இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். உபாகமம் 28:1

Sri Lanka Christian

தனியாளா?
10 Mar 2010 

தனியாள்

தனியாள்

தனியாள்

தனியாள்

Admin · 13 views · 2 comments
துதியுங்கள்
10 Mar 2010 
கர்த்தர் தம்முடைய ஊழியரை வழிநடத்தி மிகப்பெரிய காரியங்களை செய்கின்றவர். அவருடைய ஊழியர்களால் மிகப்பெரிய காரியங்களை செய்யமுடியும். எப்போதும் தேவனுடைய ஊழியர்கள் உலகிற்கு மிகவும் சவாலாய் அமைகின்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். தேவனுடைய ஊழியக்காரன் ஒருபோதும் சோர்ந்து போவதை தேவன் ஒரு போதும் விரும்புவதில்லை. அவருடைய ராஜரீக மக்களை வழிநடத்துகின்ற ஊழியர்கள் தேவனுடைய பார்வையில் அருமையானவர்கள். தேவனுடைய மந்தையை வழிநடத்தும் மேய்ப்பர்கள் தங்களிலும் மேலாக நல்மேய்ப்பர் கிறிஸ்துவின் போர்வீரர்கள். மக்கள் எனும் மந்தையை வழிநடத்தி சாத்தான் என்னும் வஞ்சகனுக்கு எதிர்த்து போர்செய்வதே ஊழியர்களின் இவ்வுலக கடமை. எழும்பி பிரகாசிப்பதுவே தேவன் எதிர்பார்க்கும் காரியம். அவருக்கு மகிமையை செலுத்துங்கள். 
1.       அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள். கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.

 
அதிசயமானது அவருடைய நாமம். அவருடைய நாமத்தினால் அற்புதங்களை செய்யும் வல்லமை அவருடைய ஊழியர்களுக்கு உண்டு. அவருடைய ஊழியர்கள் தாங்கள் கேட்பவற்றை பெற்றுக்கொண்டதாக விசுவாசிப்பதால் தேவனுடைய உடனடி கிரியை செயல்படுவதற்கு ஏதுவாகின்றது. தேவனால் ஆகாத காரியம் ஒன்றுண்டோ? அவர் சொல்ல ஆகின்றது. அவர் கட்டளையிட நிற்கின்றது. ஆகவே அவருடைய நாமம் எத்தனை எத்தனையாய் ஜனங்களுக்கு சாட்சியை அறிவிக்கின்றது.
2.       இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.
 

உலகத்தின் ஜெயங்கள் எல்லாம் வீணாணவைகளிலேயே தங்கியுள்ளது. அதினால் பிரயோஜனம் என்ன? தேவனுடைய வார்த்தை எப்போதும் எங்களை உயிர்ப்பிக்கின்றதாயிருக்கின்றது. தேவனால் உருவாக்கப்பட்ட சூரியனும் உலகமும் அதிலுள்ள அனைத்தும் தினந்தோறும் தேவனுடைய கிரியைகளை உலகிற்கு அறிவித்து வருகின்றதல்லவோ. ஆகையினால் பூமியின் குடிகள் கர்த்தரை துதிப்பதை ஆர்வமுடன் செய்வார்களா?
3.       சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.

உலகின் அனைத்தையும் கர்த்தரே படைத்தார். அவரால் முழு உலகின் சம்பத்துக்களும் படைக்கப்பட்டன. அவரின் கைகள் மனிதரை உருவாக்கிற்று. ஒவ்வொரு மனிதர்களும் இறைவனின் சாயலிலானவர்கள் என வேதாகமம் எடுத்துரைக்கின்றது. மனிதர்களை இறைவன் தன் சாயலாக படைத்துள்ளார். இதற்கு மாறாக மனிதன் ஒரு போதும் இறைவனாக முடியாது. ஆகவே மனிதரை படைத்த இறைவன் மனிதரை விட மேலானவர். அவர் மகிமையால் பூமி நிறைகின்றதாயிருக்கின்றது. பூமியை மகிமையால் நிறைக்கின்ற அவரே உயர்ந்த தேவன்.
4.       கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர். அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.

உலகத்தின் செல்வங்களின் மிகுதியால் மனிதன் தான் செய்வது இன்னதென்று அறியாதிருக்கின்றார். காலையில் உதிர்த்து மாலையில் மறையும் மலருக்கு சமானமாய் வாழும் மனிதன் இந்த உலகில் என்னத்தை கட்டுகின்றார். மதிகேடனாக உலகத்தில் ஆசைவைத்து சொத்துக்களை சேர்த்து வைத்தாலும் அனுபவிக்கும் உரிமையை இறைவன் மட்டுமே வழங்க முடியும. இறைவனே அனுபவிக்கும் உரிமையை மனிதருக்கு அளிக்க மனிதன் இறைவனுக்கு சமமாகலாமோ?
  5. உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?

இறைவன் தம்முடைய ஓரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பி அவரை பாவத்திற்கு பலியாக மாற்றினார். அந்த மனித குமாரனான கிறிஸ்துவிற்கோ உலகில் தலை சாய்க்க இடமில்லை. அந்தளவில் மனிதர்மேல் அன்பு வைத்த இறைவன் எவ்வளவாய்த் தம்மைத் தாழ்த்தினார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவர் மிகவும் தாழ்மையுள்ளவராய் அடிக்கப்படும் ஆட்டுக்குட்டிக்கு சமானமாய் தன்னைத்தானே தாழ்த்தி பலியாக ஒப்புக்கொடுத்தார்.  
6. அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.

இந்த உலகத்தின் அதிபதிகளை நியமிப்பவர் தேவனே. சகலமும் அவரது கரங்களில் இருக்கின்றது. அவரே அனைத்திற்கு இராஜா. அவருடைய இராஜ்யமே பூமியில் நிலைநிறுத்தப்படும் என்று வேதாகமம் தீர்;க்கமாய் என்றோ அறிவித்துவிட்டது. ஆகையினால் வரப்போகும் இராஜ்யத்திற்கு அதிபதியாய் இறைவனுடன் அரசாட்சி செய்ய இப்போதே உன்னை தாழ்மைப்படுத்து. நீ எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் அவர் உன்னைக் காண்கின்றார். எவ்விதமான அசுத்தத்தையும் அவர் நீக்கிப்போட வல்லவர்.
7. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார். எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.

கர்த்தர் தமக்கு பிரியமானவனுக்கு தாம் பிரியமானபடி செய்கின்றார். அவர் செய்ய விரும்புவதே உலகத்தில் நடைபெறுகின்றது. அவரால் உலகத்தின் அனைத்து காரியங்களும் நடைபெறுகின்றது. அதனை யாரால் மாற்ற முடியும். அவர் சிறியோரை பெரிய இடத்திற்கு கொண்டுவருபவர். ஏழ்மைப்பட்டவனை பிரபுக்களோடு உட்காரப்பண்ணுகின்றவர். அவர் தம் ஜனத்தின் வேதனையை அறிந்தவர். அவரால் உன் வாழ்க்கை உயர்த்தப்படும் என்பது நிச்சயம் நீ அறிந்து கொள்ள வேண்டியது.
  8. அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.

எதிர்காலத்தை குறித்து கலங்கிக் கொண்டிருக்காதே. எதிர்காலத்தை மாற்றியமைக்கக் கூடியவர் தேவனே. அவரே சகலத்தையும் அதினதின் காலத்திற்கு தக்கதாய் செய்கின்றவர். ஆகையினால் உன் துக்கம் சந்தோஷமாய் மாறும். உன் கவலைகள் எல்லாம் மறைந்து விடும். அப்படியானால் பின்னும் இன்னே நீ ஏன் கலங்குகின்றாய். தேவனிடம் உன்னை ஒப்புக்கொடு. உன் வாழ்க்கையை தேவன் மிளிரப்பண்ணுவார்.
  9. மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.


சங்கீதம் 113லிருந்து
Uyiron · 5 views · 0 comments
மகிமை
10 Mar 2010 
 கர்த்தருக்கு பயப்படுகின்ற பயமே உலகில் மனிதருக்கு தேவையான ஒன்றாகும் எனலாம். மனிதன் தேவபயத்தை விட்டதினால் இன்று உலகத்தில் பல்வேறு வகையான அழிவுகளை உலகம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழவேண்டியவனாக மனிதன் எப்போது தன்னை மாற்றிக்கொள்ளுகின்றானோ அப்போதே தேவனுடைய சமாதானத்தை அவனால் அடைந்து கொள்ள முடியும். ஆனாலும் தேவன் எல்லாவற்றிற்கும் முன்னதாகவே அவருடைய மகிமையால் உங்களை நடத்தி வந்திருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தேவனுடைய கிருபையால் நீங்கள் அவருடைய மகிமையை அனுபவித்திருக்கின்றீர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆகையினால் கர்த்தருக்கு பயப்படும் பயமானது எப்போதும்உங்கள் வாழ்க்கையில் செயல்படவேண்டும். அதே நேரத்தில் முழுமையான உள்ளத்தால் தேவனை சேவிக்க கடமைப்பட்டுள்ளோம். தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கு அவரை சேவிப்பதையன்றி வேறு என்னத்தை இறைவன் விரும்புகின்றார். தேவன் செய்த மகிமையான கிரியைகள் எத்தனை அதிகம் என்பதை சிந்தித்து பார்ப்பீர்களாயின் தேவன் உங்களை அபரிதமாக ஆசீர்வதித்தார் என்பதை நிச்சயம் கண்டுணர்வீர்கள்.

நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள். அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். 1சாமுவேல் 12:24
Uyiron · 8 views · Leave a comment
சிறு பிள்ளை
09 Mar 2010 
சிறு பிள்ளைகளை என்னிடத்திற்கு வருவதற்கு

Uyiron · 2 views · Leave a comment
பரிசுத்தம்
06 Mar 2010 


பரிசுத்தம் என்பது பொதுவாக எல்லாரும் அறிந்த விடயம். ஏனெனில் பரிசுத்தமாய் வாழ்வதற்கான பாடத்தை கற்றுக்கொண்டவனாக மனிதன் காணப்படுகின்றான். ஆதலால் தினமும் தன்னை சுத்தப்படுத்திக் கொள்வது மனிதனது உள்ளுணர்வுடன் சம்பந்தப்பட்ட ஓர் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. தன்னையையும் தனது சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை மனிதன் பெற்றுக்கொண்டதினால் அவனது வாழ்க்கையில் சுத்தமாக வாழ விருப்பம் தெரிவிக்கின்றான். சுத்தத்தின் மூலமாக அவனது சரீரம் நலமடைவதுடன் அவனது உள்ளார்ந்த எண்ணங்களும் சிறப்புடன் உயிர்ப்படைகின்றன.

அவ்விதமாக உலகத்தின் அனைத்து உயிரினங்களும் சுத்தத்தை விரும்புகின்றன. தினமும் தாங்களை சுத்தப்படுத்தி புதிய ஜீவனாக வாழ்வதற்கு ஆர்வம் கொண்டுள்ள உலகில் எல்லாம் தினம் தினம் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

பரிசுத்தமாய் வாழ்க்கையை நாம் அமைக்க வேண்டிய அவசியத்தை வேதாகமம் நமக்கு கற்றுத்தருகின்றது. ஏனெனில் உலகினை படைத்த தேவனால் எழுதப்பட்ட வேதாகமம் பரிசுத்தத்தைப் பற்றிக் கூறுகின்றதென்றால் அதனை படைத்த இறைவனின் நோக்கத்தை வெளிப்படுத்திக் காட்டுகின்றதல்லவோ. உலகம் பரிசுத்தமாய் அமைய வேண்டும் என்பதை உலகத்தை உருவாக்கிப் படைத்தவரால் மட்டுமே கட்டளையாய் கொடுக்க முடியும். உலகத்தை படைத்த தேவனும் பரிசுத்தராய் இருக்கின்றார் என வேதாகமம் கூறுகின்றது. ஆதலால் வேதாகமத்தின் வாயிலாக பரிசுத்தத்தை பற்றிய பலவிடயங்களை எம்மால் கற்றுக்கொள்ள முடிகின்றது.

ஏழாம் நாளை பரிசுத்தப்படுத்திய தேவன். பூமியை உருவாக்கிப் படைத்த கர்த்தர் ஏழாவது நாளில் ஓய்ந்திருந்தார். ஆகவே ஏழாம் நாளை பரிசுத்தப்படுத்துகின்றார். ஆறு நாட்கள் படைக்கப்பட்ட முழு உலகின் உருவாக்கமும் ஆறாம் நாளோடு முடிவுக்கு வர ஏழாம் நாளை கர்த்தர் பரிசுத்தப்படுத்துகின்றார். ஆகவே அதன் மூலமாகத்தான் தற்போதைய வாரங்கள் உருவாகியுள்ளன. ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள் என்பது இங்கே தான் ஆரம்பிக்கப்படுகின்றன. அதனை வேதாகமம் கடைபிடிக்க உதவியுள்ளது. இதனை நடைமுறையாகக் கொண்டு யூதர்கள் ஏழாவது நாளை ஓய்வுநாளாக கடைபிடிப்பது வழக்கமாகி வந்த கட்டளையாக உள்ளது.

(“தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.” ஆதியாகமம் 2:3 “ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.” யாத்திராகமம் 20:8 “கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார். ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.” யாத்திராகமம் 20:11 “நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவேண்டும். உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.” யாத்திராகமம் 31:13 “ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக. அது உங்களுக்குப் பரிசுத்தமானது. அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன். அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.” யாத்திராகமம் 31:14 ஆறுநாளும் வேலைசெய்யலாம். ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள். அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது. ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். யாத்திராகமம் 31:15 )

தேவன் பரிசுத்தமுள்ளவராய் இருக்கின்றார். தேவனாகிய கர்த்தர் எப்போதும் பரிசுத்தமுள்ளவராயிருக்கின்றவர். ஆகையினால் பரிசுத்தமுள்ள ஓரே தேவன் அவரே. அவர் மனிதர்களை பரிசுத்தமுள்ளவர்களாக விளங்கும்படி அழைத்தார். ஆகையினால் தமக்கென ஒரு பரிசுத்த ஜாதியாக இஸ்ரவேலரை தெரிந்தெடுத்தார். அவர்களைக் கொண்டு முழு உலகினையும் பரிசுத்தப்படுத்தும் விதமாக உலகிற்கு இஸ்ரவேலரை பரிசுத்த ஜாதியாக நியமித்தார். தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர் என்பதை அறிவிக்க வேண்டிய ஜனமாக இஸ்ரவேலர் இருக்கும் போது அவர்கள் தங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தேவனுடைய கட்டளையாக காணப்பட்டது. அதன் மூலமாக தேவனை பரிசுத்தர் என்பதை உலக ஜனங்கள் கண்டுகொள்வார்கள்.

