron · 7 views · 0 comments
மின் வேதாகமம்
04 Mar 2010 
தொடக்க காலத்தில் இறைவனால் அருளப்பட்ட வார்த்தைகள் முதலில் மோசேயால் எழுதி தொகுக்கப்பட்டதுவே முதல் பிரதி. அதனை தமிழ்வேதாகமத்தில் முதல் ஐந்து நூல்களான ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் என கூறலாம். இதனையே இன்னும் யூதர்கள் எனப்படும் இஸ்ரேலியர் தமது புனித நூலாக கருதுகின்றனர். இதற்கு யூதர்கள் கொடுத்த பெயர் தோரா என்பதாகும். தோரா என்பதற்கு நீதிச்சட்டங்கள் எனப்படும்.

மோசேயால் முதலில் எழுதப்பட்ட தோராவை யூத வழிமரபினர் பலரும் சந்ததி சந்ததியாக கைப்பட பிரதியாக்கி ஒரு எழுத்துப்பிழையும் ஏற்படாது எழுதிய வேதாகமம் மிகப் பழைமையான வரலாற்றைக் கொண்டதாகும். எழுத்துப்பிழைகள் ஏற்படுமிடத்து அப்பிரதியை எரிகின்ற விறகில் போட்டு எரித்துவிடுவது இவர்களது இன்னோர் பழக்கம். அன்று எதனை மோசே இறைவனிடமிருந்து கேட்டு எழுதினாரோ அது எவ்வித மாற்றமும் அடையாமல் தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இறைவனது கிருபையே.

ஆதியிலிருந்து மிகச்சிறந்த முறையில் பிரதியெடுக்கப்பட்டு வந்துள்ள உலகின் ஒரே நூல் இந்த தோராவாகும்.

மிகப்பழைமையான காலத்தில் ஆபிரகாமின் மூன்றாம் சந்ததியில் வந்த யாக்கோபின் குடும்பத்தார் பஞ்சத்தின் காரணத்தினால் இஸ்ரேலிலிருந்து எகிப்துக்கு சென்றனர். எகிப்தில் யூதர்கள் பலத்துவருவதை விரும்பாத எகிப்தியர்களுக்கு அவர்களை வேலையாட்களாக பாவிப்பதற்கான சந்தர்ப்பத்தை இறைவன் அளித்தார். அவ்வாறு 450 வருடங்களின் பின்னர் வரும் மோசேயால் யூதர்கள் விடுவிக்கப்பட்டு இஸ்ரேலிற்கு வருகின்ற போது இறைவன் கட்டளையிட்டவற்றை மோசே தனியாளாக எழுதுகின்றார்.

உலகின் முதலாவது நூலை எழுதிய பெருமையை மோசே பெற்றுக்கொண்டார். வேதாகமத்தில் உள்ள 66 துணைநூல்களில் முதல் 5 நூல்கள் மோசேயால் எழுதப்பட்டுள்ளன. அதன் பின்னர் வருகின்ற நூல்கள் இஸ்ரேலியரது வாழ்வில் நடந்த வரலாற்றை கூறிவருகின்றன. இவ்விதமாக பழைய ஏற்பாட்டு 39 நூல்கள் சரித்திரத்திலிருந்து சரித்திர சம்பவங்களை தருகின்றது. இங்கு கிறிஸ்துவின் குழந்தை பிறப்பு, கிறிஸ்துவின் வருகை போன்றவை தீர்க்கதரிசிகளால் தீர்க்கமாக அறிவிக்கப்பட்டும் வந்துள்ளது.

அதன் பின்னர் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் பிறப்பை நான்கு சுவிசே~ங்கள் அறிவிப்பதோடு கிறிஸ்துவின் பின்னரான சரித்திரம் தொடர்ச்சியாக புதிய ஏற்பாட்டின் 27 நூல்களிலும் இடம்பெற்று வந்துள்ளது. கடைசி நூலான வெளிப்படுத்தல் இன்னும் உலகில் நிறைவேறாத சம்பவங்களை உள்ளடக்கியுள்ளது. ஆகவே ஆரம்பம் முதல் முடிவு வரை உலகத்தின் கதையை கூறுகின்ற ஓன்றென வேதாகமம் சிறப்பு பெற்றுள்ளது.