(“நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர். ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக. நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர். ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.” லேவியராகமம் 11:44-45 “ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள். நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.” லேவியராகமம் 20:7-8 கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக. நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன். லேவியராகமம் 20:26)

தேவனுடைய நாமத்தை பரிசுத்தக்குலைச்சலாக்கலாகாது. அவர் பரிசுத்தமுள்ளவர். அவர் தமது பரிசுத்தத்தில் மாட்சிமை செலுத்தி வருகின்றார். அவரது நாமத்தை அசட்டை பண்ணினால் இந்த உலகில் மாபெரும் சாபத்தை அனுபவிக்க நேரிடும் என்பதனை வேதாகமம் அறிவிக்கின்றது. அவருடைய நாமத்தை பயன்படுத்தி பொய்யாணையிடுபவர்களை அவர் தண்டிக்கின்றார். தேவனுடைய பெயரை பயன்படுத்தி பொய் கூறுகின்றவர்களை தேவன் வெறுத்துவிடுவதாக வேதாகமத்தின் மூலமாக அறிவிக்கின்றார். அவ்வாறானவர்களை தேவன் அவர்களது சந்ததியிலிருந்தே அகற்றி விடுகின்றார். ஆகையினால் கர்த்தருக்கு முன்பாக பரிசுத்தமாய் இருப்பதற்கு முயற்சிக்க வேண்டியது மனிதரது கடமையாய் காணப்படுகின்றது.

(“நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே. உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே. நான் கர்த்தர்.” லேவியராகமம் 18:21 “அதைப் புசிக்கிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால் அவன் தன் அக்கிரமத்தைச்சுமந்து, தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.” லேவியராகமம் 19:8 “என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக. நான் கர்த்தர்.” லேவியராகமம் 19:12 “தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராயிருப்பார்களாக. அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தமாயிருக்க வேண்டும்.” லேவியராகமம் 21:6 )


நாம் வாழும் தேசத்தை தீட்டுப்படுத்தக் கூடாது என வேதாகமம் எச்சரிக்கின்றது. தேசத்தை கொலைகளே தீட்டுப்படுத்துகின்றது. கொலை செய்பவர்களால் தேசமானது பரிசுத்தக்குலைச்சலாகின்றது. தேசத்தை தீட்டுப்படுத்துவது இரத்தம் எனவும் குறிப்பிடுகின்றது. இவ்விதமாய் தேசம் கொலையாளிகளால் தீட்டுப்படுமானால் அவர்களை தேசத்திலிருந்து நீக்கப்படுவதினாலேயே தேசமானது பரிசுத்தமாக்கப்படுகின்றது. தேசத்தை பரிசுத்தப்படுத்தத்தக்க முறையாக தேசத்தை தீட்டுப்படுத்தியவனின் மரணமே அமைகின்றது. ஆகையினால் தேசத்தை தீட்டுப்படுத்துகின்ற காரியங்களிலிருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. தேசத்தை பரிசுத்தமாய் வைத்திருக்கும் கடமையானது ஒவ்வொரு தேச குடிமக்களுக்கும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. தேசத்தின் பரிசுத்தத்தை அதன் குடிகளே காத்துக்கொள்ள வேண்டியதாயிருக்கின்றது.

(நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள். இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும். இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை. நீங்கள் குடியிருக்கும் என் வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்த வேண்டாம். கர்த்தராகிய நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே வாசம்பண்ணுகிறேன் என்று சொல் என்றார். எண்ணாகமம் 35:33-34)

என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருப்பீர்களாக. நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன். நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர். லேவியராகமம் 22:32
நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். உபாகமம் 7:6

Uyiron · 3 views · 0 comments
தேவ குமாரன் இயேசு
06 Mar 2010 
  1. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.
  2. வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.
  3. வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான். ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டுபோகிறான்.
  4. அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.
  5. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்.
  6. இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார். அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை.
  7. ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று  மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  8. எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள். ஆடுகள் அவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை.
  9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
 10. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
 11. நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
 12. மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான். அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.
 13. கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்.
 14. நானே நல்ல மேய்ப்பன். பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
 15. நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன். ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
 16. இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு. அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.
 17. நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
 18. ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான். நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
 19. இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று.
 20. அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பயித்தியக்காரன். ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள்.
 21. வேறே சிலர்: இவைகள் பிசாசுபிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்.
 22. பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது. மாரிகாலமுமாயிருந்தது.
 23. இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்.
 24. அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள்.
 25. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை. என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.
 26. ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.
 27. என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
 28. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.
 29. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார். அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
 30. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
 31. அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.
 32. இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
 33. யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை. நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.
 34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?
 35. தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத்  தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
 36. பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும்  இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?
 37. என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை.
 38. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.
 39. இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி,
 40. யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானங் கொடுத்துக்கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார்.
 41. அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை. ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள்.
 42. அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
(யோவான் 10:1-42)
Uyiron · 9 views · 0 comments
நல்ல மேய்ப்பன்
06 Mar 2010 

கிறிஸ்தவம் காட்டிய நல்ல மேய்ப்பன் இயேசுக் கிறிஸ்து. அவர் பூமியில் யுத்தஞ்செய்ய வரவில்லை. தம்முடைய மந்தைகளை மீட்டுக்கொள்ளும்படிக்கே வந்தார். பாவத்தில் வீழுந்து போன மனித சமுதாயத்தை பரிசுத்தப்படுத்தும் பொருட்டு அவர் வந்தார்.

ஆகையினால் போரிட்டு தனது நற்செய்தியை உலகிற்கு அறிவிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. மனிதருக்கு சமாதானத்தை அருள வந்தவாரால் எப்படி யுத்தம் செய்ய முடியும். பாவ மன்னிப்பை தரும்படி வந்தவரால் எப்படி பாவத்தை செய்ய முடியும். ஆகையினால் தான் பாவமற்றவராக சிலுவையில் மரிப்பதற்காக பாவ வழிகளை தெரிந்து கொள்ளவில்லை.

நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக தன் ஜீவனையே கொடுக்கின்றான் என்று கூறிய இயேசு அதனை செய்தும் காட்டினார் என்றால் வியப்படைவானேன்! தம்மை விசுவாசிப்பவனுக்கு தம்முடைய கிருபையை வெளிக்காண்பிக்கின்றார். அவரிடம் விசுவாம் வைப்போனுக்கு தம்முடைய பரலோக இராஜ்ஜியத்தின் வாசல்களைத் திறக்கின்றார்.

உலகையும் அதிலுள்ள ஆசைகளையும் வெறுத்து விடுங்கள் என்று கூறிய அவருக்கு இந்தப் பூமியில் தலைசாய்க்கவும் இடமிருக்கவில்லை. பூமியை படைத்த கர்த்தருக்கே மனிதன் இடம்கொடுத்து ஏற்றுக்கொள்ள அவனுக்கு மனமிருக்கவில்லை. அவரே கர்த்தர். அவராலே அனுப்பப்பட்ட ஒரே குமாரன் அவரே. சிலுவையில் தொங்கும் உலக இரட்சகர் வேதனை அனுபவித்தது உலக மக்களுக்காகவென்றால் அவரது அன்பு எத்தனை.

தாம் படைத்த மக்களை மீண்டும் மீட்டுக்கொள்ள தம்மையே பலியாக ஈந்தவரான கிறிஸ்துவின் நற்செய்தி கேட்டிட காதுகள் அடைத்துக்கொண்டனவோ. அவரை விசுவாசிப்போன் இந்த உலகம் காட்டாத உன்னதத்தை அனுபவிப்பான் என்பதனை அறியவில்லையோ.

அன்பு காட்டுங்கள் என்று கூறும் மதத்திற்காக போர்ச்சண்டை பிடித்து நற்செய்தி கூறினால் அதன் அர்த்தம் என்ன? அன்பு காட்டும் மதத்தை பரப்பாவிட்டாலும் பரவாயில்லை. போரிடாதிருங்கள் என்று கூறுவதே உச்சிதமல்லோ. ஆனால் இயேசுக் கிறிஸ்துவோ அன்பு காட்டுங்கள் என்று கூறி அன்பையும் காட்டிச் சென்ற உத்தம மகான். வேறு யார் இந்த உலகில் இதற்கு உதாரணம்? மகான்கள் இருந்தாலும் நித்திய வாழ்வை தரக்கூடிய பரிசுத்தர் வேறு யார்?

இறைவனால் கடைசியாக அனுப்பட்ட அவரது குமாரனாகிய கிறிஸ்துவே இந்த உலகின் கடைசி நற்செய்தியாளர். அவரையல்லாமல் வேறு யாரும் இந்த உலகில் தீர்க்கதரிசிகளில்லை. அவரையல்லாமல் வேறு யாரும் பரலோக இராஜ்ஜியத்தை தரப்போவதில்லை. அவரே நித்திய ஜீவன். அவரே வாழ்வு. அவருக்குப் பின்வருவோர் அவரது நாமத்தை பயன்படுத்தும் கள்ளத்தீர்க்கதரிசிகள் என்று வேதாகமம் எச்சரிக்கின்றதல்லவோ.

நல்ல மேய்ப்பன் கிறிஸ்துவின் வழியே பொருத்தமான பாதையாகும். மனிதரை பாவத்திலிருந்து மீட்டுக்கொள்ளத்தக்க வேறு யாரால் முடியும்? எல்லாம் வல்ல இறைவனான இயேசுக் கிறிஸ்துவே தேவன். அவரையன்றி இரட்சிப்பு வேறொருவராலும் இல்லை.

Uyiron · 9 views · Leave a comment
கர்த்தர் நியாயாதிபதி
06 Mar 2010 
  கர்த்தரை தேடினால் அவர் வெளிப்படுவார்;. கர்த்தரை விட்டுவிட்டால் அவரும் எம்மை கைவிட்டு விடுவார்;.

 
2 நாளாகமம் 15:2. அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, ய+தா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள். நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார். நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார். அவரை விட்டீர்களாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.

கர்த்தரை கனம் பண்ணுகிறவர்களை கர்த்தர் கனம் பண்ணுவார். அசட்டை பண்ணுபவர்களை கர்த்தரும் அசட்டை பண்ணுவார்.
1 சாமுவேல் 2:30. என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன். என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் எனறு கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தரை விட்டு வேறு விக்கிரகங்களை வணங்கி பொல்லாப்பு செய்தால் கர்த்தர் அழித்துப் போடுவார்.
உபாகமம் 4:25-26 நீங்கள் உங்களைக் கெடுத்து, யாதொரு விக்கிரகத்தையாவது யாதொரு சாயலான சுரூபத்தையாவது பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தால், நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன். நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள்.

அக்கிரமம் செய்தால் கர்த்தரால் தண்டனை.
2சாமுவேல் 7:14 நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான். அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.

கர்த்தருக்கு விரோதமாய் யுத்தம் செய்தால் உங்களுக்கு தோல்வி
2நாளாகமம்13:12 இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக யுத்தஞ்செய்யாதேயுங்கள். செய்தால் உங்களுக்குச் சித்திக்காது என்றான்.

கர்த்தரின் கட்டளை படி செய்தால் பிழைக்கலாம். செய்யாவிட்டால் அழிவு.
எசேக்கியேல்20:13 ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் வனாந்தரத்தில் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள். என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பான். அவர்களோ அவைகளில் நடவாமல், என் நியாயங்களை வெறுத்து, என் ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள். ஆதலால் அவர்களை நிர்மூலமாக்கும்படி வனாந்தரத்திலே என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.

நீதி நியாயம் செய்பவன் பிழைப்பான்.
எசேக்கியேல்33:19 துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.

மனுஷர் முன்பாக தர்மம் செய்யாதிருங்கள். மனுஷர் முன் புகழுக்காக செய்தால் இறைவனிடமிருந்து ஒன்றும் கிடைக்கப்போவதில்லை
மத்-6:1 மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

பாவிக்கு கர்த்தர் செவிகொடுப்பதில்லை.
யோவா-9:31 பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம், ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.

தேவனுக்கு பயந்தால் உன் குடும்பம் ஆசீர்வதிக்கப்படும்
யாத்-1:21 மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். 


ஆகையினால் நீங்கள் செய்யவேண்டியது...
 

1 இராஜாக்கள் 8:22-63
22. பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து:  23. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை. தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.  24. தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தை காத்தருளினீர். அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர். இந்நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர்.  25. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரரும் எனக்கு முன்பாக நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.  26. இஸ்ரவேலின் தேவனே, என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய்யென்று விளங்குவதாக. 27. தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே. நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? 28. என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்.  29. உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக. 30. உமது அடியானும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பஞ் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபத்தைக் கேட்டருளும். பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே அதை நீர் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.  31. ஒருவன் தன் அயலானுக்குக் குற்றஞ்செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன் வந்தால்;,  32. அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப்பண்ணி, அவனைக் குற்றவாளியாகத் தீர்க்கவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாய்ச் செய்து அவனை நீதிமானாக்கவும் தக்கதாய் உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக. 33. உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, இந்த ஆலயத்துக்கு நேராக உம்மை நோக்கி விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,  34. பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்கள் பிதாக்களுக்குக் நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக. 35. அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால் வானம் அடைபட்டு மழைபெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தங்களை தேவரீர் கிலேசப்படுத்துகையில் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால். 36. பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக. 37. தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்கள் சத்துருக்கள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றிகைபோடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வருகிறபோதும்,  38. உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனுஷனானாலும் தன் இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்துக்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,  39. உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,  40. தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக. 41. உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே. 42. அப்படிக்கொத்த அந்நிய ஜாதியானும், உமது நாமத்தினிமித்தம் தூரதேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம்பண்ணினால்,  43. உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக.  44. நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்துக்கும், உம்முடைய நாமத்துக்கு நான் கட்டின இந்த ஆலயத்துக்கும் நேராக்க கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினால்,  45. பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக.  46. பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே. ஆகையால் அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அந்தச் சத்துருக்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகும்போது, 47. அவர்கள் சிறைப்பட்டுப் போயிருக்கிற தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கி வேண்டுதல் செய்து,  48. தங்களைச் சிறைப்பிடித்துக்கொண்ட தங்கள் சத்துருக்களின் தேசத்திலே தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது,  49. உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து,  50. உம்முடைய ஜனங்கள் உமக்கு விரோதமாய்ச் செய்த பாவத்தையும், அவர்கள் உம்முடைய கட்டளையை மீறிய அவர்கள் துரோகங்களையும் எல்லாம் மன்னித்து, அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோகிறவர்கள் அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்குக் கிடைக்கப்பண்ணுவீராக. 51. அவர்கள் எகிப்தென்கிற இருப்புக் காளவாயின் நடுவிலிருந்து தேவரீர் புறப்படப்பண்ணின உம்முடைய ஜனமும் உம்முடைய சுதந்தரமுமாய் இருக்கிறார்களே.  52. அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது ஜனமாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக. 53. கர்த்தராகிய ஆண்டவரே, நீர் எங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணும்போது, உம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்னபடியே, தேவரீர் பூமியின் சகல ஜனங்களிலும் அவர்களை உமக்குச் சுதந்தரமாகப் பிரித்தெடுத்தீரே என்று விண்ணப்பம்பண்ணினான். 54. சாலொமோன் கர்த்தரை நோக்கி: இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்தபின்பு, அ&#
Uyiron · 1 view · 0 comments
வரலாற்று பார்வை
05 Mar 2010 
இஸ்ரவேல் தேசம் எவ்விதமாக யாருக்கு ஒப்புĨ

Uyiron · 7 views · 0 comments
மின் வேதாகமம்
04 Mar 2010 
தொடக்க காலத்தில் இறைவனால் அருளப்பட்ட வார்த்தைகள் முதலில் மோசேயால் எழுதி தொகுக்கப்பட்டதுவே முதல் பிரதி. அதனை தமிழ்வேதாகமத்தில் முதல் ஐந்து நூல்களான ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் என கூறலாம். இதனையே இன்னும் யூதர்கள் எனப்படும் இஸ்ரேலியர் தமது புனித நூலாக கருதுகின்றனர். இதற்கு யூதர்கள் கொடுத்த பெயர் தோரா என்பதாகும். தோரா என்பதற்கு நீதிச்சட்டங்கள் எனப்படும்.

மோசேயால் முதலில் எழுதப்பட்ட தோராவை யூத வழிமரபினர் பலரும் சந்ததி சந்ததியாக கைப்பட பிரதியாக்கி ஒரு எழுத்துப்பிழையும் ஏற்படாது எழுதிய வேதாகமம் மிகப் பழைமையான வரலாற்றைக் கொண்டதாகும். எழுத்துப்பிழைகள் ஏற்படுமிடத்து அப்பிரதியை எரிகின்ற விறகில் போட்டு எரித்துவிடுவது இவர்களது இன்னோர் பழக்கம். அன்று எதனை மோசே இறைவனிடமிருந்து கேட்டு எழுதினாரோ அது எவ்வித மாற்றமும் அடையாமல் தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இறைவனது கிருபையே.

ஆதியிலிருந்து மிகச்சிறந்த முறையில் பிரதியெடுக்கப்பட்டு வந்துள்ள உலகின் ஒரே நூல் இந்த தோராவாகும்.

மிகப்பழைமையான காலத்தில் ஆபிரகாமின் மூன்றாம் சந்ததியில் வந்த யாக்கோபின் குடும்பத்தார் பஞ்சத்தின் காரணத்தினால் இஸ்ரேலிலிருந்து எகிப்துக்கு சென்றனர். எகிப்தில் யூதர்கள் பலத்துவருவதை விரும்பாத எகிப்தியர்களுக்கு அவர்களை வேலையாட்களாக பாவிப்பதற்கான சந்தர்ப்பத்தை இறைவன் அளித்தார். அவ்வாறு 450 வருடங்களின் பின்னர் வரும் மோசேயால் யூதர்கள் விடுவிக்கப்பட்டு இஸ்ரேலிற்கு வருகின்ற போது இறைவன் கட்டளையிட்டவற்றை மோசே தனியாளாக எழுதுகின்றார்.

உலகின் முதலாவது நூலை எழுதிய பெருமையை மோசே பெற்றுக்கொண்டார். வேதாகமத்தில் உள்ள 66 துணைநூல்களில் முதல் 5 நூல்கள் மோசேயால் எழுதப்பட்டுள்ளன. அதன் பின்னர் வருகின்ற நூல்கள் இஸ்ரேலியரது வாழ்வில் நடந்த வரலாற்றை கூறிவருகின்றன. இவ்விதமாக பழைய ஏற்பாட்டு 39 நூல்கள் சரித்திரத்திலிருந்து சரித்திர சம்பவங்களை தருகின்றது. இங்கு கிறிஸ்துவின் குழந்தை பிறப்பு, கிறிஸ்துவின் வருகை போன்றவை தீர்க்கதரிசிகளால் தீர்க்கமாக அறிவிக்கப்பட்டும் வந்துள்ளது.

அதன் பின்னர் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் பிறப்பை நான்கு சுவிசே~ங்கள் அறிவிப்பதோடு கிறிஸ்துவின் பின்னரான சரித்திரம் தொடர்ச்சியாக புதிய ஏற்பாட்டின் 27 நூல்களிலும் இடம்பெற்று வந்துள்ளது. கடைசி நூலான வெளிப்படுத்தல் இன்னும் உலகில் நிறைவேறாத சம்பவங்களை உள்ளடக்கியுள்ளது. ஆகவே ஆரம்பம் முதல் முடிவு வரை உலகத்தின் கதையை கூறுகின்ற ஓன்றென வேதாகமம் சிறப்பு பெற்றுள்ளது.

பழைய ஏற்பாடு கூறிய தீர்க்கதரிசனங்கள் புதிய ஏற்பாட்டில் நிறைவேறியது போன்று புதிய ஏற்பாடு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை மற்றும் உலகத்தின் கடைசி முடிவை தீர்க்கதரிசனமாக அறிவிக்கின்றது.

இந்த வேதாகமம் முதலில் பைபிரஸ் எனும் காய்ந்த நானற்செடிகளில் மற்றும் தோற்சுருள்களில் எழுதப்பட்டவை. எபிரேயத்தில் எழுதப்பட்ட வேதாகமங்களே முதல் புத்தகங்களாகும். தோரா எபிரேய மொழியில் அமைந்ததுவாகும். எபிரேய பழைய ஏற்பாடும் கிரேக்க புதிய ஏற்பாட்டுடன் ஒன்று சேர்க்கப்பட்டு ஆங்கில வேதாகமங்கள் புத்தகமாக அச்சிடப்பட்டன. அவ்வாறு தமிழிலும் வேதாகமம் எபிரேய கிரேக்க பாi~களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டன. தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகமாக வேதாகமம் விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் வேதாகமத்தின் பல்வேறு தமிழ் மொழிபெயர்ப்புக்கள் காணக்கிடைக்கின்றன. விவிலிய விளக்கவுரைகளும் எழுதப்பட்டுள்ளன. வேதாகமத்தை மையமாகக் கொண்டு அநேக தமிழ் புத்தகங்கள் வெளிவரலாயின. சிங்கள மொழியிலும் காணலாம். தற்போதைய சூழலில் வேதாகமத்தின் பல பிரதிகளை இணையத்தின் வாயிலாக மின் நூல்களாகவும் காணக்கிடைக்கின்றது.

இணையத்தின் பிரவேசத்துடன் வேதாகமத்தின் பல்வேறு மொழிபெயர்ப்புக்களை இணையத்தின் வாயிலாக வாசித்தறிய முடியும். பழைய எபிரேய கிரேக்க மொழிகளோடு ஒத்துப் பார்க்கவும் முடியும். தமிழ் மொழியிலும் புதிய மொழிபெயர்ப்புக்களை இணையத்தில் காணலாம். எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வேதாகமத்தை வாசிக்கத்தக்கவர்களுக்கு அதன் வாக்கியங்களில் ஒன்றும் அறிவீனமாக இல்லை என்பதும் அவை ஊக்கமளிக்கும் வசனங்களாக உள்ளன என்பதும் விளங்கும்.

மழுப்புகின்ற வசனங்களை வேதாகமம் கையாளவில்லை. ஒவ்வொர் வசனமும் தெளிவாக வார்த்தை அறிவிக்கின்றது. அது தெளிவாக குறிப்பிட்டு சொல்கின்றதை தெளிவாக அறியலாம். இணையம் அதற்கு மிகவும் வழிவகுக்கின்றது.

இணையத்தின் ஊடாக இணைய இணைப்பில் வைத்து வாசிக்கும் வேதாகமங்களும் அதனை போல இணைய இணைப்பில்லாத நேரங்களில் பயன்படுத்தத்தக்க வேதாகமங்களும் தமிழ் மொழியில் உள்ளன. http://Uyir.tk யில் சில தளங்களை காணலாம். இணைய இணைப்பானாலும் சரி டவுன்லோடு செய்திட்ட மின் வேதாகமமானாலும் சரி வேதாகமத்தை வாசித்திட அதற்கென உபயோகிக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்துக் கோவையை இறக்கம் செய்து வின்டோஸிலுள்ள பொஃன்ட் போல்டரில் இணைப்பதன் மூலம் நீங்கள் வாசிக்கக் கூடியதாய் இருக்கும்.

இவ்வித மின் வேதாகமங்கள் இன்றைய கம்யூட்டர்களிலும் லாப்டொப்களிலும் பயன்படுத்த இலவசமாய் வழங்கப்படுகின்றன. எந்நேரமும் பயன்படுத்தத் தக்க வேதாகமத்தை எதிலும் பயன்படுத்த முடிகின்றது.

மேலும் கையடக்க தொலைபேசி வைத்திருப்பவர்களுக்காகவும் தமிழ் மொழியில் வேதாகமத்தை இறக்கம் செய்து பயன்படுத்திட முடியும். இதற்கு குறிப்பிட்ட இணையத்தை கம்யூட்டரில் இயக்கவும். http://WordofGod.in இந்த இணையத்திலிருந்து கம்யூட்டருக்கோ அல்லது மொபைல் தொலைபேசிக்கோ இறக்கம் செய்திடலாம். கம்யூட்டருக்கு இறக்கம் செய்ததை போனிற்கு அப்டேட் செய்து பயன்படுத்திடலாம்.

மொபைலில் பாவிப்பதற்கு இரண்டு வகையாக தமிழில் மொபைல் வேதாகமம் உள்ளன. ஒன்று யுனிகோட் வசதியுள்ள மொபைலில் யுனிகோட் முறையிலான மொபைல் வேதாகமம் கிடைக்கப்பெறுகின்றது. அது போல ஜாவா வசதியுள்ள யுனிகோடற்ற மொபைல் போன்களுக்கு தமிழில் தெரியும் வண்ணம் மேலுள்ள தளம் வேதாகமத்தை இறக்கம் செய்து பாவித்திட முடிகின்றது.

உலகில் எதற்கும் கிடைக்காத அளவு இடத்தை மொபைல் வேதாகமங்கள் வெறும் 02 எம்பிக்குள்ளாகவே அடக்கி உள்ளன. உங்கள் கையடக்க தொலைபேசியில் மொபைல் வேதாகமத்தை தமிழில் வாசிக்க வெறும் 2 எம்பி இடமே போதுமானதாகும்.
Uyiron · 11 views · 0 comments
எதிர்காலம்
04 Mar 2010 
மனிதர்கள் தாம் எப்போதும் எதிர்கால சிந்தையுள்ளவர்களாக காணப்படுகின்ற இயல்பை பெற்றுள்ளனர் எனலாம். அவர்களது எண்ணவலைகள் எப்போதும் எதிர்கால நலன்களை விரும்பியவாறு செல்வதையே நோக்காகக் கொண்டு அமைந்துள்ளன. தாம் என்னவாக வேண்டும் என்பதை மனிதர் சிந்திக்கும் போது எதிர்காலமானது சிறப்புடன் இருக்கவேண்டும் என்பதை அங்கீகரிப்பதுவே மனதின் நோக்கமாய் அமைந்து விடுகின்றது. சிறப்பு பெற்ற நாட்களில் வாழ்வதற்காய் மனிதன் இன்று தனது பிரதான சுமையை சுமப்பவனாகக் காணப்படுகின்றான். எதிர்கால நிலைமைகள் தமக்கு சாதகமாய் அமைந்துவிடுதல் வேண்டும் என போராடும் குணமுடைய மனிதனால் எவ்வளவு தூரம் அது சாத்தியமாகின்றது என்பதைக் கண்டறிய போதிய அவகாசம் கிடைத்துவிடுமானால் அவன் தனக்கு மிஞ்சிய சுமையை எப்போதோ கழற்றிவிட்டிருப்பான். எதிர்காலமானது ஒருவருக்கும் காத்திருப்பதை விரும்பாதது போன்று மிகவும் சீக்கிரமாய் சுழன்று திரிவதை தனக்கு வழமையாக்கிக் கொண்டிருப்பதை எதனாலும் மறுக்க முடியாது. சீக்கிரம் வந்து மறைகின்ற நாட்களில் எதிர்காலம் பிரகாசமடைவதற்காக பிரயாசப்படுகின்ற மக்களுக்குள் எவ்விதமான எண்ணங்கள் எதிர்கால நோக்கை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன என்பதை கணக்கெடுத்தால் அதனை எழுதி முடிக்க பலகோடி விக்கிபீடியாக்கள் தேவைப்படும்.  