பழைய ஏற்பாடு கூறிய தீர்க்கதரிசனங்கள் புதிய ஏற்பாட்டில் நிறைவேறியது போன்று புதிய ஏற்பாடு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை மற்றும் உலகத்தின் கடைசி முடிவை தீர்க்கதரிசனமாக அறிவிக்கின்றது.

இந்த வேதாகமம் முதலில் பைபிரஸ் எனும் காய்ந்த நானற்செடிகளில் மற்றும் தோற்சுருள்களில் எழுதப்பட்டவை. எபிரேயத்தில் எழுதப்பட்ட வேதாகமங்களே முதல் புத்தகங்களாகும். தோரா எபிரேய மொழியில் அமைந்ததுவாகும். எபிரேய பழைய ஏற்பாடும் கிரேக்க புதிய ஏற்பாட்டுடன் ஒன்று சேர்க்கப்பட்டு ஆங்கில வேதாகமங்கள் புத்தகமாக அச்சிடப்பட்டன. அவ்வாறு தமிழிலும் வேதாகமம் எபிரேய கிரேக்க பாi~களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டன. தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகமாக வேதாகமம் விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் வேதாகமத்தின் பல்வேறு தமிழ் மொழிபெயர்ப்புக்கள் காணக்கிடைக்கின்றன. விவிலிய விளக்கவுரைகளும் எழுதப்பட்டுள்ளன. வேதாகமத்தை மையமாகக் கொண்டு அநேக தமிழ் புத்தகங்கள் வெளிவரலாயின. சிங்கள மொழியிலும் காணலாம். தற்போதைய சூழலில் வேதாகமத்தின் பல பிரதிகளை இணையத்தின் வாயிலாக மின் நூல்களாகவும் காணக்கிடைக்கின்றது.

இணையத்தின் பிரவேசத்துடன் வேதாகமத்தின் பல்வேறு மொழிபெயர்ப்புக்களை இணையத்தின் வாயிலாக வாசித்தறிய முடியும். பழைய எபிரேய கிரேக்க மொழிகளோடு ஒத்துப் பார்க்கவும் முடியும். தமிழ் மொழியிலும் புதிய மொழிபெயர்ப்புக்களை இணையத்தில் காணலாம். எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வேதாகமத்தை வாசிக்கத்தக்கவர்களுக்கு அதன் வாக்கியங்களில் ஒன்றும் அறிவீனமாக இல்லை என்பதும் அவை ஊக்கமளிக்கும் வசனங்களாக உள்ளன என்பதும் விளங்கும்.

மழுப்புகின்ற வசனங்களை வேதாகமம் கையாளவில்லை. ஒவ்வொர் வசனமும் தெளிவாக வார்த்தை அறிவிக்கின்றது. அது தெளிவாக குறிப்பிட்டு சொல்கின்றதை தெளிவாக அறியலாம். இணையம் அதற்கு மிகவும் வழிவகுக்கின்றது.

இணையத்தின் ஊடாக இணைய இணைப்பில் வைத்து வாசிக்கும் வேதாகமங்களும் அதனை போல இணைய இணைப்பில்லாத நேரங்களில் பயன்படுத்தத்தக்க வேதாகமங்களும் தமிழ் மொழியில் உள்ளன. http://Uyir.tk யில் சில தளங்களை காணலாம். இணைய இணைப்பானாலும் சரி டவுன்லோடு செய்திட்ட மின் வேதாகமமானாலும் சரி வேதாகமத்தை வாசித்திட அதற்கென உபயோகிக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்துக் கோவையை இறக்கம் செய்து வின்டோஸிலுள்ள பொஃன்ட் போல்டரில் இணைப்பதன் மூலம் நீங்கள் வாசிக்கக் கூடியதாய் இருக்கும்.