சுதந்திரமான எதிர்காலத்தை பெற்றிட துடித்திட்ட பலரும் சுதந்திரமாக இன்று மண்ணுக்குள் உழல்கின்றனர் என்பதை கடந்த காலம் ஒருவாறு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஞாபகங்களின் மீதியாக ஒன்று சேர்ந்த நட்புறவை நோக்கிக் கொண்டிருக்கின்ற மனதிற்கு மேலும் ஒருவகையில் எதிர்காலம் எதனை ஏற்படுத்தப் போகின்றது என்பதை கேள்விக்குறியாக எழுப்பவேண்டியுள்ளது. கடந்தவை கடந்துவிட்ட போதும் மாறாத நினைவுகள் தினமும் பூப்பூப்பதை யாரால் தடுத்து விட முடியும். அவை தினமும் மலரும் மலராக மாலையில் உதிர்ந்தும் விடுகின்றன. எனினும் நம்பிக்கை எனும் செல்வமிருந்தால் நிச்சயம் எதிர்காலம் துளிர்விடும்.
 

சமுதாயத்தில் ஏற்படும் இன்னல்கள் பெரும்பாலும் சமூக வளர்ச்சிக்கு தடைக்கற்களாக உருவாகிக்கொண்டு இருப்பினும் அவற்றை தூக்கியெறியும் பொறுப்புமிக்க செயல்திறன் ஜனநாயக நாட்டில் அமைந்துவிடுதல் வேண்டும் என்பதை எதிர்கால பயணிகள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. எதிர்பார்ப்புக்களை மட்டும் நிர்க்கதியாக்கிவிடாத எதிர்காலம் உருவானால் அதுவே போதும் என தவமிருந்து பெற்றுவிட்டால் வாழ்வின் மைல்கல் இன்பமாயிராது. கொட்டும் பனியிலும் வாட்டும் வெயிலிலும் கருகி கந்தலாகி பிரிந்த வாழ்வில் எதிர்காலம் என்ன சொர்க்கத்திற்கு நிகரா? அப்படியே அமைந்தாலும் வாழ்வின் வசந்தத்தை அள்ளி வீசுமா? வாழ்கின்ற காலம் கசப்பாய் அமைந்தபின்னர் சொர்க்கத்தின் வசதி இன்னோரன்ன ரம்மியங்கள் இனியும் என்னத்திற்கு! துக்கத்திலும் கொடுமை அனுபவித்த எமக்கு இனியென்ன சுகம் வேண்டும் என்பதைக்கூட இரகசியமாய் கேட்பதற்கு காலம் அனுமதிக்கவில்லை என்றால் எனக்குள் மட்டுமா மனசாட்சி வாழ்கிறது என கேட்கத்தான் தோண்றுகிறது.
 

இடர் பாதை முற்றுப்பெற காலமில்லை. அது இன்னும் மானிடரை தள்ளாடச் செய்கிற வன்மையாளன். கொடுங்கோலன். வையகத்தில் வாழ்வோரை வஞ்சகமாய் வழிகெடுக்கும் நச்சுப்பிராணி. ஆசைகளின் மேல் நப்பாசை வைத்து வாழ்விற்கிருந்த வளையலையும் கழற்றி விற்றும் வீட்டுப்பசி அடங்கவில்லை. உள்ளக் குமுறல்கள் மட்டும் வெளியே கேட்டிருந்தால் மதுரை எரித்த கண்ணகியை நினைவூட்டும் செயலிங்கு நடந்திருக்கும். எப்போதும் காணும் கண்ணாடி நிழலாட்டம் எதிரில் பிரதிபலிக்கின்ற எதிர்காலம் போலாகும். நிலவிற்கு ஒளி தரும் சூரியனிலும் எதிர்காலம் கேள்விக்குறி! வாழ்வில் அர்த்தம் தேடும் மானிடவியலாளர்களுக்கு எதிர்காலம் மறைந்ததுவோ அன்றேல் மறந்து போயிற்றோ!
 

வேதாகமம் தரும் விடை உன் கேள்விகளுக்கு தக்க பதில். எதிர்காலத்தை அறிந்த தேவன் உன் வாழ்வினை மாற்றிடும் கர்த்தர். வாழ்வில் சுமந்து திரியும் பாரங்களை தா என்று கேட்கிறார். எதிர்காலம் கற்பனையல்லவென்று கரம் நீட்டி அழைக்கின்றார். இன்று பட்ட உபத்திரவங்களால் கலங்குகின்றாயோ எனக் கேட்டு ஆறுதல் செய்பவர் அவர்தானே. உலகம் துன்பப்படுத்தும் என்றே பரலோகத்தை காட்சிப்படுத்தி சென்றார் என்பதினால் நீண்ட துன்பியலை பிரகாசமாய் மாற்றிட ஒருவர் உண்டு என்பதை நிச்சயம் அறிந்து கொள். உன் வாழ்க்கை அவர் கரத்தில் இருந்தால் துக்கங்கள் என்ன ஒரு பொருட்டா? பாவத்திற்கு மன்னிப்பு தருவதும் அதனோடிணைந்த இலவச ஈவெனும் நித்தியஜீவனை அருளுவதும் அவருக்கு விருப்பமன்றோ? பாவத்தினால் மரித்தவர் பரிசுத்தமாய் உயிர்த்தார். மீண்டும் வருவேன் என்று சொன்னார். நிச்சயம் வருவார் எதிர்காலம் இன்றே.
பூமி அதிர்ச்சி
28 Feb 2010 
 16. ஜலங்கள் உம்மைக் கண்டது. தேவனே, ஜலங்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது, ஆழங்களும் கலங்கினது.
 17. மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது. ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது. உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.
 18. உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது. மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது. பூமி குலுங்கி அதிர்ந்தது.(சங்கீதம் 77:16-18)

 
  6. இடிகளினாலும், பூமி அதிர்ச்சியினாலும், பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும், புசலினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், சேனைகளின் கர்த்தராலே விசாரிக்கப்படுவாய்.(ஏசாயா 29:6)

 
  7. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.  8. இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.(மத்தேயு 24:7-8)

ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும். இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம். (மாற்-13:8)

பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும். வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும். (லூக் 21:11)

இதோ, கோராவாரிக் காற்றாகிய கர்த்தருடைய பெருங்காற்று உக்கிரமாயெழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும். (எரேமியா 30:23)

 
வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ? (நீதி30:4) 
Uyiron · 18 views · 1 comment
இயேசு வருகிறார்
28 Feb 2010 
 1. இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.
  2. எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன். நகரம் பிடிக்கப்படும். வீடுகள் கொள்ளையாகும். ஸ்திரீகள் அவமானப்படுவார்கள். நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள். மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.
  3. கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.
  4. அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும். அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன்நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம். அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
  5. அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள். மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும். நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள். என் தேவனாகிய கர்த்தர் வருவார். தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.
  6. அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும்.
  7. ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது. அது பகலுமல்ல இரவுமல்ல. ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.
  8. அந்நாளிலே ஜீவதண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரிகாலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும்.
  9. அப்பொழுது கர்த்தர் பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருப்பார். அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
 10. தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும். எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல் தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும்.
 11. அதிலே ஜனங்கள் வாசம்பண்ணுவார்கள். இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாய்த் தங்கியிருக்கும்.
 12. எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்து போகும். அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும். அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.
 13. அந்நாளிலே கர்த்தரால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும். அவனவன் தன் தன் அயலானின் கையைப் பிடிப்பான். அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும்.
 14. யூதாவும் எருசலேமிலே யுத்தம்பண்ணும். அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாகக் கூட்டப்படும்.
 15. அந்தப் பாளையங்களில் இருக்கும் குதிரைகள் கோவேறு கழுதைகள் ஒட்டகங்கள் கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப் போலவே இருக்கும்.
 16. பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.
 17. அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.
 18. மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும் போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கவராத ஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும்வாதையே அவர்கள்மேலும்வரும்.
 19. இது எகிப்தியருடைய பாவத்துக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.
 20. அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும். கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.
 21. அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும். பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள். அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.


(சகரியா 14லிலிருந்து)
Uyiron · 23 views · 0 comments
தசமபாகம்
28 Feb 2010 
    1. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு, அதில் வாசம்பண்ணும்போது,   2. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய்,   3. அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக.  4. அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடையை உன் கையிலிருந்து வாங்கி, அதை உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்திற்கு முன்பாக வைக்கக்கடவன்.   5. அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாயிருந்தான், அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப்போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான்.   6. எகிப்தியர் எங்களை ஒடுக்கி, எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்கள்மேல் கடினமான வேலையைச் சுமத்தினபோது,   7. எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டோம். கர்த்தர் எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்கள் சிறுமையையும் எங்கள் வருத்தத்தையும் எங்கள் ஒடுக்கத்தையும் பார்த்து,  8. எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி,   9. எங்களை இவ்விடத்துக்கு அழைத்து வந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.  10. இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து,  11. நீயும் லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக. 12. தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திர்ப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,  13. நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலிருந்து எடுத்து வந்து, லேவியனுக்கும் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் கொடுத்தேன்@ உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை.  14. நான் துக்கங்கொண்டாடும்போது அதி;ல் புசிக்கவும் இல்லை, தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்கவும் இல்லை. இழவுகாரியத்துக்காக அதில் ஒன்றும் படைக்கவும் இல்லை. நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.  15. நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்த்து, உமது ஜனங்களாகிய இஸ்ரவேலரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக. 16. இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்யும்பொருட்டு, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடுகிறார். ஆகையால் உன் முழு இருயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் காத்து நடக்கக்கடவாய். 17. கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பார் என்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும் அவர் கற்பனைகளையும் அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்.  18. கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும், 19. நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.(உபாகமம் 26லிருந்து)
Uyiron · 17 views · 0 comments
கனம்
27 Feb 2010 
 மனிதர்கள் ஏனைய மனிதர்களோடு வாழ்வதும் ஏனைய மனிதரோடு உள்ள உறவு குறித்து வேதாகமம் கூறும்போது உன்னைப்போல் பிறனையும் நேசி என்பதையே அடிப்படையாக வலியுறுத்துகின்றது. எந்தளவிற்கு நீ உன்னைக் குறித்து கரிசனை காண்பிக்க விரும்புகின்றாயோ அவ்விதம் நீ மற்றவனையும் நேசிக்க வேண்டும்.

அவ்வாறாகவே இறைவனுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றவர்களுக்கு வேதாகமம் கூறுகின்ற காரியத்தினையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். முதலில் சகோதரனோடே ஒப்புரவாகிய பின்னரே இறைவனுடனான தொடர்பினை வலியுறுத்துகின்ற வேதாகமம் முதன்மையாக மனிதரோடு ஒப்புரவாகுதலையே வலியுறுத்துகின்றது. காணிக்கை செலுத்த தேவாலயத்திற்கு வரும் முன்னர் மனித ஒப்புரவாகுதல் அவசியம்.

அதுபோல இன்றைய உலகில் பலர் குற்றங்காண்பவர்களாக இருந்து கொண்டு இருக்கின்றனர். தாங்கள் செய்த குற்றத்தை காணதவர்கள் பிறருடைய குற்றங்களை பெரிதுபடுத்தி பரப்பி செய்தி வெளியிடுகின்றார்கள். இவ்விதம் செய்பவர்களை வேதாகமம் எச்சரிக்கின்றது. பிறரை குற்றம் சுமத்துபவனைக் குறித்து வேதாகமம் முதலில் அவன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை அகற்றும்படி கூறுகிறன்றது. எத்தனையான குற்றம் செய்தவனையும் விமர்சிக்கும் முன்னதாக உனது சிறிய குற்றத்தை நீ சுத்தப்படுத்தவேண்டியதாயிருக்கிறது. விமர்சிக்கும் முன் விமர்சனம் செய்பவர் மாசற்றவராக காணப்பட வேண்டிய நிலையே வலியுறுத்தப்படுகின்றது.

ஆதலினால் மனிதர்களுடனான தொடர்பானது சரியாக அமைந்திருக்க வேண்டும் என்பதுவே வேதாகமத்தின் முதலாவது அடிப்படை அம்சமாகும்.
 


9. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும்போது. அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம்.
 10. தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,  11. மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். 12. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன். இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். 13. உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்.(உபாகமம் 18:9-13)





10. பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டாம்.
 11. வெளியே நிற்பாயாக. கடன் வாங்கினவன் அந்த அடகை வெளியே உன்னிடத்தில் கொண்டுவருவானாக.  12. அவன் தரித்திரனானால், நீ அவன் அடகை வைத்துக்கொண்டு நித்திரை செய்யாமல்,  13. அவன் தன் வஸ்திரத்தைப் போட்டுப் படுத்துக்கொண்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப அந்த அடகை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும். அது உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உனக்கு நீதியாயிருக்கும்.  14. உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக.  15. அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும். அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான். அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான். அது உனக்குப் பாவமாயிருக்கும்.(உபாகமம் 24:9-13)
Uyiron · 6 views · Leave a comment
தேசம்
27 Feb 2010 
 1. நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய கர்த்தரால் துரத்திவிடப்பட்டு, எல்லா ஜாதிகளிடத்திலும் போயிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து, 2. உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால், 3. உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார். 4. உன்னுடையவர்கள் வானத்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக் கூட்டி, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து, 5. உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன்தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார். 6. உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி, 7. இந்தச் சாபங்களையெல்லாம் உன் சத்துருக்கள்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைஞர்மேலும் சுமரப்பண்ணுவார். 8. நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளினபடியும் செய்வாய். 9. அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருக ஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிப+ரணமுண்டாகச் செய்வார். 10. உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவேடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார். 11. நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல. 12. நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல. 13. நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல. 14. நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது. 15. இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன். 16. நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன். 17. நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப் பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால், 18. நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நெடுநாள் வாழாமல், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன். 19. நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன். ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, 20. கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக. அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான். (உபாகமம் 30லிருந்து)
Uyiron · 11 views · 0 comments
தேர்தல்
27 Feb 2010 
 இலங்கை முழுவதும் பொது தேர்தலுக்காக 7265 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இம்முறை அதிகளவானோர் தேர்தலில் குதித்துள்ள போதும் கூடவுள்ள பாராளுமன்றத்தில் குறைந்தளவு அமைச்சர்களே பதவி வகிப்பர் என நம்பப்படுகின்றது.  

கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று 2ம் வருட காலத்திற்கு மீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 
தேர்தலில் சரியானவர்கள் தெரிந்தெடுக்கப்படவேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டியது அவசியம்.
Uyiron · 6 views · 0 comments
ரிப்கா ஃபாரி
27 Feb 2010 
17 வயது இலங்கை பெண்ணான ரிப்கா ஃபாரி கடந்த வருடம் அமெரிக்காவில் தங்கியிருந்த போது நடந்த சம்பவங்கள் அப்பெண்ணின் வாழ்வில் பலத்த மாற்றங்களை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு முகங்கொடுத்து வருவதோடு தனது குடும்பத்தினரோடு இணைவதற்கும் மறுப்புத் தெரிவித்து வருகின்றார்.

ரிப்கா ஃபாரியின் தகப்பனால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தனது வீட்டிலிருந்து வெளியேறி சென்றுள்ளார். ரிப்கா ஃபாரி கிறிஸ்தவத்தில் நாட்டம் கொண்ட காரணத்தினால் ஆத்திரமடைந்த அவரது தந்தையார் அவரை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தியுள்ளார். அதனால் பயமடைந்த இப்பெண் புளொரிடாவிற்கு ஓடியிருந்தார். இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்ற குடும்பமான இவரது குடும்ப உறுப்பினர்களும் இவரின் மதமாற்றத்தை எதிர்த்தனர்.

கொலம்பஸிலிருந்து புளொரிடா செல்வதற்கு அவருக்கு ஒருவர் உதவினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவரது தகப்பன் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். ஆயினும் கொலம்பஸ் பொலிசாரோ அல்லது புளோரிடா பொலிசாரோ எதுவித அசம்பாவிதமும் பெண்ணுக்கு ஏற்படவில்லை என சாட்சியமளித்துள்ளனர்.

இவரது ஒகியோ மற்றும் புளோரிடா நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறும்போது தங்களால் அவரை அவரது குடும்பத்தினருடன் இணைத்து வைக்க முடியவில்லை என சென்ற வாரம் அறிவித்தனர். ஏனெனில் தனது குடும்பத்தினால் தான் கொலை செய்யப்படவோ அல்லது துன்புறுத்தப்படவோ கூடும் என்ற பயத்தினால் உறவினர்களை சந்திக்க மறுத்துள்ளார்.

கடந்த வருடத்தில் அவர் இணையத்தளத்தின் மூலமாக செய்திகளை பெற்றே இவ்வாறு மாறியுள்ளார்.
Uyiron · 14 views · 0 comments
சுகமே வாழ்வு
27 Feb 2010 
 ஆரோக்கியத்தை தேடாத மனிதர்கள் இல்லை. ஒவ்வொரு மனிதனும் தினமும் ஆரோக்கியமாக வாழவே ஆசைப்படுகின்றான். ஆதலால் தினமும் அதிகாலையில் ஐந்து டம்ளர் நீரை அருந்துவது ஒரு சரீரத்தை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு உதவுகின்றது என்பது டாக்குத்தர்களின் கருத்தாக உள்ளது. அது போல பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்ப்பது மிகுந்த பலன் தரக்கூடிய ஒன்றாக அமைகின்றது. உடற்பயிற்சிகளை காலையில் மேற்கொள்வதும் உடலிற்கேயுரிய சீரான வெளிப்பாட்டை  காட்டுவதற்கு அத்தியாவசியமாகின்றன.  ஆனால் வேதாகமம் ஆரோக்கியத்தை தருகின்றவர் இறைவன் எனக் காட்டுகின்றது. எமது வாழ்வை நீடிக்கச் செய்வதற்கு நாம் தேவனை சார்ந்து இருப்பதோடு நீதியை நடப்பிப்பது அவசியமாக இருக்கின்றது. சிறுமையானவர்களுக்கு இரங்குவதும் நீண்ட வாழ்வை இறைவன் எமக்குத் தருவதற்கு வழிவகுக்கின்றது.   தானி-4:27 ஆகையால் ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும். அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான்.
Uyiron · 10 views · Leave a comment
Categories: தகவல்கள்
வரமா? சாபமா?
27 Feb 2010 
 2. நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.   3. நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.  4. உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.   5. உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.  6. நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.  7. உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார். ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள். ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.  8. கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.  9. நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார். 10. அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள். 11. உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்;ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார். 12. ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார். நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.  13. இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல்,  14. இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.  15. இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.  16. நீ பட்டணத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் சபிக்கப்பட்டிருப்பாய். 17. உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் சபிக்கப்பட்டிருக்கும். 18. உன் கர்;ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும். 19. நீ வருகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய். 20. என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியுமட்டும், நீ கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார். 21. நீ சுதந்தரிக்கும் தேசத்தில் கர்த்தர் உன்னை நி;ர்மூலமாக்குமட்டும் கொள்ளைநோய் உன்னைப் பிடித்துக்கொள்ளப்பண்ணுவார். 22. கர்த்தர்உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும், உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார். நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும். 23. உன் தலைக்குமேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும். 24. உன் தேசத்து மழையைக் கர்த்தர் புழுதியும் மண்ணுமாக பெய்யப்பண்ணுவார். நீ அழியுமட்டும் அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும். 25. உன் சத்துருக்களுக்கு முன்பாக நீ முறிய அடிக்கப்படும்படி கர்த்தர் செய்வார். ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாய் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய். நீ ப+மியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் சிதறுண்டுபோவாய். 26. உன் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும் ப+மியின் மிருகங்களுக்கும் இரையாகும். அவைகளை விரட்டுவாரில்லாதிருப்பார்கள். 27. நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார். 28. கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார். 29. குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய். உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோம். உதவிசெய்வாரில்லாமல்  நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாய் இருப்பாய். 30. பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான். வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய். திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய். 31. உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் புசிப்பதில்லை. உன் கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப அகப்படாமற்போம்@ உன் ஆடுகள் உன் சத்துருக்களுக்குக் கொடுக்கப்படும், விடுவிப்பார் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள். 32. உன் குமாரரும் உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். அவர்களைக் காண உன் கண்கள் நாடோறும் பார்த்துப் பார்த்துப் பூத்ததுப்போம். உன் கையில் பெலனில்லாதிருக்கும். 33. உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள். நீ சகல நாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய். 34. உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய். 35. உன் உள்ளங்கால் தொடங்கி உன் உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.  36. கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப் போகப்பண்ணுவார். அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய். 37. கர்த்தர் உன்னைக் கொண்டுபோய் விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய். 38. மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய். வெட்டுக்கிளி அதைப் பட்சித்துப்போடும்.  39. திராட்சத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை. பூச்சி அதைத் தின்றுபோடும்.  40. ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ ப+சிக்கொள்வதில்லை@ உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோம்.  41. நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள். அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள். 42. உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் கனிகளையும் விட்டில் பட்சித்துப்போடும்.  43. உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான். நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய்.  44. அவன் உன்னிடத்தில் கடன்படான், நீ அவனிடத்தில் கடன்படுவாய். அவன் தலைவனாயிருப்பான். நீ வாலாயிருப்பாய். 45. உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு விதித்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடித்து,  46. உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும். 47. சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம், 48. சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய். அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள். 49. கிழவன் என்று முகம்பாராமலும், வாலிபன் என்று இரங்காமலும் இருக்கும் கொடிய முகமுள்ளதும்,  50. உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள ப+மியின் கடையாந்திரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார். 51. நீ அழியுமட்டும் அந்த ஜாதியான் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் கனியையும் புசிப்பான்@ அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாக வைக்கமாட்டான்.  52. உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் அரணிப்புமான உன் மதில்கள் விழுமளவும், அவன் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போடுவான். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய வாசல்கள்தோறும் உன்னை முற்றிகைப்போடுவான்.  53. உன் சத்துருக்கள் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய். 54. உன் சத்துருக்கள் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போட்டு உன்னை நெருக்குங்காலத்தில், உன்னிடத்தில் செருக்கும் சுகசெல்வமுமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையினாலே தான் தின்னும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே,  55. தன் சகோதரனுக்காகிலும், தன் மார்பில் இருக்கிற மனைவிக்காகிலும், தனக்கு மீந்திருக்கிற தன் மக்களில் ஒருவனுக்காகிலும் கொஞ்சமேனும் கொடாதபடி அவர்கள்மேல் வன்கண்ணாயிருப்பான். 56. உன்னிடத்தில் சுகசெல்வத்தினாலும் செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க அஞ்சின செருக்கும் சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன் மார்பில் இருக்கிற புருஷன்மேலும் தன் குமாரன்மேலும் தன் குமாரத்தியின்மேலும் வன்கண்ணாயிருப்பாள். 57. உன் சத்துருக்கள் உன் வாசல்களில் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங் காலத்தில், சகலமும் குறைவுபடுவதினால், அவைகளை இரகசியமாய்த் தின்னுவான். 58. உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, நீ இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால்,  59. கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து,  60. நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார். அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும்.  61. இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும் வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார்.  62. திரட்சியிலே வானத்து நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடாமற்போனதினால், கொஞ்சம் ஜனமாய்ப்போவீர்கள். 63. கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெருகப்பண்ணவும் எப்படி உங்கள்மேல் இரம்மியமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை அதம்பண்ணவும் இரம்மியமாயிருப்பார். நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலிருந்து பிட&
Uyiron · 8 views · 0 comments
நாட்டு நடப்பு
26 Feb 2010 
 நாட்டில் முன்னேற்ற சக்திகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது ஜனாதிபதியவர்களின் செய்தி. இத்தனை காலமும் பிளவு பட்டு நின்றது போதும். ஏனென்றால் இனிவரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெறப்போகும் தமிழ்த்தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார். அந்த வகையில் நாட்டின் முன்னேற்றத்தை விரும்பும் தலைவர்கள் அவருடைய கட்சியில் இணைந்து கொண்டால் தமிழர்களுக்கு ஏற்ற சலுகைகளை பெற்றுக்கொள்ள ஏதுவாய் அமையும். இத்தனை ஜனாதிபதிகள் வந்தபோதும் இந்த சுதந்திர தினத்தில் தமிழ் மொழிக்கு மரியாதை அளித்த ஒரே சிங்கள ஜனாதிபதி என்றால் அது ஜனாதிபதி அவர்களாகத்தான் இருக்கும்.

தமிழ் மொழிக்கே முன்னுரிமை அளிக்கும் எம் ஜனாதிபதியால் தமிழர்களுக்கான மிகச் சிறந்த தீர்வுத்திட்டத்தை முன்வைக்க முடியாதா? ஏன் இன்னமும் தமிழ் அரசியல் வாதிகள் தங்களுக்குள்ளாக பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சிகளில் இருந்துவிட்டால் தமிழர்களுக்கு கிடைக்கப்போவது ஒன்றும் இல்லை.

சிங்களவாதம் எல்லாம் எம் ஜனாதிபதியினால் அறவே துடைத்தெறியப்பட்டுள்ளது. ஒருபோதும் மீண்டும் சிங்களவாதம் ஏற்படுவதற்கு அவர் இடங்கொடுக்கப் போவதில்லை. ஆகையினால் புத்தியுள்ள தமிழ் அரசியல் வாதிகள் இந்த சந்தர்ப்பத்தை தமிழர்களுக்காக தமிழ் மக்களின் விடிவுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முரண்படுகின்ற அரசியலால் தமிழர்களுக்கு கிடைக்கப் போவது ஒன்றும் இல்லை. புலம் பெயர் தமிழர்கள் இப்போதைக்கு வருவதற்கும் இல்லை. தமிழ் தேசியம் என்பதெல்லாம் முடிந்த கதையாகி விட்டன. அவைகளையே மீண்டும் மீண்டும் கிளப்பாதீர்கள். புதிய யுகம் காணும் ஜனாதிபதியுடன் இணையுங்கள். வெற்றி பெறப்போகும் ஜனாதிபதியுடன் கலந்தாலோசிப்பதற்கான தகுதிகளை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கடந்த காலத்தில் பயங்கரவாதிகளை தடுப்பதில் மிகப்பங்காற்றிய ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இந்த பொதுத் தேர்தலே.

அரசியலில் தாக்கத்தை தலைவர்களே செலுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆயினும் தமிழ் மக்களின் தாகம் சுதந்திரம், விடுதலை என்பனவே அத்தியவசிய தேவை. அதற்கு இன்னும் காலம் செல்லாது. விடுதலை தருவதற்கு ஜனாதிபதி தயார். சுதந்திரத்தை தருவதற்கு ஜனாதிபதி தயார். நீங்கள் தயாரா??
     