இவ்வித மின் வேதாகமங்கள் இன்றைய கம்யூட்டர்களிலும் லாப்டொப்களிலும் பயன்படுத்த இலவசமாய் வழங்கப்படுகின்றன. எந்நேரமும் பயன்படுத்தத் தக்க வேதாகமத்தை எதிலும் பயன்படுத்த முடிகின்றது.

மேலும் கையடக்க தொலைபேசி வைத்திருப்பவர்களுக்காகவும் தமிழ் மொழியில் வேதாகமத்தை இறக்கம் செய்து பயன்படுத்திட முடியும். இதற்கு குறிப்பிட்ட இணையத்தை கம்யூட்டரில் இயக்கவும். http://WordofGod.in இந்த இணையத்திலிருந்து கம்யூட்டருக்கோ அல்லது மொபைல் தொலைபேசிக்கோ இறக்கம் செய்திடலாம். கம்யூட்டருக்கு இறக்கம் செய்ததை போனிற்கு அப்டேட் செய்து பயன்படுத்திடலாம்.

மொபைலில் பாவிப்பதற்கு இரண்டு வகையாக தமிழில் மொபைல் வேதாகமம் உள்ளன. ஒன்று யுனிகோட் வசதியுள்ள மொபைலில் யுனிகோட் முறையிலான மொபைல் வேதாகமம் கிடைக்கப்பெறுகின்றது. அது போல ஜாவா வசதியுள்ள யுனிகோடற்ற மொபைல் போன்களுக்கு தமிழில் தெரியும் வண்ணம் மேலுள்ள தளம் வேதாகமத்தை இறக்கம் செய்து பாவித்திட முடிகின்றது.

உலகில் எதற்கும் கிடைக்காத அளவு இடத்தை மொபைல் வேதாகமங்கள் வெறும் 02 எம்பிக்குள்ளாகவே அடக்கி உள்ளன. உங்கள் கையடக்க தொலைபேசியில் மொபைல் வேதாகமத்தை தமிழில் வாசிக்க வெறும் 2 எம்பி இடமே போதுமானதாகும்.
Uyiron · 13 views · 0 comments

1, 2, 3 ... 20 ... 40  Next page

Calendar

March 2010
SunMonTueWedThuFriSat
 << < > >>
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   

Christian News

Click to visit the home of unrestricted internet radio broadcasting


send gift items to Sri Lanka

Bangla, Devanagari, Gujarati, Gurmukhi, Kannada, Malayalam, Oriya, Roman(eng), Hindi, Telugu
Tamil Christian News in Sri Lanka. www.Tamilchristian.tk

ChristianShirts.net Christian and family-friendly t-shirts

தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது? UYIR UNICODE CHANGER


# Advertisements To Advertise on www.tamilchristian.tk sms +94775076775 or Email:tamilchristiantk@yahoo.co.in


# Advertisements To Advertise on www.tamilchristian.tk sms +94775076775 or Email:tamilchristiantk@yahoo.co.in


# Advertisements To Advertise on www.tamilchristian.tk sms +94775076775 or Email:tamilchristiantk@yahoo.co.in


# Advertisements To Advertise on www.tamilchristian.tk sms +94775076775 or Email:tamilchristiantk@yahoo.co.in
தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது? UYIR UNICODE CHANGER


# Advertisements To Advertise on www.tamilchristian.tk sms +94775076775 or Email:tamilchristiantk@yahoo.co.in

ChristianShirts.net Christian and family-friendly t-shirts

The Jerusalem Gift Shop Vertical 120x600

Who's Online?

Member: 0
Visitors: 6

Announce

Categories

Sri Lankan Christian News
தமிழ் நட
ஜெப விண்
Helping Hands
கிறிஸ்த&
சில பதிவ
பொழுது
தகவல் தெ
படமும் த

Choose a skin



rss Syndication