Uyiron · 8 views · 0 comments
பாபிலோன்
26 Feb 2010 
 பாபிலோனில் அரசாண்ட ராஜாவான நேபுகாத்நேச்சார் தன்னுடைய இராஜ்யத்தையும் தான் கட்டிய மாளிகையையும் பார்த்து பெருமைப்பட்டு சத்தமாய் ஆர்ப்பரித்தான். அன்றைய பாபிலோன் இராச்சியமானது இன்றை ஈராக் நாட்டிற்குள் அமைந்துள்ளது. அவன் அப்படியாக பெருமையாக சொன்னபோது அவன் புத்தி அந்தகாரப்பட்டு வெளியில் மிருகங்களோடு தங்கினான். ஒரு இராஜா மிருகங்களோடு வாசம் செய்கிறான். அதன் பின் ஏழு வருடங்களான பின்னர் அவன் மனம் வருந்தியதால் மீண்டும் அவனுக்கு அரியாசனம் கிடைக்கின்றது. அதைக்குறித்து அந்த இராஜா கூறிய விடயம் கீழே தரப்பட்டுள்ளது. தானியேல் 4:28-37இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது.பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது:இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று.மனுஷரினின்று தள்ளப்படுவாய். வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய். மாடுகளைப்போல் புல்லை மேய்வாய். இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று விளம்பினது. அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று. அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான். அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன். என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது. அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன். அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும். பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள். அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார். அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது. என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பிவந்தது. என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள். என் ராஜ்யத்திலே நான் ஸ்திரப்படுத்தப்பட்டேன். அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது.ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன். அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள். அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.
Uyiron · 17 views · 0 comments
2000ற்குப் பின் நடப்பது
26 Feb 2010 
 1. இப்போதும் மனுபுத்திரனே, நீ கோகுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன். (கோகு – ரஷ்யா?)  2. நான் உன்னைத் திருப்பி உன்னை ஆறு துறடுகளால் இழுத்து, உன்னை வடபுறங்களிலிருந்து எழும்பவும் இஸ்ரவேல் மலைகளில் வரவும்பண்ணி,  3. உன் வில்லை உன் இடதுகையிலிருந்து தட்டிவிட்டு, உன் அம்புகளை உன் வலதுகையிலிருந்து விழப்பண்ணுவேன்.  4. நீயும் உன் எல்லா இராணுவங்களும் உன்னோடிருக்கிற ஜனங்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள். உராய்ஞ்சுகிற சகலவித பட்சிகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் உன்னை இரையாகக் கொடுப்பேன்.  5. விசாலமான வெளியில் விழுவாய். நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.  6. நான் மாகோகிடத்திலும் தீவுகளில் நிர்விசாரமாய்க் குடியிருக்கிறவர்களிடத்திலும் அக்கினியை அனுப்புவேன். அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். (தீவுகளில் - இலங்கை?)  7. இவ்விதமாய் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவிலே என் பரிசுத்தநாமத்தைத் தெரிவிப்பேன். என் பரிசுத்த நாமத்தை இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்கவொட்டேன். அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று புறஜாதிகள் அறிந்து கொள்வார்கள்.  8. இதோ, அது வந்தது, அது சம்பவித்தது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். நான் சொன்ன நாள் இதுவே.  9. இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியே போய், கேடகங்களும், பரிசைகளும், வில்லுகளும், அம்புகளும், வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள். ஏழுவருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள். 10. அவர்கள் வெளியிலிருந்து விறகு கொண்டுவராமலும் காடுகளில் வெட்டாமலும், ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள். அவர்கள் தங்களைக் கொள்ளையிட்டவர்களைக் கொள்ளையிட்டு, தங்களைச் சூறையாடினவர்களைச் சூறையாடுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 11. அந்நாளில் இஸ்ரவேல் தேசத்திலே சமுத்திரத்துக்குக் கிழக்கே பிரயாணக்காரரின் பள்ளத்தாக்கைப் புதைக்கிற ஸ்தானமாகக் கோகுக்குக் கொடுப்பேன். அது வழிப்போக்கர் மூக்கைப் பொத்திக்கொண்டுபோகப்பண்ணும். அங்கே கோகையும் அவனுடைய எல்லாச் சேனையையும் புதைத்து, அதை ஆமோன்கோகின் பள்ளத்தாக்கு என்பார்கள். 12. இஸ்ரவேல் வம்சத்தார், தேசத்தைச் சுத்தம்பண்ணும்படிக்கு அவர்களைப் புதைத்துத்தீர ஏழுமாதம் செல்லும். 13. தேசத்தின் ஜனங்களெல்லாரும் புதைத்துக்கொண்டிருப்பார்கள். நான் மகிமைப்படும் அந்நாளிலே அது அவர்களுக்குக் கீர்த்தியாக இருக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 14. தேசத்தைச் சுத்தம்பண்ணுவதற்காக அதில் கிடக்கும் மற்றப் பிரேதங்களைப் புதைக்கும்படிக்கு நித்தமும் தேசத்தில் சுற்றித்திரியும் மனுஷரையும், சுற்றித்திரிகிறவர்களோடேகூடப் புதைக்கிறவர்களையும் தெரிந்து நியமிப்பார்கள். ஏழுமாதங்கள் முடிந்தபின்பும் இவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள். 15. தேசத்தில் சுற்றித்திரிகிறவர்கள் திரிந்துகொண்டிருப்பார்கள். யாராவது ஒருவன் மனுஷனின் எலும்பைக் காணும்போது புதைக்கிறவர்கள் அதை ஆமோன்கோகுடைய பள்ளத்தாக்கிலே புதைக்குமட்டும் அதினண்டையிலே ஒரு அடையாளத்தை நாட்டுவான். 16. அந்த நகரத்துக்கு ஆமோனா என்று பெயரிடப்படும். இவ்விதமாய்த் தேசத்தைச் சுத்தம்பண்ணுவார்கள். 17. மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்துசேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள். 18. நீங்கள் பராக்கிரமசாலிகளின் மாம்சத்தைத் தின்று, பூமியினுடைய பிரபுக்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள். அவர்கள் எல்லாரும் பாசானிலே கொழுத்துப்போன ஆட்டுக்கடாக்களுக்கும், ஆட்டுக்குட்டிகளுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் காளைகளுக்கும் சமானமானவர்கள். 19. நான் உங்களுக்காகச் செய்யும் யாகத்திலே நீங்கள் திருப்தியாகுமளவும் கொழுப்பைத் தின்று, வெறியாகுமளவும் இரத்தத்தைக் குடிப்பீர்கள். 20. இவ்விதமாய் என் பந்தியிலே குதிரைகளையும், இரதவீரர்களையும், பராக்கிரமசாலிகளையும், சகல யுத்தவீரர்களையும் தின்று, திருப்தியாவீர்களென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு. 21. இவ்விதமாய் என் மகிமையை நான் புறஜாதிகளுக்குள்ளே விளங்கப்பண்ணுவேன். நான் செய்த என் நியாயத்தையும் அவர்கள்மேல் நான் வைத்த என் கையையும் எல்லா ஜாதிகளும் காண்பார்கள். 22. அன்றுமுதல் என்றும் நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று இஸ்ரவேல் வம்சத்தார் அறிந்துகொள்வார்கள். 23. இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமத்தினிமித்தமே  சிறைப்பட்டுப்போனார்கள் என்று அப்பொழுது புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள். அவர்கள் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினபடியால், என் முகத்தை நான் அவர்களுக்கு மறைத்து, அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன். அவர்கள் அனைவரும் பட்டயத்தால் விழுந்தார்கள். 24. அவர்களுடைய அசுத்தத்துக்குத்தக்கதாகவும், அவர்களுடைய மீறுதல்களுக்குத்தக்கதாகவும், நான் அவர்களுக்குச் செய்து, என் முகத்தை அவர்களுக்கு மறைத்தேன். 25. ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: 26. அவர்கள் தங்கள் அவமானத்தையும், பயப்படுத்துவார் இல்லாமல், தாங்கள் சுகமாய்த் தங்கள் தேசத்தில் குடியிருக்கும்போது எனக்கு விரோதமாய்த் தாங்கள் செய்த எல்லாத் துரோகத்தையும் சுமந்து தீர்த்தபின்பு, நான் யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பி, இஸ்ரவேல் வம்சமனைத்துக்கும் இரங்கி, என் பரிசுத்த நாமத்துக்காக வைராக்கியமாயிருப்பேன். 27. நான் அவர்களை ஜனசதளங்களிலிருந்து திரும்பிவரப்பண்ணி, அவர்களுடைய பகைஞரின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து, திரளான ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள் நான் பரிசுத்தர் என்று விளங்கும்போது, 28. தங்களைப் புறஜாதிகளிடத்தில் சிறைப்பட்டுப்போகப்பண்ணின நான் தங்களில் ஒருவரையும் அங்கே அப்புறம் வைக்காமல், தங்களைத் தங்கள் சுயதேசத்திலே திரும்பக்கூட்டிக்கொண்டுவந்தேன் என்பதினால், நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். 29. நான் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் என் ஆவியை ஊற்றினபடியினால் என் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார். (எசேக்கியேல் 39லிருந்து)
Uyiron · 14 views · 0 comments
1948ற்கு பின்னர்
26 Feb 2010 
 எசேக்கியேல் 28:25-26கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேல் வம்சத்தாரை, அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து, அவர்களால் ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது, அவர்கள் என் தாசனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள். அவர்களுடைய சுற்றுப்புறத்தாரில் அவர்களை இகழ்ந்த அனைவரிலும் நான் நியாயத்தீர்ப்புகளைச் செய்யும்போது, அவர்கள் அதிலே சுகமாய்க் குடியிருந்து, வீடுகளைக் கட்டி, திராட்சத்தோட்டங்களை நாட்டி, சுகமாய் வாழ்ந்து, நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
Uyiron · 12 views · 0 comments
இலங்கைச் சுதந்திரபூமி
26 Feb 2010 
இரும்புத்திரைக்குள்ளாக தேசத்தின் எல்லைகள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. போர்ச்சுவடுகள் அகன்றுவிட்ட நிலையில் சுதந்திர தாகங்கள் தணிக்கப்படுவதற்கும் தடைக்கற்கள் போடப்படுகின்றன. உண்மையைக்கூற யாரும் துணிவதாக இல்லை. மாபெரும் சரித்திர புத்தாக்கத்தை வேரருக்கும் கோடாரிகள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. வீண் கற்பனைகள் பலரது வாழ்வியலுக்குள் புகுந்து ஆதிக்கம் செலுத்திக்கொண்டு மேற்குலகப் பார்வையை வீணடிக்கின்றன. மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம்.. என்று மாறிவிட்டன. யாரை நம்பி முன்னேறுவது என்பதற்கு இங்குள்ள ஜனங்கள் சாட்சி பகர்கின்றனர். எதனை நம்புவது எங்கு தரிப்பது என்பதனை யாராளும் யாருக்கும் சொல்லிட இடமில்லை. சீனவுடனான பயணங்கள் சிறப்பாக பயணிக்கும் வேளையில் இந்நிய உறவுகள் பூப்பூக்கின்றன. ரஷாவும் தன்னாலான நம்பிக்கைகளை ஏற்படுத்தி மேற்குலகை சீண்டுகின்றன. யார் எவ்வாறாய் நடந்தாலும் த மக்கள் மெளனிக்க தலைவர்கள் இடங்கொடுத்து வரண்ட நிலத்தில் எரி தணலை காட்டுகிறார்கள். இதற்கும் மேல் பொறுமையும் காக்காதென்று ஓடி மறைகின்றது உண்மையிலும் உண்மை. இலங்கையின் சுதந்திரம் சமீபத்தில் விமர்சையாக அதிபரால் முன்னெடுக்கப்பட்டது. இது இலங்கையின் வெற்றிக்கு ஓர் அணிவகுப்பு. தமிழில் பேசிய ஜனாதிபதி தமிழ் மக்கள் மனதை வென்றெடுத்தார். வேறெந்த தலைவர்களாலும் செய்யவியலாத இன்னோர் அதிசம் இது. ஏனென்றால் முன்னாளவர்கள் தமிழை பேசவே எரிகணலாயினர். அந்த விதத்தில் எம் ஜனாதிபதி தமிழை வளர்ப்பார் என்பது சிறப்பு. இந்திய உறவுகள் இன்னும் அடங்கவில்லை என்பதை உலக நோக்கு எடுத்துக்காட்டுடிது. ஏனென்றால் ம.அரசு நேராகவும் த.அரசு மறையாகவும் இயங்கிக் கொண்டிருக்க பிளவுக்குள் விளவுபட்டு நிற்கிறது. பிளவுக்குள் பிளவுபடும் சிறந்தவர்களுக்கு உதாரணம் எம் தலைகள். பிரிந்தவருக்குள் பிரியும் அதிசயம் த.தலைகள் எடுத்துவரும் அரசியல் முன்னேற்றபாடு சரியாகத்தான் அமைகிறது பின்னேறுவதற்கு. மக்களுக்கு சேவைசெய்ய இயலாத தலைகளா தலையாட்டிகளா? எந்த த.தலை எந்த த.மகனுக்கு என்ன செய்துள்ளது? குறிப்பிட்டது விசேடமாக இ.தீவில். சுதந்திரம் பெறுவதற்கு த.தலைகள் இணைந்தால் தான் வழியுண்டு. இல்லாவிட்டால் போடா.

தப்பு தப்பா தாளம் போட்டு .. தலைகீழா போச்சு – இங்கு பேச்சுவார்த்தை மேசையெல்லாம் தரை மட்டம் ஆச்சு – தலை குனிந்த வாழ்க்கை தான் வாழணுமா – இன்னும் தலைவார பட்டணத்தான் கையேந்தணுமா?



- மாற்றாந்தாய் பிள்ளை வன்னியிலிருந்து
Admin · 7 views · 0 comments
கர்த்தரை அறிகிற அறிவு
25 Feb 2010 
சுகமாய் வாழ்வதற்கான உடன்படிக்கையானது பின்வருமாறு சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரிப்பதாகும் என்றே வேதாகமத்தில் காணப்படுகின்றது. (எரேமியா 22:16) இதுவே கர்த்தரை அறிகின்ற அறிவாக உள்ளது. சிறுமைப்பட்டவர்களுடைய நியாயத்திற்காக நாம் நிற்போமாயின் சுகமாக வாழ்வதற்கான வழி ஏற்படுகின்றது என்பதை வேதாகமம் முக்கியமாக இவ்விடத்தில் முன்வைக்கின்றது. இயேசுவானவர் கூறும் விடயத்தினையும் கவனியுங்கள். மத்தேயு 7:12ல் மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். இந்த வகையில் நாம் நீதியை பெற விரும்புகின்றவர்களானபடியினால் நீதியை பெற விரும்பும் ஏனையோரை நாம் கவனிக்க வேண்டியது அவசியமாகும். 
Uyiron · 8 views · Leave a comment
Matthew 7:13-14
25 Feb 2010 
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்.
கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது.
அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது.
அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.



மத்தேயு 7:13-14 Enter ye in at the strait gate: for wide is the gate, and broad is the way, that leadeth to destruction, and many there be which go in thereat: Because strait is the gate, and narrow is the way, which leadeth unto life, and few there be that find it.
Uyiron · 3 views · 0 comments
ஆதாம் ஏவாள் காவியம்
25 Feb 2010 
மனித வர்க்கத்தின் முதலாம் மனிதன் பேர் பெற்றான் ஆதாம் என்றுஅவனுக்குக் கிடைத்தாள் அழகிய மனைவி ஏவாள் என்றான் தான் பெற்ற அழகிக்கு! என்றும் போல் இன்பம் சுரந்ததுஅவர்கள் வாழ்வு சமாதானமாய் அமைந்ததுஉலகில் பரலோக சுகங்கள் தாராளம் கிடைத்ததுஅதிலே அவர்தம் வாழ்வு சுகமாய் கரைந்தது ஆதாம் பெற்ற கட்டளை மனைவியும் அறிந்தனள்ஆதாமைப் போல் இறைவன் முன் மாசற்று இருந்தனள்கணவன் புகழை மங்கிடவிடா மங்கையாய் திகழ்ந்தனள்அதனால் இறைவனின் கட்டளை மதித்தனள் சிறப்பாய் அண்டம் எங்கும் சமாதானம் கொடுங்கோல் இல்லா நல்லாட்சிவைகுண்டமும் வாழ்த்திப் பாடியது மானிடரை நினைத்து பரமனும் மகிழ்ந்தான்  ஆணை படைத்ததும் பெண்ணையும் படைத்தார்ஆணுக்கு பெண்ணென்று சட்டமும் வைத்தார்உலகம் படைப்பில் ஆறாம் நாளிலே இவர்களும் வாழ்வில் இணைந்தும் கொண்டனர் ஆதாமை உருவாக்க மண்ணை அளந்தார்ஏவாளை காட்டிட எலும்பினை உடைத்தார்ஜீவராசிகளுக்கு பேர் சூட்டியதுமவனே தன் துணைக்கு ஏற்ற பெயர் வைத்ததும் அவனே இறைவன் உலவும் தோட்டத்தில்வைத்தார் இவர்களை கவனிக்கஅந்தோ நடுவில் உள்ள மரம்தொடாதீர் ஒருபோதும் இறப்புவரும் ஆணுக்கு கட்டளை கொடுத்ததும் முதலில்ஆறாம் நாள் படைப்பில் படைத்ததும் முதலில் தனிமையாய் இருப்பதே நல்லதல்லதுணையொன்றை தருவதே அடுத்த வேலை தூங்கிய நேரத்தில் வந்தவள் பெண்ணேதூரமாய் போனவள் தூரத்தில் நின்றாள்சர்ப்பம் நயமாய் ஆவலாய் சொன்னதால்இமைக்கும் நேரத்தில் பழத்தையும் உண்டனள் இறைவனை தூற்றிட்ட சாத்தானின் தந்திரம்மானிடரை கவிழ்த்திட மாறியது சர்ப்பமாய்சொன்னதை மாற்றி வீண் கதை அளந்ததுநம்பவே முடியாததை நம்பவே வைத்தது நடுவிலே கனிந்த மரம் அதுவோ சாப மரம்காண்போரை மயக்கிடும் கனியோ அதன் வரம்சாத்தான் சர்ப்பமாய் சுழன்ற மரம் இந்நாள் வரைக்கும் காணா மரம் ஆதாமைக் காணவில்லை அருகில்கண்டிக்கவும் யாருமில்லை அந்நேரத்தில்சர்ப்பம் ஆசையை தூண்டி நின்றதால்நீட்டி பறித்தாள் அந்த சிவந்த கனி கைகளில் சுவையை காட்டும் அந்த பழம்பார்வைக்கு இதமாய் தெரியும் நறுமணம்ஆசை மேலெழுந்ததால் கட்டளை மறந்தாள்நாயகன் பாசத்தை அறவே துறந்தாள் பிந்தி வந்தவள் வழியில் தவறிட சர்ப்பம்சந்தர்ப்பம் பார்த்தது சரியாய் அமைந்ததுஐயகோ பாவம் கண்களை மறைத்ததுதேடினாள் கணவனை எங்கோ என்று கரங்களில் பாதியும் வாயில் வழியும் சாறுமாகஓடினாள் வாழ்வில் முதலாம் பாவத்தின் விளைவுசர்ப்பம் வாய்விட்டு சிரித்ததுகேட்டு நடுங்கினாள்ஐயகோ எனக்கு நடந்தது என்ன? அலறினாள் பாவத்தின் கோரம் உடலில் தைத்ததுஉள்ளம் சுக்கு நூறாய் போனதுதுணையை விட்டு துரோகியை நம்பினேன்எல்லாமே முடிந்தது. இனி.. கணவன் அறியவில்லை நடந்த கூத்லதசர்ப்பத்தின் வஞ்சனை ஏவாளின் பார்வையில்கொடுத்தாள் பழத்தை நீட்டினாள் புகட்டினாள்ஆசை மனனவி ஊட்ட அவனும் தடுக்கவில்லை படைத்தவரை விடவும் படைப்பு முக்கியமா?பழத்தின் இச்சையால் படைத்தவரை கைவிடாதேகட்டளையை விடவும் முகஸ்துதி முக்கியமா?பொய் வசனிப்பில் துணையின் கண்டிப்பை மறந்திடாதே பாவஞ் செய்வது பெருந் தவறுபாவத்தை மறைப்பது அதனிலும் கொடிதுபாவியாய் வாழ்வது உன் தவறுபாவத்திலே மரிப்பது நரகத்தின் பிடிவிறாந்து பெற்ற கட்டளை மறந்திட்ட மானிடாசந்தர்ப்பம் இனியும் கிடைத்திட மாட்டாஇரண்டாம் ஆதாம் சிலுவையில் தொங்கினார்பாவம் கழுவுவோர் விரையுங்கள் சிலுவையின் அண்டையில் பாவம் போக்கிடும் இயேசுவின் இரத்தம்கல்வாரி மலையில் காணலாம் வாரீர்இன்றே வேண்டிடும் பாவியின் பாவத்தை நொடியில் நீக்கியே சுகத்தை தருவார் சாத்தான் தடுப்பான் பாவத்தை கூட்டுவான்குழியில் தள்ளுவான் மானத்தை வாங்குவான்ஆசை காட்டுவான் இச்சை காட்டுவான்உலகத்தை தந்து உன்னையே கெடுப்பான் சாத்தானின் தலையை சிலுவையில் நசுக்கிவெற்றியை ஈட்டி நமக்குத் தந்தார் நம் இயேசுக் கிறிஸ்துவெற்றி பெற்றதால் உனக்கு நித்தியஜீவனும் உண்டுபரலோகம் செல்ல அதுவே உன் பாஸ்போட்
Uyiron · 24 views · Leave a comment
தேவனின் குமாரன்
10 Feb 2010 
தேவனின் குமாரன் பேர் இயேசு..
நேசர் கிறிஸ்து எம் உயிருக்கு நேர்... உயிருக்கு நேர்...

தேவனின் குமாரன் பேர் இயேசு..
நேசர் கிறிஸ்து எம் உயிருக்கு நேர்... உயிருக்கு நேர்...

தேவனின் குமாரன் பேர் இயேசு..
நேசர் கிறிஸ்து எம் உயிருக்கு நேர்... உயிருக்கு நேர்...


தேவனின் குமாரன் பேர் இயேசு..
நேசர் கிறிஸ்து எம் உயிருக்கு நேர்... உயிருக்கு நேர்...


தேவனின் குமாரன் பேர் இயேசு..
நேசர் கிறிஸ்து எம் உயிருக்கு நேர்... உயிருக்கு நேர்...
Uyiron · 88 views · 0 comments
"Put on the whole armour of God, that ye may be able to stand against the wiles of the devil. For we wrestle not against flesh and blood, but against principalities, against powers, against the rulers of the darkness of this world, against spiritual
08 Jan 2010 
Ephesians 6:11-13

Http://tamilchristian.tk
Uyiron · 15 views · 0 comments
headline changed
06 Jan 2010 
Click HOME http://TAMILCHRISTIAN.TK



Click HOME http://TAMILCHRISTIAN.TK



Click HOME http://TAMILCHRISTIAN.TK



Click HOME http://TAMILCHRISTIAN.TK


Uyiron · 29 views · 0 comments
HAPPY CHRISTMAS
24 Dec 2009 
CHRISTMAS WISHES

Lipni · 213 views · 0 comments
1 தீமோத்தேயு 6
24 Dec 2009 


    1. தேவனுடைய நாமமும் உபதேசமும் தூஷிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் யாவரும் தங்கள் எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ளக்கடவர்கள்.

    2. விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்கள் எஜமான்கள் சகோதரராயிருக்கிறதினாலே அவர்களை அசட்டைபண்ணாமல், நல்வேலையின் பலனைப் பெற்றுக்கொள்ளுகிற அவர்கள் விசுவாசிகளும் பிரியருமாயிருக்கிறபடியால், அவர்களுக்கு அதிகமாய் ஊழியஞ் செய்யக்கடவர்கள். இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு.

    3. ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப்போதிக்கிறவனானால்,

    4. அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான். அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,

    5. கெட்டசிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும். இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.

    6. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

    7. உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும்கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.

    1 Timothy 6

    1. Let as many servants as are under the yoke count their own masters worthy of all honour, that the name of God and his doctrine be not blasphemed.

    2. And they that have believing masters, let them not despise them, because they are brethren; but rather do them service, because they are faithful and beloved, partakers of the benefit. These things teach and exhort.

    3. If any man teach otherwise, and consent not to wholesome words, even the words of our Lord Jesus Christ, and to the doctrine which is according to godliness;

    4. He is proud, knowing nothing, but doting about questions and strifes of words, whereof cometh envy, strife, railings, evil surmisings,

    5. Perverse disputings of men of corrupt minds, and destitute of the truth, supposing that gain is godliness: from such withdraw thyself.

    6. But godliness with contentment is great gain.

7. For we brought nothing into this world, and it is certain we can carry nothing out.
Admin · 82 views · 0 comments
சங்கீதம் 72
17 Dec 2009 


    1. தேவனே,  ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.

      2. அவர் உம்முடைய ஜனங்களை  நீதியோடும், உம்முடைய ஏழைகளை  நியாயத்தோடும் விசாரிப்பார்.

      3. பர்வதங்கள் ஜனத்திற்குச்  சமாதானத்தைத் தரும், மேடுகள்  நீதியின் விளைவோடிருக்கும்.

      4. ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.

      5. சூரியனும் சந்திரனுமுள்ளமட்டும், அவர்கள் உமக்குத் தலைமுறை  தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.

      6. புல்லறுப்புண்ட வெளியின்மேல்  பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும்  தூறலைப்போலவும் இறங்குவார்.

      7. அவருடைய நாட்களில் நீதிமான்  செழிப்பான். சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.

       Psalm 72

    1. < A Psalm for Solomon.> Give the king thy judgments, O God, and thy righteousness unto the king's son.

        2. He shall judge thy people with righteousness, and thy poor with judgment.

        3. The mountains shall bring peace to the people, and the little hills, by righteousness.

        4. He shall judge the poor of the people, he shall save the children of the needy, and shall break in pieces the oppressor.

        5. They shall fear thee as long as the sun and moon endure, throughout all generations.

        6. He shall come down like rain upon the mown grass: as showers  that water the earth.

    7. In his days shall the righteous flourish; and abundance of peace so long as the moon endureth.

Admin · 41 views · 0 comments
நீதிமொழிகள் 26
10 Dec 2009 


      1. உஷ்ணகாலத்திலே உறைந்த  பனியும், அறுப்புக்காலத்திலே  மழையும் தகாததுபோல, மூடனுக்கு  மகிமை தகாது. 

      2. அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவிபறந்துபோவதுபோலும,; காரணமில்லாமலிட்;ட சாபம்  தங்காது.

      3. குதிரைக்குச் சவுக்கும்,  கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.

      4. மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி  மறுஉத்தரவு கொடாதே. கொடுத்தால் நீயும் அவனைப்போலாவாய்.

      5. மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி  மறுஉத்தரவு கொடு. கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.

      6. மூடன் கையிலே செய்தி  அனுப்புகிறவன் தன் கால்களையே  தறித்துக்கொண்டு நஷ்டத்தை  அடைகிறான்.

      7. நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி  நடக்கும், அப்படியே மூடரின்  வாயிலுள்ள உவமைச்சொல்லும்  குந்தும்.

      8. மூடனுக்குக் கனத்தைக்  கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போலிப்பான்.

      9. மூடன் வாயில் அகப்பட்ட  பழமொழி வெறியன் கையில்  அகப்பட்ட முள்ளு.

    10. பெலத்தவன்  அனைவரையும் நோகப்பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான,  மீறி நடக்கிறவர்களையும்  வேலைகொள்ளுகிறான்.

    11. நாயானது  தான் கக்கினதைத் தின்னும்படி  திரும்புவதுபோல, மூடனும்  தன் மூடத்தனத்;துக்குத் திரும்புகிறான்.

    12. தன்  பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக்  கண்டாயானால், அவனைப்பார்க்கிலும்  மூடனைக்குறித்து அதிக  நம்பிக்கையாயிருக்கலாம்.

       Proverbs 26

    1. As snow in summer, and as rain in harvest, so honour is not seemly for a fool.

        2. As the bird by wandering, as the swallow by flying, so the curse causeless shall not come.

        3. A whip for the horse, a bridle for the ass, and a rod for the fool's back.

        4. Answer not a fool according to his folly, lest thou also be like unto him.

        5. Answer a fool according to his folly, lest he be wise in his own conceit.

        6. He that sendeth a message by the hand of a fool cutteth off the feet,  and drinketh damage.

        7. The legs of the lame are not equal: so  is a parable in the mouth of fools.

        8. As he that bindeth a stone in a sling, so  is he that giveth honour to a fool.

        9.  As a thorn goeth up into the hand of a drunkard, so  is a parable in the mouth of fools.

       10. The great  God that formed all  things both rewardeth the fool, and rewardeth transgressors.

       11. As a dog returneth to his vomit,  so a fool returneth to his folly.

   12. Seest thou a man wise in his own conceit?  there is more hope of a fool than of him.
Admin · 50 views · 0 comments
எசேக்கியேல் 17
03 Dec 2009 


    1. கர்த்தருடைய  வார்த்தை எனக்கு உண்டாகி,  அவர்:

      2. மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல்  வம்சத்தாருக்கு ஒரு விடுகதையையும்  உவமையையும்கூறி, சொல்லவேண்டியது  என்னவென்றால்:

      3. கர்த்தராகிய ஆண்டவர்  சொல்லுகிறார், பெரிய செட்டைகளையும்  நீளமான இறகுகளையும் உடையதும், பலவருணமான இறகுகளால் நிறைந்ததுமாகிய ஒரு பெரிய கழுகு லீபனோனில் வந்து, ஒரு கேதுருவின் நுனிக்கிளையைப் பிடித்து,

      4. அதின் இளங்கிளையிலுள்ள  கொழுந்துகளைக்கொய்து, அதை  வர்த்தகதேசத்துக்குக் கொண்டுபோய், அதை வர்த்தகருடைய நகரத்திலே  வைத்தது.

      5. தேசத்தின் விதையில் ஒன்றை எடுத்து, அதைப் பயிர்நிலத்திலேபோட்டு, அதை எடுத்து, மிகுந்த தண்ணீர் ஓரத்திலே பத்திரமாய் நட்டது.

      6. அது துளிர்த்து, படர்ந்து, தாழ்ந்த அடிமரமுள்ள திராட்சச்செடியாயிற்று. அதின்கொடிகள் அந்தக் கழுகுக்கு நேராகவும், அதின் வேர்கள் அதின் கீழாகவும் இருந்தன. இவ்விதமாய் அது திராட்சச்செடியாகி, கிளைகளை வீசி, கொப்புகளை விட்டது.

      7. அன்றியும் பெரிய செட்டைகளையும்  திரளான இறகுகளையும் உடைய  வேறோரு பெரிய கழுகு இருந்தது. இதோ, அது தன் நடவாகிய பாத்திகளிலிருந்து அதற்குத் தண்ணீர் பாய்ச்சும்படி இந்த திராட்சச்செடி அதற்கு நேராகத் தன் வேர்களைவிட்டு, அதற்கு நேராகத் தன் கொடிகளை வீசினது.

      8. கொப்புகளை விடுகிறதற்கும், கனியைத் தருகிறதற்கும்,  மகிமையான திராட்சச்செடியாகிறதற்கும்,  இது மிகுந்த தண்ணீர்களின்  ஓரமாகிய நல்ல நிலத்தில்  நடப்பட்டிருந்தது.

      9. இது செழிக்குமா? இது பட்டுப்போகத்தக்கதாய் ஒருவன் இதின் வேர்களைப் பிடுங்காமலும், இதின் கனியைவெட்டாமலும் இருப்பானோ? துளிர்த்த எல்லா இலைகளோடும் இது பட்டுப்போகும். இதை வேரோடே பிடுங்கும்படி ஒருவன் பலத்த புயத்தோடும் திரண்ட ஜனத்தோடும் வரத்தேவையில்லை.

    10. இதோ,  நடப்பட்ட இது செழிப்பாயிருக்குமோ? கொண்டல்காற்று இதின் பேரில் படும்போது இது வாடி உலர்ந்து போகாதோ? இது நடப்பட்ட பாத்திகளிலே வாடிப்போமென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

    Ezekiel 17

        1. And the word of the LORD came unto me, saying,

        2. Son of man, put forth a riddle, and speak a parable unto the house of Israel;

        3. And say, Thus saith the Lord GOD; A great eagle with great wings, longwinged, full of feathers, which had divers colours, came unto Lebanon, and took the highest branch of the cedar:

        4. He cropped off the top of his young twigs, and carried it into a land of traffick; he set it in a city of merchants.

        5. He took also of the seed of the land, and planted it in a fruitful field; he placed  it by great waters,  and set it  as a willow tree.

        6. And it grew, and became a spreading vine of low stature, whose branches turned toward him, and the roots thereof were under him: so it became a vine, and brought forth branches, and shot forth sprigs.

        7. There was also another great eagle with great wings and many feathers: and, behold, this vine did bend her roots toward him, and shot forth her branches toward him, that he might water it by the furrows of her plantation.

        8. It was planted in a good soil by great waters, that it might bring forth branches, and that it might bear fruit, that it might be a goodly vine.

        9. Say thou, Thus saith the Lord GOD; Shall it prosper? shall he not pull up the roots thereof, and cut off the fruit thereof, that it wither? it shall wither in all the leaves of her spring, even without great power or many people to pluck it up by the roots thereof.

       10. Yea, behold,  being planted, shall it prosper? shall it not utterly wither, when the east wind toucheth it? it shall wither in the furrows where it grew.

Admin · 53 views · 0 comments
சகரியா 6
26 Nov 2009 


    9. பின்பு  கர்த்தருடைய வார்த்தை  எனக்கு உண்டாகி, அவர்:

    10. சிறையிருப்பின்  மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து  வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து,

    11. அங்கே  அவர்கள் கையிலே வெள்ளியையும்  பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச்  செய்வித்து, யோத்சதாக்கின்  குமாரனாகிய யோசுவா என்னும்  பிரதான ஆசாரியனுடைய சிரசிலே  வைத்து,

    12. அவனோடே  சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும். அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.

    13. அவரே  கர்த்தருடைய ஆலயத்தைக்  கட்டுவார். அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார். தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார். இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.

    14. இந்தக்  கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய  ஆலயத்திலே, ஏலேமுக்கும்,  தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக.

    15. தூரத்திலுள்ளவர்கள்  வந்து கர்த்தருடைய ஆலயத்தைக்  கூட இருந்து கட்டுவார்கள். அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிந்துகொள்வீர்கள். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்டு நடந்தீர்களானால் இது நிறைவேறும் என்று சொல் என்றார்.

    Zachariah 6

    9. And the word of the LORD came unto me, saying,

       10. Take of  them of the captivity,  even of Heldai, of Tobijah, and of Jedaiah, which are come from Babylon, and come thou the same day, and go into the house of Josiah the son of Zephaniah;

       11. Then take silver and gold, and make crowns, and set  them upon the head of Joshua the son of Josedech, the high priest;

       12. And speak unto him, saying, Thus speaketh the LORD of hosts, saying, Behold the man whose name  is The BRANCH; and he shall grow up out of his place, and he shall build the temple of the LORD:

       13. Even he shall build the temple of the LORD; and he shall bear the glory, and shall sit and rule upon his throne; and he shall be a priest upon his throne: and the counsel of peace shall be between them both.

       14. And the crowns shall be to Helem, and to Tobijah, and to Jedaiah, and to Hen the son of Zephaniah, for a memorial in the temple of the LORD.

   15. And they  that are far off shall come and build in the temple of the LORD, and ye shall know that the LORD of hosts hath sent me unto you. And  this shall come to pass, if ye will diligently obey the voice of the LORD your God. 
Admin · 55 views · 0 comments
கொலோசெயர் 3
19 Nov 2009 

    1. நீங்கள்  கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.

      2. பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.

      3. ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே  தேவனுக்குள் மறைந்திருக்கிறது.

      4. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து  வெளிப்படும்போது, நீங்களும்  அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.

      5. ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான  பொருளாசை ஆகிய இவைகளைப்  பூமியில் உண்டுபண்ணுகிற  உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.

      6. இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின்  பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை  வரும்.

      7. நீங்களும் முற்காலத்தில்  அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது,  அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள்.  colossians 3

      1. If ye then be risen with Christ, seek those things which are above, where Christ sitteth on the right hand of God.

        2. Set your affection on things above, not on things on the earth.

        3. For ye are dead, and your life is hid with Christ in God.

        4. When Christ,  who is our life, shall appear, then shall ye also appear with him in glory.

        5. Mortify therefore your members which are upon the earth; fornication, uncleanness, inordinate affection, evil concupiscence, and covetousness, which is idolatry:

        6. For which things' sake the wrath of God cometh on the children of disobedience:

    7. In the which ye also walked some time, when ye lived in them.
Admin · 93 views · 0 comments
வட்டி வாங்காதே!
17 Nov 2009 

வட்டி வாங்கும் முறையை வேதாகமம் எதிர்க்கின்றது. இது ஆதிமுதலே கட்டளையிடப்பட்டிருக்கின்றது. 

வட்டி வாங்குவதை விட்டு விட கடவுள் நேரடியாகவே பேசுகின்றார். ஏனென்றால் வட்டி வாங்கும் முறையை இறைவன் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. வட்டி  கொடுப்பதையோ வட்டி வாங்குவதையோ  கடவுள் எதிர்ப்பதினால் நாம் அதனை செய்வதற்கு கூடாது. நாம் அதிலிருந்து விடுபட வேண்டும். 

யாத்-22:25 உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல  அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம். 

கர்த்தருக்கு  பயப்படும் பயமானது வட்டி  வாங்குவதை தடுக்கின்றது எனலாம். சகோதரன் கையில் வட்டி  வாங்காதிருக்கும் படி வேதாகமம் தெளிவாக தேவனுடைய சத்தத்தை கூறி அறிவிக்கின்றது. இது  வேதாகமத்தில் தேவனால் அறிவிக்கப்பட்ட கட்டளையாக இருக்கின்றது.  

லேவி-25:36 நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே  பிழைக்கும்படி செய்வாயாக. 

பணத்தை  தானியத்தை வட்டிக்கும்  பொலிசைக்கும் கொடாதிருக்கும்படி  வேதாகமத்தில் தெளிவாகவே  தேவன் கட்டளையிடுகின்றார்.  

லேவி-25:37 அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக. 

சகோதரனுக்கு வட்டி கொடுப்பதை தேவன்  விரும்பவில்லை. சகோதரனுக்கு  வட்டி கொடுக்காதே! அதனை தேவன்  ஒரு போதும் விரும்பவில்லை.  

உபா-23:19 கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக்  கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி  வாங்காயாக. 

உன் தேவனுடைய ஆசீர்வாதத்தை நீ பெற்றுக்கொள்ள வேண்டுமானால் நீ வட்டி வாங்குவதை நிறுத்த  வேண்டும் என வேதாகமம் தெளிவாக  அறியத்தருகின்றது. ஆகவே ஆசீர்வாதமா அல்லது வட்டியா தீர்மானியுங்கள்.  

உபா-23:20 அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம். நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டி வாங்காயாக. 

நெகேமியா  கூறுகின்றதாவது..

நெகே-5:10 நானும் என் சகோதரரும் என்  வேலைக்காரரும் இவ்விதமாகவா  அவர்களுக்குப் பணமும் தானியமும்  கடன்கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக. 

தாவீது  அரசன் கூறுவதாவது...

சங்-15:5 தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப்  பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும்  அசைக்கப்படுவதில்லை. 

எரேமியா தீர்க்கதரிசி கூறியதாவது...

எரே-15:10 ஐயோ! நான் அவர்களுக்கு வட்டிக்குக்  கொடுத்ததுமில்லை, அவர்கள்  எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை. 

மீண்டுமாக இறைவன் தமது தீர்க்கதரிசிகளினூடாக இஸ்ரவேல் மக்களுக்கு வட்டியை  குறித்து அறிவிக்கும் காரியங்கள்...

எசே-18:17 சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும்  பொலிசையும் வாங்காமலிருந்து  என் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.

எசே-22:12 இரத்தஞ்சிந்தும்படிக்குப் பரிதானம் வாங்கினவர்கள்  உன்னில் இருக்கிறார்கள். நீ வட்டியையும் பொலிசையையும் வாங்கி, பொருளாசையினால் உன்  அயலானுக்கு இடுக்கண் செய்து, என்னை மறந்துபோனாய் என்று  கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

வானவில்
16 Nov 2009 


மேகம் வரும்போது வானவில்
தோன்றுகின்றது.



நான் பூமிக்கு மேலாய் மேகத்தை
வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும். ஆதியாகமம் 9:14.



பூமிக்கு மேலாக எப்போது
மேகம் வருகின்றதோ அப்போது மாத்திரமே வானவில் அற்புதமாக தோன்றுகின்றது. இது தேவனுடைய
உடன்படிக்கைக்கு அடையாளமானதாகும். விஞ்ஞானிகள் மழை பெய்கின்ற போது வானவில் தோன்றுகின்றது
எனும் உண்மையை கண்டுபிடிக்க முன்னரே வேதாகமம் இதை தெளிவாக அறிவித்து விட்டது.






பாபிலோன் கவிழ்க்கப்படும்



ஏசாயா 13:19-20 ராஜ்யங்களுக்குள்
அலங்காரமும், கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும்
கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும். இனி ஒருபோதும் அதில் ஒரு வரும் குடியேறுவதுமில்லை,
தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை. அங்கே அரபியன் கூடாரம்போடுவதுமில்லை.
அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை.



பாபிலோன் இன்றைய ஈராக்கில்
இருக்கின்றது. அல்லது ஈராக்கின் பண்டைய பெயர் பாபிலோனாகும். இதை வேதாகமம் தெளிவாக அறியத்தருகின்றது.
நிச்சயம் நிறைவேற வேண்டிய காரியத்தை இவ்வாறு வேதாகமம் அறியத்தருகின்றது. ஆதியாகம காலத்தில்
சோதோம் கொமோரா எனும் இடங்கள் வானத்திலிருந்து அக்கினி இறக்கப்பட்டு முற்றுமாக எரிந்து
போனது. அதன் பின் அவ்விடம் வெறுமையானது. அது போல பாபிலோன் யாரும் குடியேராத இடமாக மாறும்
என பரிசுத்த வேதாகமம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறிவித்து விட்டது.


1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next page

Calendar

March 2010
SunMonTueWedThuFriSat
 << < > >>
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   

Christian News

Click to visit the home of unrestricted internet radio broadcasting


send gift items to Sri Lanka

Bangla, Devanagari, Gujarati, Gurmukhi, Kannada, Malayalam, Oriya, Roman(eng), Hindi, Telugu
Tamil Christian News in Sri Lanka. www.Tamilchristian.tk

ChristianShirts.net Christian and family-friendly t-shirts

தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது? UYIR UNICODE CHANGER


# Advertisements To Advertise on www.tamilchristian.tk sms +94775076775 or Email:tamilchristiantk@yahoo.co.in


# Advertisements To Advertise on www.tamilchristian.tk sms +94775076775 or Email:tamilchristiantk@yahoo.co.in


# Advertisements To Advertise on www.tamilchristian.tk sms +94775076775 or Email:tamilchristiantk@yahoo.co.in


# Advertisements To Advertise on www.tamilchristian.tk sms +94775076775 or Email:tamilchristiantk@yahoo.co.in
தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது? UYIR UNICODE CHANGER


# Advertisements To Advertise on www.tamilchristian.tk sms +94775076775 or Email:tamilchristiantk@yahoo.co.in

ChristianShirts.net Christian and family-friendly t-shirts

The Jerusalem Gift Shop Vertical 120x600

Who's Online?

Member: 0
Visitors: 2

Announce

Categories

Sri Lankan Christian News
தமிழ் நட
ஜெப விண்
Helping Hands
கிறிஸ்த&
சில பதிவ
பொழுது
தகவல் தெ
படமும் த

Choose a skin



rss Syndication